Published:Updated:

சொல்வனம்!

சொல்வனம்!

சொல்வனம்!

சொல்வனம்!

Published:Updated:
##~##

அடையாளம்

 ட்டாந்தரையாகிவிட்ட
என் வழித்தடம்
மட்டைப்பந்து விளையாட்டுக்கான
ஆடுகளமாகிவிட்டது

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சாக்கடை நிரம்பிய
என் வயிற்றில்
மல்லாந்திருக்கின்றன
ஆகாயத்தாமரைகள்

தொழுநோயாய் தேங்கிய
கழிவுநீர்க் குட்டையில் காணலாம்
பன்றிகளின் திருவிளையாடலை

மழைத் தூவலுக்கு
திட்டுகளில் பசுமை காட்டும்
குறும்புற்களைச் சுரண்டியவாறு
கால்நடைகள்

கட்டணம் இல்லா
திறந்தவெளிக் கழிப்பிடமாகிறேன்
வசதியற்றவர்க்கு

கொடுங்கோன்மை சுமக்கும்
கர்த்தரைப் போல
நகரத்து அத்தனைக் கழிவுகளையும்
என்னிரு கரைக் கரங்களில்
ஏந்தச் செய்த உங்களுக்காக
எந்த ஆண்டவனிடம் நான்
பாவ மன்னிப்புக் கேட்பது?

அதிநவீன நாகரிகவான்களே
இறுதியாக ஒன்று
என்னை நதியென்று சொல்வதற்கு
வேறேதும் சுவடு உண்டா
நீங்கள் கடந்துகொண்டு இருக்கும்
இந்தப் பாலத்தைத் தவிர.

- செழியரசு

சொல்வனம்!

அக்காவுக்குக் கல்யாணம்

ம்மாவுக்கும்
அவரைப் பிடிக்கவில்லை
அப்பாவுக்கும்கூட
அரை மனதுதான்
அவரைப் பார்த்தாலே
எனக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை
இவளுக்கு முப்பத்துமூன்றாகிவிட்டது
ஜாதகமும் பொருந்திவிட்டது
என்ன செய்வது இப்போது?
அக்காவுக்கு
அத்தானைப் பிடிக்கவே இல்லை!

- கு.விநாயக மூர்த்தி

பிதற்றல்

கிரப்படாத நேசம்
துயர் என்றாள் தோழி
தூய்மையானது என்றேன் நான்

பகிரப்படாத நேசம்
வலி என்றாள் தோழி
வலிமை என்றேன் நான்

அழுதுகொண்டிருந்தது
தூரமாய் நேசம்
நாங்கள்
பிதற்றிக்கொண்டே இருந்தோம்!

- நாச்சியாள்

சரித்திரக் கல்லறைகள்

சாலைகளும் தெருக்களும்
சரித்திரக் கல்லறைகள்
என்றொரு வாதம்
முன் வைக்கப்பட்டது

நிரூபணத்துக்காக
ஒரு சாலையின் நடுவே
சில அடிகள்
ஆழம் தோண்டியபோது
முன்னோர்களின்
மட்கிய கால் தடங்களோடு
மரணித்துக்கிடந்தது
ஓர் ஒற்றையடிப் பாதை!

- நா.அருள்ஜோதியன்

சொல்வனம்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism