Published:Updated:

விக்கி சைலா ஜீபா !

விக்கி சைலா ஜீபா !

விக்கி சைலா ஜீபா !

விக்கி சைலா ஜீபா !

Published:Updated:
விக்கி சைலா ஜீபா !

அந்தத் தெருவே கூட்டம் அலைமோதிக் கொண்டு இருந்தது. ஆங்காங்கே போலீஸ் அதிகாரிகள் எல்லோரையும் கட்டுப்படுத்திக் கொண்டு இருந்தார்கள். பிரபல வைர வியாபாரி பிரமோத் ராவ் அவரது வீட்டில் படுகொலை செய்யப்பட்டு இருந்தார். வீட்டில் இருந்த பல கோடி ரூபாய் மதிப்புள்ள வைரக் கற்கள் கொள்ளை போய் இருந்தன. விக்கி, சைலா, ஜீபா மூவரும் அங்கே போனபோது, அவர்களால் லேசில் அந்த வீட்டுக்குள்ப் போக முடியவில்லை. போலீஸார் உதவி செய்ய, ஒருவழியாக வீட்டுக்குள் நுழைந்தார்கள். பிரமோத்தின் பன்னிரெண்டு வயது மகன் பிரகாஷ், ''அப்பா எப்பவும் போல அவரோட ரூம்லே ஆபீஸ் கணக்குகளை சரி  பார்த்துட்டு இருந்தாரு. ரொம்ப லேட்டாயிட்டதாலே நாங்க எங்க ரூம்லே படுத்துட்டோம். காலைலே காபி கொடுக்க அம்மா போனப்போ இறந்து கிடந்தாரு'' என்றான் அழுகையுடன்.

##~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''ராத்திரி யாரோடவோ அவரு ரொம்ப நேரமா வாக்குவாதம் செஞ்சிட்டு இருந்தாரு. ஏதோ கணக்கு தப்பா போட்டுட்டதா கோபப்பட்டாரு'' என்று அவரது மனைவி, ஜீபாவிடம் சொன்னார்.  அருகில் இருந்த போலீஸ் அதிகாரி, ''ஜீபா, நாங்க செக் பண்ணதுலே சுனில்ஜி என்கிற பெயருக்குதான் இவரு ரொம்ப நேரம் பேசி இருக்காரு. கடைசியா பேசின காலும் அதுதான். ராத்திரி ரெண்டரை மணிக்கு இருபது நிமிஷம் பேசி இருக்காரு. இவர் அநேகமா காலை நாலரை மணிக்கு இறந்திருக் கலாம்னு டாக்டர்கள் சொல்றாங்க'' என்றார்.

''யாரு அங்கிள் அந்த சுனில்ஜி? எதுவும் தெரிஞ்சதா?'' என்று கேட்டாள் சைலா. ''பார்த்தோம்... அது அவரோட கேஷியர். கணக்குலே வராம நாற்பது லட்ச ரூபா செலவாகி இருக்கு. அது பத்தின டிஸ்கஷன்தான் நடந்திருக்கு'' என்றவர், ''ஆரம்பத்தில் அவர் மேலே எங்களுக்கும் சந்தேகம் வந்தது. ஆனா, அவர் ரொம்ப க்ளியரா விளக்கினாரு. சொல்லப்போனா, அவரு இங்கேயேதான் எல்லா வேலையும் செஞ்சுட்டு இருக்காரு'' என்றார் அதிகாரி.

பிரமோத் இருந்த அறைக்குள் சென்றார்கள் மூவரும். அவர்களுடன் பிரகாஷ§ம் வந்தான். அறையை ஜீபா நோட்டமிட்டது. அங்கே காவலுக்கு போடப்பட்டிருந்த கான்ஸ்டபிள், 'பொருட்கள் எதையும் யாரும் தொடவில்லை’ என்பதாகச் சொன்னார். கட்டிலில் படுத்தபடி இறந்து கிடந்தார் பிரமோத். வாயிலிருந்து ரத்தம் வழிந்து இருந்தது. கை இடுக்கில் தேங்காய் நாரும் பஞ்சும் கலந்த மாதிரி ஏதோ கொத்தாக இருந்ததை ஜீபா கவனித்தது. கட்டில் பக்கத்திலேயே கம்ப்யூட்டர் இருந்தது. அதன் மானிட்டரில் 'என் சாவுக்கு யாரும் காரணம் இல்லை. வியாபாரத்தில் பெரும் நஷ்டம்’ என்ற வரிகள் இருந்தன. டேபிளில், காலியான விஷ பாட்டில் ஒன்று கிடந்தது. கொலை செய்ய வந்தவர்கள் பிரமோத், தற்கொலை செய்துகொண்டதைப் போல ஜோடிக்க நினைத்து இருப்பது வெட்ட வெளிச்சமாகத் தெரிந்தது.

