இத்தனை தாமதமாகவா
வருவது என ஊடினேன் -
அவனோடு சேர்ந்து இரவும் -
கை பிடித்துக் கெஞ்சுகிறது.

சுடர் விளக்கிருக்கக் கூடாதுதான்;
இரவும் இருக்க வேண்டாமென்றால் -
நாணம் புரிந்த செவிலியாய்
அவளை ஆரத் தழுவுகிறது இரவு.

காதலின் வழியாக நடந்து வந்தவன்தான்
ஆசையின் குதிரைப் பாய்ச்சலில் அவனை
ஏற்றிவிடுவது நீதான் என்றேன்.
அதிகாலையில் ஒரு நடைவண்டியோடு
காத்திருந்தது இரவு.

கூந்தல் முடிக்கும் விரல் நுனியில்
சிக்கிய ஓரிழையெனச் சுருட்டிப்
போடத்தான் ஆசை
அந்த ஊடலை.
மணல் அருவி வெளித் தள்ளும்
கரையான் புற்றைப் போல்
அதுவோ நகக் கண்களெங்கும்!

நீள் கனவுச் சிகையவிழ்த்து
சோம்பல் முறிக்கும்
அதிகாலையென அந்த நினைவு.
நிலம் சுகிக்கும் வெற்றிலைச்
சுவைத்தலென அக்கூடல்.
காமமென்பது தேகங்களின் சேர்க்கைதான்.
சிட்டிகைக் காதல் சேர்ந்தாலோ -
நல்ல சாவும்கூட.

சுனையைச் சூலுற்றிருக்கும்
சுடுமணம் காதல் நமது.
வார்த்தைகள் வேண்டாத
பெருஞ்சுகத்தில் கைகோத்துப்
பாலை கடப்போம் வா.

கை மாற்றினாலும்
கவனிக்காமல்
பாசாங்கித்தாலும்
பாலூட்டத்தான் வேண்டியதிருக்கிறது
காதலுக்கு

கால் விரல் நீவிச் சொடுக்கெடுக்கிறது காதல்
அண்ணாந்து பார்த்தபடி காத்திருக்கிறது காமம்.

தேடுதலின் சுகத்தில் முக்கி முக்கித் திளைக்கிறது காதல்
ஒரே மூச்சில் முங்கிக் குளித்துக் கரையேறுகிறது காமம்.

இத்தனை தாமதமாகவா
வருவது என ஊடினேன் -
அவனோடு சேர்ந்து இரவும் -
கை பிடித்துக் கெஞ்சுகிறது.

சுடர் விளக்கிருக்கக் கூடாதுதான்;
இரவும் இருக்க வேண்டாமென்றால் -
நாணம் புரிந்த செவிலியாய்
அவளை ஆரத் தழுவுகிறது இரவு.

காதலின் வழியாக நடந்து வந்தவன்தான்
ஆசையின் குதிரைப் பாய்ச்சலில் அவனை
ஏற்றிவிடுவது நீதான் என்றேன்.
அதிகாலையில் ஒரு நடைவண்டியோடு
காத்திருந்தது இரவு.

கூந்தல் முடிக்கும் விரல் நுனியில்
சிக்கிய ஓரிழையெனச் சுருட்டிப்
போடத்தான் ஆசை
அந்த ஊடலை.
மணல் அருவி வெளித் தள்ளும்
கரையான் புற்றைப் போல்
அதுவோ நகக் கண்களெங்கும்!

நீள் கனவுச் சிகையவிழ்த்து
சோம்பல் முறிக்கும்
அதிகாலையென அந்த நினைவு.
நிலம் சுகிக்கும் வெற்றிலைச்
சுவைத்தலென அக்கூடல்.
காமமென்பது தேகங்களின் சேர்க்கைதான்.
சிட்டிகைக் காதல் சேர்ந்தாலோ -
நல்ல சாவும்கூட.

சுனையைச் சூலுற்றிருக்கும்
சுடுமணம் காதல் நமது.
வார்த்தைகள் வேண்டாத
பெருஞ்சுகத்தில் கைகோத்துப்
பாலை கடப்போம் வா.

கை மாற்றினாலும்
கவனிக்காமல்
பாசாங்கித்தாலும்
பாலூட்டத்தான் வேண்டியதிருக்கிறது
காதலுக்கு

கால் விரல் நீவிச் சொடுக்கெடுக்கிறது காதல்
அண்ணாந்து பார்த்தபடி காத்திருக்கிறது காமம்.

தேடுதலின் சுகத்தில் முக்கி முக்கித் திளைக்கிறது காதல்
ஒரே மூச்சில் முங்கிக் குளித்துக் கரையேறுகிறது காமம்.