Published:Updated:

சொல்வனம்!

ஓவியம் : ராஜ்குமார் ஸ்தபதி

சொல்வனம்!

ஓவியம் : ராஜ்குமார் ஸ்தபதி

Published:Updated:
##~##

பார்வை

 கிளி ஜோசியம் பார்க்க
உட்கார்ந்திருக்கிறேன் மகனுடன்
சிறகொடிந்த
என் வாழ்க்கை பறக்குமா
என்ற கவலையில்
சீட்டுக் கட்டையே
பார்த்திருக்கிறேன் நான்
சிறகோடு இருக்கும் கிளி
பறக்குமா என்று
கிளியையே பார்த்திருக்கிறான்
என் மகன்.

- அரிஹரசுதன்

உண்மை

ல கார்கள் தன்வசம்
வைத்திருந்தும்
நடந்து சென்றான்
பொம்மை வியாபாரி.

- காகை ஜெ. ரவிக்குமார்

பிணவறை

ன் மகன்
இல்லையென்று
உறுதியான பின்
பார்த்தவள்
அழுகை நின்றது
பார்க்கப்போகிறவளுக்கு
அழுகை
ஆரம்பித்தது.

- கவிஜி

சொல்வனம்!

விழி பேசிய வார்த்தைகள்

விடுமுறை நாட்களில்
வீட்டுக்கு வந்தால்
அக்காவைப் பார்க்க
அம்மா
அனுப்புவது வழக்கம்

நல்ல நாளுக்குக் காய்ச்ச
நாலு படி
நல்ல அரிசி

கடை மசாலாவுக்கு
ருசி குறைவு என
அரைத்ததில் பாதியும்
ஐந்நூறு ரூபாயும்

கூடவே பேத்திக்குத்
தெருவில் விற்க வந்தவனிடம்
பார்த்துப் பார்த்துப்
பேரம் பேசி எடுத்த
புத்தாடையையும்
கொடுத்து அனுப்புவாள்

அக்கா வரவேற்கும் முன்பே
ரேஷன் கடை
இலவச சேலையும்
கரும்பு வெட்டி
காய்த்த கையும்
அவள்
கஷ்டத்தைச் சொல்லி
வரவேற்கிறது

அம்மா, அப்பா
எதிர் வீட்டுத் தோழியையும்
விசாரித்தபடி

அம்மா பாப்பாவுக்கு
எடுத்துப் போட்ட
கொடியும் கொலுசும்
விளையாடப் போகும்போது
தொலைச்சிடுவானு
அவுத்துட்டேன்

கழுத்துல கெடந்த செயினு
கொக்கி போடக்
கடையில கொடுத்திருக்கு

சொல்வனம்!

மாமா இப்ப எல்லாம்
குடிச்சுட்டு அடிக்கிறதில்லை
இந்தக் காயம்
தண்ணீர்க் குழாயில்
தவறி விழுந்தது

கேட்கும் முன்பே
காரணம் சொல்வாள்
எனக்கு எதுவும்
தெரிந்துவிடக் கூடாதென்று

விடைபெறும்போது மட்டும்
இதுவரை பேசிய உதடுகள்
மௌனம் சாதிக்க
கண்கள் மட்டும்
அம்மாவிடம் எதையும்
சொல்லாதே என்று
கை கூப்பிக் கெஞ்சும்.

- கணியன் செல்வராஜ்