விக்கி சைலா ஜீபா !

டேபிள் அடியில் குனிந்து பார்த்தது ஜீபா. விக்கியும் சைலாவும் என்னவென்று கவனித்தார்கள்... ''இந்த விஷ பாட்டிலை கவர் எதிலாவது கொண்டு வந்திருப்பாங்களோன்னு சந்தேகம்'' என்றது ஜீபா. உடனே சைலா சொன்னாள், ''யூ ஆர் ரைட் ஜீபா! அதோ சின்ன சைஸ்லே ஒரு பிரவுன் கவர் இருக்கு'' என்றவள், ''எடுக்கலாமா?'' என்றாள். ''வெயிட்!'' என்ற ஜீபா, போலீஸ் அதிகாரியிடம் விஷயத்தைச் சொன்னது. கவரை எடுத்தார்கள். உள்ளே வேறு எதுவும் இல்லை. ஏதோ காகிதம் இருக்க என்னவென்று பார்த்தார் அதிகாரி. அது ஒரு பில். ''என்ன வாங்கி இருக்காங்க... இந்த விஷ பாட்டிலையா?'' என்று கேட்டான் விக்கி. ''இல்லை, இது டி-ஷர்ட், ட்ராக்ஸ், கேன்வாஸ் ஷூஸ், பெல்ட்... இந்த நாலும் வாங்கினதுக்கான பில்'' என்றாள் சைலா. ''அப்பாவுக்கு டி-ஷர்ட் பிடிக்காது. ஷூஸும் போட மாட்டாரு'' என்றான் பிரகாஷ். ஜீபா அந்த பில்லை வாங்கிப் பார்த்தது. பக்கத்தில் இருக்கிற பிரமாண்டமான மால் ஒன்றினுள் இருக்கிற கடையில் வாங்கி இருக்கிறார்கள். எப்போது வாங்கப்பட்டிருக்கிறது என்பதைப் பார்த்தது ஜீபா. முந்தைய நாள் மாலை ஏழரை மணி என்பதை உறுதி செய்தது. சில குறிப்புகளை எடுத்துக் கொண்டது. திரும்ப பழையபடி பில்லை கவரில் வைத்து, எடுத்த இடத்திலேயே வைத்தார்கள்.

''விக்கி, நீ இங்கேயே இரு. இந்த ரூமுக்கு யார் வந்தாலும் நோட் பண்ணு. சந்தேகம் வர்ற மாதிரி என்ன நடந்தாலும் எனக்கு உடனே இன்ஃபாம் பண்ணு. ஒரு சின்ன வேலையை முடிச்சுட்டு வந்துடறோம்'' என்ற ஜீபா, சைலாவுடன் கிளம்பியது. பிரகாஷை அவர்களுடன் அழைத்துக் கொண்டார்கள்.

மூவரும் நேராக அந்த பிரமாண்டமான மாலுக்குள் நுழைந்தார்கள். சமையல் பொருட்கள், பாத்திரங்கள், மேஜை, நாற்காலி, மருந்து, துணிகள், எலக்ட்ரானிக் பொருட்கள் என எல்லாமே கிடைக்கிற ஒரு சூப்பர் மார்க்கெட் அது. நேராக கஸ்டமர் சர்வீஸ் ஆட்களிடம் சென்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டது ஜீபா. ''சொல்லு ஜீபா! என்ன உதவி வேணும்?'' என்றார்கள் அந்த ஊழியர்கள். ''ஒரு கேஸ் விஷயமா நாங்க ஒரு நபரைத் தேடறோம். அவன் இங்கே சில பொருட்கள் வாங்கி இருக்கான். உங்க கடையிலே இருக்கிற சிசி கேமராவில் நிச்சயம் அவன் பதிவாகி இருப்பான். அதை நான் பார்க்கணும்'' என்றது ஜீபா.

