Published:Updated:

தேநீர் போற்றுதும்

சபிதா இப்ராஹிம்படம் : அருண் டைட்டன்

பிரீமியம் ஸ்டோரி

டலைப் பருகும் தாகம்
கொள்ளும்போதெல்லாம்
ஒரு குவளைத் தேநீர்
அருந்தித் தீர்க்கிறேன்...

நான் தயாரித்ததன்
சுவை காட்டிக்கொடுக்கும்
நீங்கள் எனக்கு
விருப்பமானவரா
அல்லாதவரா என்று...

தேநீர் போற்றுதும்

மழை வரும்போதெல்லாம்
தேநீர் அருந்த வேண்டுமென்பது
ஆசை...
தேநீர் அருந்தும்போதெல்லாம்
மழை வருமென வேண்டுவது
பேராசை...

ஒரு தேநீர்ப் பொழுதில்
சந்தித்தோம்,
அது சில்லிட்டுக்கிடக்கிறது...
ஒரு குற்றம் புரியும் முன்
ஒரு தேநீருக்கான அவகாசம்
அவசியம்...

பிறந்த குழந்தையை ஏந்துவதுபோல்
பற்றுகிறாய் இக்குவளையை
எப்படி மறுப்பது உன் காதலை?

அதோ காலியாக இருக்கும்
ஒரு ஜோடிக் குவளைகள் அறியும்
நாம் தேநீரை மட்டும்
பருகவில்லையென...

என்னுடன் தேநீர் அருந்திவிட்டு
நீ கேட்கிறாய்
இது என்ன வகை மதுவென?

இறுதிச் சடங்கின் நடுவே
வழங்கப்பட்ட தேநீரின்
சுவை அறிவது எப்படி?

உனக்கெனக் காத்திருந்த குவளை
இனி எவருடனுமான
தேநீரைப் பகிராது...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு