சீனாவில் இரண்டு நண்பர்கள் இருந்தார்கள். ஒருவன் யுவான். இன்னொருவன் பேசுங். மிகவும் நெருங்கிய நண்பர்களான அவர்கள், எப்போதும் சேர்ந்தே இருப்பார்கள். எங்கே சென்றாலும் ஒன்றாகத்தான் செல்வார்கள். ஒன்றாகவே உண்பார்கள்... உறங்குவார்கள்.

அப்படி இருக்கும்போது, திடீரென யுவான் நோய்வாய்ப்பட்டு இறந்துவிட்டான். நண்பனை இழந்த துயரம் பேசுங் மனதை மிகவும் பாதித்தது. அவன் இறந்த நண்பனின் சடலத்துக்கு அருகில் அமர்ந்து கதறி அழுதான். சற்று நேரத்தில் அவனும் இறந்துபோனான்.

அடுத்த நொடி ஓர் அற்புதம் நிகழ்ந்தது. அந்த இரண்டு நண்பர்களின் உடல்களும் ஒன்றிணைந்து ஓர் அதிசயப் பறவையாக மாறியது. அந்தப் பறவைக்கு ஒரே உடல். ஆனால், இரண்டு கழுத்துகளும் இரண்டு தலைகளும், நான்கு கால்களும் இருந்தன. அதன் வால், பல நிறங்களுடன் அபூர்வ அழகுடன் விளங்கியது. அந்த இரட்டைத் தலைப் பறவை காட்டுக்குப் பறந்து சென்றது.

ஒரு நாள் ஷிங்பூ என்ற ஒரு வேட்டைக்காரன் காட்டுக்கு வந்தான். அவன் வில்லுடன் பறவைகளைத் தேடி நடந்தான். அப்போது, அந்த இரட்டைத் தலைப் பறவையைக் கண்டான். அது, ஒரு மரத்தின் மீது அமர்ந்து பழங்களைக் கொத்தித் தின்றது. ஒரு தலை, தான் கொத்தி எடுத்த பழத்தைத் தின்னாமல், இன்னொரு தலைக்கு ஊட்டியது. அதுபோலவே இரண்டாவது தலையும் செய்தது. இதைக் கண்ட ஷிங்பூ மகிழ்ந்தான். அந்தப் பறவையைக் கொல்லத் தோன்றவில்லை. அவன் திரும்பிவந்து, தன் நண்பர்களிடம் காட்டில் பார்த்த அந்தப் பறவையைப் பற்றியும், இரண்டு தலைகளுக்கு இடையிலான அன்பைப் பற்றியும் வியந்து கூறினான்.

இந்தச் செய்தி அந்த நாட்டின் ராஜாவுக்கும் எட்டியது. அந்த ராஜா கொடுமையான மனம் படைத்தவன். அவன் ஷிங்பூவை அழைத்து, 'நான் அந்த விசித்திரப் பறவையைப் பார்க்க வேண்டும். நீ உடனே அதைப் பிடித்துக்கொண்டு வா!'' என்று கட்டளையிட்டான்.

ஷிங்பூ வேறு வழி இல்லாமல் காட்டுக்குச் சென்றான். வெகு நேரம் தேடிய பிறகு ஒரு மரக் கிளையில் அமர்ந்து இருந்த அந்த அதிசயப் பறவையைப் பார்த்தான். 'இறக்கையைச் சுட்டு அதைப் பிடித்துவிடலாம்!’ என்று நினைத்தான் ஷிங்பூ.

ஆனால், மிகவும் வேகமாகப் பறந்த அந்தப் பறவையை அவனால் ஒன்றும் செய்ய முடியவில்லை. அவன் ஏமாற்றத்துடன் அரண்மனைக்குச் சென்று ராஜாவிடம் விஷயத்தைச் சொன்னான்.

ராஜா அதை ஏற்றுக்கொள்ளவில்லை. ''அந்தப் பறவையை நீ எப்படியாவது பிடித்துக்கொண்டுதான் வர வேண்டும். அப்படிச் செய்தால் உனக்கு ஒரு மூட்டை வைரங்கள் தருகிறேன்!'' என்றான்.