சிசி கேமராவில் பதிவான காட்சிகளை ஜீபாவுக்குக் காட்டினார்கள். பில்லில் இருந்த டைமிங்கை வைத்து கேஷ் கவுண்டரில் அந்த குறிப்பிட்ட பில்லை யார் வாங்குகிறார்கள் என்பதை முதலில் பார்த்தார்கள். குறிப்பிட்ட பில்லுக்காக ஒரு இளைஞன் நின்றிருக்கிறான்.   ''இவரு எங்க தூரத்துச் சொந்தம். நாங்க இவரை ஷ்யாம் மாமான்னு கூப்பிடுவோம். எப்பவாச்சும் வீட்டுக்கு வருவாரு அப்பாகிட்டே செலவுக்கு பணம் வாங்கிட்டுப் போவாரு. நேத்து சாயங்காலம்கூட வீட்டுக்கு வந்து பணம் வாங்கிட்டுப் போனாரு'' என்றான் பிரகாஷ். ''அப்போ மணி என்ன இருக்கும்?'' என்று கேட்டாள் சைலா. ''நாங்க ஸ்கூல் விட்டு வந்த நேரம்... ஸோ! நாலரை மணி இருக்கும். அடுத்த அரை மணி நேரத்திலே கிளம்பிட்டாரு'' என்றான் பிரகாஷ்.

''ஆக, அதுக்குப் பிறகுதான் இங்கே வந்திருக்கான்'' என்றபடி ஜீபாவைப் பார்த்தாள் சைலா. 'ஆமாம்’ என்பது போல தலையை ஆட்டியது ஜீபா. வீடியோ காட்சியை ஓட விட்டார்கள். பில் கவுண்டருக்கு வந்த அந்த இளைஞனின் கையில் ஒரு கேரி பேக் இருந்தது. அதே கடையின் பெயர் பொறித்த அந்த கேரி பேகின் வாய்ப் பகுதி இறுக்கிக் கட்டி சீல் செய்யப்பட்டு இருந்தது. ''இவன் ஏற்கனவே ஏதோ வாங்கி பில் போட்டுட்டு திரும்ப வாங்க வந்திருக்கான்'' என்றார் வீடியோவைப் போட்டுக் காட்டிக்கொண்டிருந்த ஊழியர். ''இந்த ஆள் என்ன என்ன செய்றான்னு இன்னும் கொஞ்சம் ஆரம்பத்தில் பார்க்கணும்'' என்றது ஜீபா.

அந்தக் கடைக்கு வந்த பலதரப்பட்ட மனிதர்களைப் பதிவு செய்திருந்த அந்த டேப்பில் ஷ்யாம் மாமாவை ரொம்ப கணக்குப் போட்டு கணக்குப் போட்டுத் தேடினார்கள் ஊழியர்கள். ஷியாம் முதலில் பச்சைக் கலர் கோடு போட்ட டி-ஷர்ட் ஒன்றை எடுக்கிறான். அப்போதே அவன் கையில் அந்த சீல் செய்த பேக் இருக்கிறது. பிறகு செருப்புகள் இருக்கிற இடத்துக்குச் செல்கிறான். அங்கே கேன்வாஸ் ஷூக்களை எடுக்கிறான். அங்கிருந்து கேஷ் கவுண்டருக்கு வருகிறான். வழியில் துணிகள் ஏரியாவில் ட்ராக்ஸ் தொங்குவதைப் பார்க்கிறான். அதில் ஒன்றை எடுத்துக் கொள்கிறான். எல்லா இடத்திலுமே அவன் அந்த சீல் பேகை சர்வ ஜாக்கிரதையாக வைத்திருக்கிறான். கடைசியாக அவன் கேஷ் கவுண்டருக்கு வருகிறான்.

''இன்னும் கொஞ்சம் முன்னே போய் அவன் அந்த சீல்டு கவரில் என்ன வாங்கினான்னு பார்க்க முடியுமா?'' என்று கேட்டது ஜீபா. ''ஓ! பார்க்க முடியுமே!'' என்ற ஊழியர்கள் அதற்கு முந்தைய காட்சிகளை அலசினார்கள். ஷ்யாம், வேறொரு கேஷ் கவுண்ட்டரில் எதையோ பில் போட்டுவது காட்சியில் இருந்தது. அதற்கும் முன்னே ரீவைண்டு செய்து பார்த்தார்கள். அவன் குழந்தைகளுக்கான செக்ஷனில் ரப்பர் மாஸ்க் ஒன்றை எடுத்துக் கொண்டு இருந்தான். சிங்கத்தின் முகமும் அதன் பிடறி முடியுமாக அந்த மாஸ்க் தத்ரூபமாக இருந்தது. ஜீபாவுக்கு பிரமோத் கையில் இருந்த தேங்காய் நார்... பஞ்சு ஐட்டம் ஒரு செகண்ட் ப்ளாஷ் ஆகி மறைந்தது.

