Published:Updated:

சொல்வனம்!

சொல்வனம்!

சொல்வனம்!

சொல்வனம்!

Published:Updated:
##~##

ராஜாவின் கவலை

வலர்கள் கூடி நிற்க
வனிதையர் சூழ்ந்து நிற்க
சேடிப் பெண்கள் சாமரம் வீச
நடனமணிகள் நாட்டியமாட
கேளிக்கையில் திளைத்திருந்தாலும்
மகாராஜாவுக்கு
மனதில் கவலை மிகுந்திருந்தது
மகளைப் பள்ளியில் சேர்க்க
சாதிச் சான்றிதழ் பெறவும்
ரேஷன் கடையில்
பொருட்கள் வாங்கவும்
ஒப்பனை கலைத்ததும்
அமைப்பாளர் தரும் சம்பளம்
போதுமானதாக இருக்குமா என்று!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

- நன்னிலம் ஜாகிர் உசேன்

சொல்லாத வார்த்தைகள்

யாரோ ஒருவரைத்

சொல்வனம்!

தூரத்துச் சொந்தமென
அறிமுகம் செய்துவைக்கிறார்
அம்மா...
தூரத்தில் இருப்பவர்கள்தான்
இப்போது வரை
சொந்தங்களாக
இருக்கிறார்களென
அம்மாவின்
சொல்லாத வார்த்தைகளில்
தெரிந்தது!

- சிவபாரதி

கையெழுத்து

டிக்காதவர் கையெழுத்து
குட்டிப் பாப்பாவின்
சுட்டிச் சாமான்போல்
உருண்டுகிடக்கிறது!

- ஃபீனிக்ஸ் நிலவன்

வாச மலர்கள்

ன் வாசனை துறந்து
இனம்புரியாத
பிறிதொரு வாசனையைச்
சூடிக்கொள்கின்றன
மரணம் நிகழ்ந்த வீட்டில்
மலர்கள்!

- மகா

மூன்றடி ஜன்னல்

கண்ணுக்கு எட்டிய தூரம் நீல வானம்
எதிரே நெடிதுயர்ந்த கோபுரம்
வண்ணப் பூச்செடிகள்
தென்னை, மாமரங்கள்
கூக்கூவும் குயில்கள்
பாய்ந்தோடும் அணில்கள்
காலை இளவெயில்
மாலை குளிர்க் காற்று
தூவும் சாரல், வட்டமாய் நிலா
வேறென்ன வேண்டும் நான் காண்பதற்கு
நன்றி முழுதும் மூன்றடி ஜன்னலுக்கு!

- எம்.ஷோபனா

சொல்வனம்!