ஷிங்பூ மீண்டும் காட்டுக்குச் சென்றான். பழங்கள் உள்ள மரத்தில் வலை விரித்துக் காத்திருந்தான். அதிசயப் பறவை அதில் சிக்கிக்கொண்டது. ஷிங்பூ அதை எடுத்துக்கொண்டு ராஜாவிடம் சென்றான். பறவையின் இரண்டு தலைகளுக்கு இடையிலான அன்பைப் பார்த்தான் ராஜா. அவனுக்கு அன்பு

என்றாலே பிடிக்காது.

'இவ்வளவு அன்புடன் இருக்கும் இந்த இரண்டு தலைகளுக்கு இடையில் சண்டை வந்தால், பார்ப்பதற்கு எவ்வளவு சுவாரஸ்யமாக இருக்கும்?’ என நினைத்தான். ''இந்த இரண்டு தலைகளுக்கும் இடையே சண்டை மூட்டிவிடுபவர்களுக்கு நாட்டில் பாதியைத் தருகிறேன்!'' என்று அறிவித்தான்.

அதை ஏற்றுக்கொண்டான் பேராசை பிடித்த ஒரு படை வீரன். பறவையைக் கூண்டில் அடைத்து, தன் வீட்டுக்கு எடுத்துச் சென்றான். எப்போதும் ஒற்றுமையுடன் இருந்த பறவையின் தலைகள், ஒரு நாளில் ஒரு முறை மட்டும் எதிர் எதிர் திசைகளில் பார்ப்பதைக் கவனித்தான். இதுதான் ஏற்ற சந்தர்ப்பம் என்று, ஒரு தலையின் பக்கத்தில் சென்று குழப்பமாக ஏதோ சொன்னான்.

படை வீரன் சென்ற பிறகு, ''அவன் என்ன சொன்னான்?'' என்று கேட்டது மற்றொரு தலை.

''எனக்குத் தெரியவில்லை!'' என்றது முதல் தலை.

படை வீரன் மறு நாளும் அப்படித்தான் செய்தான். அப்போதும் மற்றொரு தலை கேட்டது. ''அவன் உன்னிடம் என்ன சொன்னான்?''

''அவன் சொன்னது எதுவும் எனக்குப் புரியவில்லை'' என்றது முதல் தலை.

''நீ பொய் சொல்கிறாய். நீங்கள் இருவரும் சேர்ந்து என்னைக் கொல்லத் திட்டம் போடுகிறீர்கள்!'' என்றது அந்தத் தலை.

இரண்டு தலைகளும் வாக்குவாதம் செய்தன. பிறகு சண்டையிட்டுக்கொண்டன. கடைசியில் ஒரு தலை சொன்னது, ''இனி நாம் ஒரே உடலுடன் இருக்க வேண்டாம்!''

அந்தத் தலை உடம்பில் கொத்தத் தொடங்கியது. அத்துடன் அந்தப் பறவையின் உடல் இரண்டு பறவைகளாக மாறியது. படை வீரன் உடனே கூண்டுடன் அந்தப் பறவைகளை ராஜாவிடம் எடுத்துச் சென்றான். பறவைகள் சண்டையிட்டுக்கொள்வதைப் பார்த்து ராஜா ஆனந்தமாகச் சிரித்தான்.

அப்போது படை வீரன், ''ராஜாவே, நீங்கள் எனக்குத் தருவதாகச் சொன்ன பரிசைக் கொடுங்கள்!'' என்றான்.

''என்னது பரிசா? இந்த நாட்டின் பாதி வேண்டுமோ? உயிர் வேண்டும் என்றால் ஓடிவிடு!'' என்று விரட்டினான் ராஜா.

படை வீரன் துயரத்துடன் ஷிங்பூவிடம் சென்று நடந்ததைச் சொன்னான். அதைக் கேட்ட ஷிங்பூ, ''எனக்குத் தருவதாகச் சொன்ன பரிசையும் ராஜா தரவில்லை. தீய குணம் படைத்தவன் பேச்சைக் கேட்டு அன்பாக வாழ்ந்த இரண்டு உயிர்களைப் பிரித்துவிட்டோம்'' என்று வருந்தினான்.

இனி வருந்தி என்ன பயன்?