ஒரு கையில் மாஸ்க்கை எடுக்கும்போது அவனது இன்னொரு கையில் ஏதோ இருந்தது... ''அவன் கையிலே என்ன வெச்சிருக்கான் ஜீபா?'' என்று கேட்டாள் சைலா. சரியாகத் தெரியாததால் இன்னும் கொஞ்சம் ரீவைண்டு செய்து பார்த்தார்கள். எலி, கரப்பான், கரையான் ஒழிக்கிற மருந்துகள் இருக்கும் செக்ஷனில் அவன் இருந்தான். அங்கே இருந்த சின்ன சைஸ் பாட்டில் ஒன்றை எடுத்தான்.

''நான் நினைச்சேன்... விஷம்! பிரகாஷ் அப்பா ரூமில் நாம பார்த்த அதே விஷ பாட்டில்! சரி, கிளம்புவோம்!'' என்றது ஜீபா. ஊழியர்களுக்கு நன்றி சொல்லிவிட்டு மூவரும் புறப்பட்டார்கள்.

திரும்பி வரும்போது, ''என்ன சைலா, எப்படி நடந்திருக்கும்னு யூகிக்க முடிஞ்சதா?'' என்று கேட்டது ஜீபா. ''ஏதோ ஒருமாதிரி புரியுது... ஆனா, புரியலை...'' என்று சிரித்தாள் சைலா. பிரகாஷ் கேட்டான், ''ஜீபா! ஷ்யாம் மாமா எங்க வீட்டுக்கு  வந்துபோன பிறகுதான் இங்கே வந்திருக்காரு. இங்கே எல்லாம் வாங்கறாரு. இங்கே இவர் வாங்கின விஷ பாட்டில் எப்படி வீட்டுக்கு வந்துச்சு?'' என்றதும், சைலா கத்தினாள், ''புடிச்சுட்டேன்! மாமா திரும்ப வீட்டுக்கு வந்திருக்காரு... சரியா ஜீபா?'' என்றாள். ஜீபா புன்னகைத்தபடி தலையை ஆட்டி, ''ஆமா! விடியற்  காலை நாலு மணிக்கு வந்திருக்கான். அடையாளம் தெரியாம இருக்க சிங்க முகமூடியும் டி-ஷர்ட், ட்ராக்ஸ் போட்டுட்டு வந்திருக்கான். வேலைய முடிச்சிட்டு எகிறிட்டான்'' என்றது. அப்போது ஜீபாவின் செல்போன் அலறியது...

விக்கி சைலா ஜீபா !

ஜீபா செல்போனை ஆன் செய்தது. விக்கி, ''ஜீபா! ஃபாரன்ஸிக் ஆட்கள் வந்து ரூமை அக்கு வேறா அலசிட்டாங்க. பாடியை போஸ்ட் மார்ட்டமுக்கு எடுத்துட்டுப் போறாங்க ஜீபா'' என்றான்.  

அடுத்த சில நிமிடங்களில் பிரமோத் வீட்டில் இருந்தார்கள் ஜீபாவும் சைலாவும். ''எதுவும் பேசிக்க வேண்டாம்'' என்று பிரகாஷிடம் சொல்லி இருந்தாள் சைலா. அவன் நேராக வீட்டிற்குள் சென்றான். தனது உறவினர்கள் எல்லோரையும் நோட்டம் விட்டான். கூட்டத்துக்கு நடுவே உருண்டு புரண்டு அழுதுகொண்டு இருந்தார் ஷ்யாம் மாமா.

அடுத்த சில நிமிடங்களில் விஷயங்கள் அனைத்தும் அரங்கேறின. ஷ்யாமைக் கைது செய்தது போலீஸ். வீட்டுக்கு வெளியே பதுக்கி வைத்த புது டி-ஷர்ட், ட்ராக்ஸ், ஷூ, முகமூடியை எடுத்துக் கொடுத்தான் ஷ்யாம். வைரக் கற்களையும் மீட்டது போலீஸ். ''நேத்து பணம் வாங்க வந்தப்போ, அத்தான் டேபிள்லே வைரக் கற்களை வெச்சுக்கிட்டு கணக்கு பார்த்துட்டு இருந்தாரு. பாவி நான்... வைரத்துக்கு  ஆசைப்பட்டு பண உதவி செய்ற தெய்வத்தைக் கொன்னுட்டேன்!'' என்று அழுதான் ஷ்யாம்.

''வெல்டன் ஜீபா! ஒரு சின்ன க்ளூவை வெச்சு இவ்வளவு ஃபாஸ்ட்டா குற்றவாளியைப் பிடிச் சுட்டியே... சூப்பர்!'' என்று அதிகாரிகள் எல்லோரும் பாராட்டினார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism