அலையாடும் பிரார்த்தனைகள்

ராமேஸ்வரத்துக்கும்
கச்சத்தீவுக்கும் நடுவில்
வேலப்பன் கைதான செய்தியுடன்
பேரலை ஒன்று கரை மோதியது
கொந்தளித்த குப்பம்
மந்திரி வந்து போகும் சாலையை
வழிமறித்துப் போட்டதும்
வக்கணையில் இரைந்தது வங்கக் கடல்
துக்கத்தில் கதறியழும்
வேலம்மாளின் கண்ணீரைத்
தூண்டிலிடத் தொடங்கின

தரையிறங்கிய கேமராக்கள்
அயல் தேசக் கடற்காவல்
அப்பாவை அள்ளிக்கொண்டு போனதை
அனுசுயா அக்கா சொல்லிச் செல்ல
பாண்டியாடும் நீலவேணியுள்
பிரவேசித்தது அழுகை
கண்களில் கசிந்த கண்ணீரில்
கரைந்தது கடற்கரை
அந்தக் கடற்குப்பத்தில்
நங்கூரமிட்டிருந்த ஐயமும் அதிருப்தியும்
அக்கரை தேசத்தின்
அதிபரையோ அல்லது அமைச்சரையோ
தவிக்கவிட்ட தகவல் இல்லை
உள்ளூர்க்காரனின் உறுத்தல்கூட
ஒரு சில விநாடியுள் உறைந்துபோயிருக்கலாம்
''சுறாவுக்கு எரச்சியாயிருந்தா
எஞ்சீவன் கெடந்து துடிச்சிருக்காது
சூழ்ச்சிக்காரன் வலையில
சிக்கியாத் தவிக்கணும் பாவி''
வேலம்மாள் வீசிய வாய்ச் சொல்
ஆடாமல் அசையாமல்
நிறுத்திவைத்தது அலைகளை
அவ்வொரு கணம்
வீசிய காற்றின் வேகத்துக்கு
ஈடுகொடுக்க முடியாத மாதா கோயில் மணி
டணீர் டணீரென ஒலிக்கத் துவங்கியதும்
''இம்மணியோசை
கடல் கடந்து தவமிருக்கும்
கௌதம புத்தரின் காதுகளைத்
துளைக்கச் சொல்லிப் பிரார்த்திப்போம்
வேலப்பனின் விடுதலை வேண்டி
தமிழகத்தின் நம்பிக்கையைச் சமர்ப்பிப்போம்''
என முடித்துக்கொண்டார்
கேமராமேன் வெற்றியுடன் உடனிருந்த
ஹாட் நியூஸ் செய்தியாளர்.

- கொ.மா.கோ.இளங்கோ

மலைப் பாதை

52 கொண்டை ஊசி வளைவுகள்
நேர்க் கோட்டில் வந்தது
பெயர் தெரியாச் சிறு பறவை.

- ப.உமா மகேஸ்வரி

நான் என்ன செய்யட்டும்?

பாவுப் பட்டறையில் அப்பாவுக்கு வேலை
அம்மா வாசலில் பணியாரம் சுட்டு விற்பாள்
அண்ணன் குள்ளனாகப் பிறந்ததால்
பெண் தேடி ஓய்ந்தாகிவிட்டது
அக்காவுக்கும் மாமாவுக்கும்
குடியால் நித்தமும் யுத்தம்
நேற்றுதான் கடிதத்தில் காதல் சொன்னான்
அண்ணனின் தோழன் பாண்டி
அவனுக்கு என்ன பதில் சொல்வதென்று
சத்தியமாய் தெரியவில்லை
உடனே மறுத்துவிட்டால்
கொடுத்த கடன் திரும்பக் கேட்டு
அப்பாவை நச்சரிப்பானோ?
குழப்பம்.

- பாசு.ஓவியச் செல்வன்

உங்களுக்குத் தெரியுமா டீச்சர்?

எனக்குப்
பட்டம் விட ஆசை
நாய்க்குட்டி பிடிக்கும்
பூனைக்குட்டி கொஞ்சுவேன்
ரசம் சாதம் விருப்பம்
நடனமாடத் துடிப்பேன்
பாட்டுப் பாடித் திரிவேன்
சூரியனை ரசிப்பேன்
மழை வந்தால் நனைவேன்
கொஞ்சினால் சிரிப்பேன்
மிரட்டினால் நடிப்பேன்
புரிந்தால் படிப்பேன் என்று
உங்களுக்குத் தெரியுமா டீச்சர்?

- வீரா

அலையாடும் பிரார்த்தனைகள்

ராமேஸ்வரத்துக்கும்
கச்சத்தீவுக்கும் நடுவில்
வேலப்பன் கைதான செய்தியுடன்
பேரலை ஒன்று கரை மோதியது
கொந்தளித்த குப்பம்
மந்திரி வந்து போகும் சாலையை
வழிமறித்துப் போட்டதும்
வக்கணையில் இரைந்தது வங்கக் கடல்
துக்கத்தில் கதறியழும்
வேலம்மாளின் கண்ணீரைத்
தூண்டிலிடத் தொடங்கின

தரையிறங்கிய கேமராக்கள்
அயல் தேசக் கடற்காவல்
அப்பாவை அள்ளிக்கொண்டு போனதை
அனுசுயா அக்கா சொல்லிச் செல்ல
பாண்டியாடும் நீலவேணியுள்
பிரவேசித்தது அழுகை
கண்களில் கசிந்த கண்ணீரில்
கரைந்தது கடற்கரை
அந்தக் கடற்குப்பத்தில்
நங்கூரமிட்டிருந்த ஐயமும் அதிருப்தியும்
அக்கரை தேசத்தின்
அதிபரையோ அல்லது அமைச்சரையோ
தவிக்கவிட்ட தகவல் இல்லை
உள்ளூர்க்காரனின் உறுத்தல்கூட
ஒரு சில விநாடியுள் உறைந்துபோயிருக்கலாம்
''சுறாவுக்கு எரச்சியாயிருந்தா
எஞ்சீவன் கெடந்து துடிச்சிருக்காது
சூழ்ச்சிக்காரன் வலையில
சிக்கியாத் தவிக்கணும் பாவி''
வேலம்மாள் வீசிய வாய்ச் சொல்
ஆடாமல் அசையாமல்
நிறுத்திவைத்தது அலைகளை
அவ்வொரு கணம்
வீசிய காற்றின் வேகத்துக்கு
ஈடுகொடுக்க முடியாத மாதா கோயில் மணி
டணீர் டணீரென ஒலிக்கத் துவங்கியதும்
''இம்மணியோசை
கடல் கடந்து தவமிருக்கும்
கௌதம புத்தரின் காதுகளைத்
துளைக்கச் சொல்லிப் பிரார்த்திப்போம்
வேலப்பனின் விடுதலை வேண்டி
தமிழகத்தின் நம்பிக்கையைச் சமர்ப்பிப்போம்''
என முடித்துக்கொண்டார்
கேமராமேன் வெற்றியுடன் உடனிருந்த
ஹாட் நியூஸ் செய்தியாளர்.

- கொ.மா.கோ.இளங்கோ

மலைப் பாதை

52 கொண்டை ஊசி வளைவுகள்
நேர்க் கோட்டில் வந்தது
பெயர் தெரியாச் சிறு பறவை.

- ப.உமா மகேஸ்வரி

நான் என்ன செய்யட்டும்?

பாவுப் பட்டறையில் அப்பாவுக்கு வேலை
அம்மா வாசலில் பணியாரம் சுட்டு விற்பாள்
அண்ணன் குள்ளனாகப் பிறந்ததால்
பெண் தேடி ஓய்ந்தாகிவிட்டது
அக்காவுக்கும் மாமாவுக்கும்
குடியால் நித்தமும் யுத்தம்
நேற்றுதான் கடிதத்தில் காதல் சொன்னான்
அண்ணனின் தோழன் பாண்டி
அவனுக்கு என்ன பதில் சொல்வதென்று
சத்தியமாய் தெரியவில்லை
உடனே மறுத்துவிட்டால்
கொடுத்த கடன் திரும்பக் கேட்டு
அப்பாவை நச்சரிப்பானோ?
குழப்பம்.

- பாசு.ஓவியச் செல்வன்

உங்களுக்குத் தெரியுமா டீச்சர்?

எனக்குப்
பட்டம் விட ஆசை
நாய்க்குட்டி பிடிக்கும்
பூனைக்குட்டி கொஞ்சுவேன்
ரசம் சாதம் விருப்பம்
நடனமாடத் துடிப்பேன்
பாட்டுப் பாடித் திரிவேன்
சூரியனை ரசிப்பேன்
மழை வந்தால் நனைவேன்
கொஞ்சினால் சிரிப்பேன்
மிரட்டினால் நடிப்பேன்
புரிந்தால் படிப்பேன் என்று
உங்களுக்குத் தெரியுமா டீச்சர்?

- வீரா