Published:Updated:

லிங்கூ

இயக்குனர் என்.லிங்குசாமிபடம் : அருண் டைட்டன்

லிங்கூ

இயக்குனர் என்.லிங்குசாமிபடம் : அருண் டைட்டன்

Published:Updated:
லிங்கூ

எப்போதும் குடையோடு செல்லும்
தாத்தாவின் இறுதி ஊர்வலத்தில்
நல்ல மழை.

யாரோ தெரியவில்லை
அந்த இரவு நேரப் பேருந்தின்
கடைசி இருக்கையிலிருந்து தொடர்ந்து
விசும்பல் சத்தம் வந்துகொண்டேயிருந்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தொடர்ந்து உன் பின்னால் வரும்பொழுது
கெட்ட வார்த்தையில் திட்டுகிறாய்
உனக்குத்தான் அது கெட்ட வார்த்தை.

ஒருமுறை என்னிடம்
வண்டியை நிறுத்தி வழி கேட்டாயே
அப்படியே எனக்கும்
ஒரு வழி சொல்லிவிட்டுப் போயிருக்கலாம்.

நல்லவேளை
நீ ஹெல்மெட் அணிந்துவந்தாய்
விபத்து தவிர்க்கப்பட்டது.

நீ தினமும்
பால்கனியில் அங்குமிங்கும்
நடந்தபடி படிப்பாயே
அது வரலாறு.

அந்த அடுக்குமாடிக் குடியிருப்பில்
நீ எந்த வீட்டில் இருக்கிறாய் என்பதை
கூப்பிட்டுச் சொன்னது
உன் கத்தரிப்பூ துப்பட்டா.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism