Published:Updated:

நச் கதைகள் !

நச் கதைகள் !

நச் கதைகள் !

நச் கதைகள் !

Published:Updated:

தாரிக் !

வேகம்

நச் கதைகள் !

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

##~##

மலைப் பாதையில் படு வேகமாக இறங்கிக் கொண்டிருந்தது அந்த பஸ். ஒரு பக்கம் மலையின் செங்குத்தான பாறைகள். மறுபக்கம் கைப்பிடிச் சுவரைத் தாண்டி அதல பாதாளம். ஒவ்வொரு ஹேர்பின் வளைவிலும் பயணிகள் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு உட்கார்ந்திருந்தார்கள். ''எதுக்கு இவ்ளோ வேகமா போகணும்... பள்ளத்தில் விழுந்தா யாருமே தேரமாட்டோமே'' என்று ஒரு பெருசு புலம்பியது. அப்போது... 28-வது ஹேர்பின் வளைவைத் தாண்டி பஸ் வந்தபோது, அங்கே கைப்பிடிச் சுவர் உடைந்து இருக்க, அந்த இடைவெளியில் பஸ் தடதடவென நுழைந்தது...

''மலையிலிருந்து இறங்கிட்டோம். வண்டி ஒரு பத்து நிமிஷம் நிக்கும். டீ,காபி சாப்பிட்டுக்குங்க!'' என்றார் கண்டக்டர்.

மிஸ்ஸிங் !

நச் கதைகள் !

பவித்ராவைக் காணவில்லை! ஆறாம் வகுப்பு படிக்கும் ஸ்ரீராமை அழைத்துப் போக பள்ளிக்கு வந்திருந்தார் அப்பா. அவருடன் ஐந்து வயது பவித்ராவும் வந்திருந்தாள். பள்ளிக்குள் நுழையவும் லாங் பெல் அடித்து பள்ளி விடவும் சரியாக இருந்தது. எதிரே 'ஹோ’வென கத்தியபடி ஓடிவந்த சுட்டிகள் கூட்டத்தில், அப்பாவின் பிடியிலிருந்து பவித்ரா கை நழுவிக் காணாமல் போய்விட்டாள்.

'அய்யோ! அவ்வளவு தூரம் சொல்லி கூட்டிட்டு வந்தோமே... இப்ப பவித்ராவை எங்கேன்னு போயி தேடுவேன்?’ என்று புலம்பியபடியே... தேடலானார் அப்பா. பவித்ரா எங்கும் தென்படவே இல்லை. கடைசியில் கொடிக் கம்பத்தின் அடியில் உட்கார்ந்து காத்திருந்தார். பவித்ரா சொன்னதை ஒருமுறை நினைத்துக்கொண்டார்.

''அப்பா! எங்கேயாவது வழி தவறிப் போயிட்டா அய்யோ நாம ஸ்கூலுக்கு புதுசாச்சேன்னு கலவரப்படாதீங்க. கொடிக் கம்பத்துக்கிட்டே உட்காருங்க. அண்ணனைக் கூட்டிட்டு நான் அங்கே வந்துடறேன். ஓகே?''

பாடம் !

நச் கதைகள் !

''அங்கே பாருடா! அந்த சின்னப் பையன் சாயங்காலத்திலே சுண்டல் வித்துக்கிட்டு மத்த நேரத்துல படிச்சுக்கிட்டு இருக்கான். கையிலே எவ்வளவு புக்ஸ் எடுத்துட்டுப் போறான் பாரு. அவனுக்கு இருக்கிற படிக்கிற ஆசைகூட உனக்கு இல்லையே'' என்றார் அப்பா. சோகமாக பார்த்துக்கொண்டிருந்தான் ரவி. 'அப்பா சொல்றதும் நியாயம்தான். தினமும் கஷ்டப்பட்டு சம்பாதிச்சு, அந்தக் காசுல படிக்கவும் செய்றான். நாம எந்தக் கஷ்டமும் இல்லாம வசதியா சந்தோஷமா இருக்கோம். ஆனா, படிக்க மாட்றோம். இனி நாமும் நல்லா படிக்கணும்’ என நினைத்துக்கொண்டான் ரவி.

''சீக்கிரம்டா! எல்லா பொத்தகத்தையும் தனித் தனித் தாளா பிரிச்சு சுண்டலுக்கு பொட்டலம் சுத்து. மணியாச்சு!'' என்றார் சுண்டல் பையனின் அப்பா.

ரிசல்ட் !

நச் கதைகள் !

பரீட்சை ஹால் வரை அப்பா வந்து விட்டுவிட்டுப் போனார். செந்தில் ஹால் உள்ளே போய் அமர்ந்தான். மேஜையில் விடைத் தாள் வைக்கப்பட்டிருந்தது. மணி அடித்ததும் கேள்வித் தாளைக் கொடுத்துவிட்டுப் போனார் கண்காணிப்பாளர். ஒருமுறை அதை முழுசுமாகப் பார்த்தான் செந்தில். விடைத் தாளில் பிள்ளையார் சுழியைப் போட்டுவிட்டு, கேள்வித் தாளை இன்னொரு முறை படித்தான்.

எந்தக் கேள்விக்குமே பதில் தனக்குத் தெரியாது என்பதைப் புரிந்துக்கொண்டான். பெயரும் ரோல் நம்பரும் மட்டுமே எழுதிய விடைத் தாளை கண்காணிப்பாளரிடம் கொடுத்துவிட்டு வெளியே வந்த செந்தில் தன் அப்பாவிடம், ''சரியா வராதுப்பா! ரொம்ப டஃப்பா இருக்கு. நான் பாஸ் ஆவறது கஷ்டம்தான்'' என்றான்.

''சரி விடுடா! என் பேரனுக்கு இந்த ஸ்கூல்லே அட்மிஷன் வாய்க்கலை. வேற ஸ்கூல்ல ட்ரை பண்ணுவோம்!'' என்றார் அப்பா.

பிடி !

நச் கதைகள் !

''வலை போட வர்றாங்கம்மா'' என்று பதறி ஓடிவந்தது சின்ன மீன். ''எதுக்கு பயப்படறே? தைரியமா போயி அதுலே மாட்டிக்கோ'' என்ற அங்கிள் மீனை முறைத்தது சின்ன மீன். ''அங்கிள் சொல்றது சரிதான் சின்னு. பயப்படாதே! என் கூடவே வா... போயி வலையிலே மாட்டிக்குவோம்'' என்றது அம்மா மீன்.

அவர்களோடு அங்கிள் மீனும் சேர்ந்துகொள்ள, மூவருமாக வலை அருகே போனார்கள்.

ஒரே அள்ளாக மூன்று மீனையும் வலையில் தூக்கிய கோபி, அவைகளை பக்கெட் தண்ணீரில் போட்டுவிட்டு, மீன் தொட்டியைக் கழுவப் போனான்.

விபத்து !

நச் கதைகள் !

கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடியது அந்த மணல் லாரி, டிரைவர் எவ்வளவோ லாரியை நிறுத்த முயன்றும் முடியவில்லை. சாலை ஓரம் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பானைகளை எல்லாம் உடைத்து நாசம் செய்தபடி பக்கத்தில் இருந்த குடிசைக்குள் புகுந்தது. உள்ளே இருந்த பாத்திரங்கள் எல்லாம் பறக்க, உருக்குலைந்து சரிந்தது குடிசை. உள்ளே உடம்பு சரியில்லாமல் படுத்துக் கிடந்த வயசான பெரியவரை மோதி நின்றது லாரி. அக்கம்பக்கத்து குடிசைகளில் இருந்தவர்கள் எல்லோரும் அலறியடித்து கூப்பாடு போட்டப்படி ஓடிவந்தார்கள்...

''கட்!'' என்று டைரக்டர் சொல்ல, அந்த ஷாட் ஓகே ஆனது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism