Published:Updated:

சொல்வனம்

படம் : ஆ. வின்செண்ட் பால்

##~##

இறந்தவனைப் பற்றிப் பேசுதல்

 றந்தவனைக் குறித்து
பேசத் தொடங்குகையில்
தேம்பும் உங்கள் துயரத்தை
இருக்கையிலேயே விட்டுச் செல்லுங்கள்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

புகைப்படத்துக்கான
மரியாதையின்போது
தயவுசெய்து
உங்கள் சுய முயற்சியில்
பதியனிட்ட செடியிலிருந்து
ஒரு பூவையாவது
பறித்துச் செல்லுங்கள்.

எதிர்கொள்ளும் சொற்களில்
எந்தச் சொல்லைப் பயன்படுத்துவதெனத்
தர்க்கங்களுக்கு இடம் அளித்து
பார்வையாளர்களைப்
பொய் விசும்பலுக்குத் தயார்ப்படுத்தாதீர்கள்.

அந்தக் கூட்டத்துக்கான
உங்களின் விருந்து உபசரிப்புக்குக்
கட்டாயம் தடை போடுங்கள்.

இறந்தவனின்
புகைப்படத்தைத் திறந்துவைத்து
ஒரு நிமிட மௌன அஞ்சலிக்கு
நிர்பந்திக்காதீர்கள்.

மரணத் தகவலை அச்சிடுகையில்
எதுகை மோனைச் சொற்களால்
அவனின் இருப்பைக்
கேலிக்குள்ளாக்காதீர்கள்.

குறைந்தபட்சம்
அஞ்சலிக் கூட்டத்துக்குச்
சென்று வந்ததைக் குறித்தாவது
தம்பட்டம் அடிக்காமல் இருங்கள்.

- க.அம்சப்ரியா

 ஆடிக் கொடை

சொல்வனம்

ர்லிங் தலையுடன் பானகம் ஊற்றிய
தயாநிதி அண்ணன் பட்டணம் போய்
முன்வழுக்கை ஏறிப்போக வெட்கப்பட்டு
இந்தத் திருவிழாவுக்கே வரவில்லை

 விழா கமிட்டி பேட்ஜ் தரவில்லை என
வீட்டுக்குள்ளேயே முடங்கிவிட்டார்
பாலசுப்பிரமணியம் மாமா

 ஆயிரத்தெட்டு ஆட்டுக் கழுத்தையும்
ஒரே மூச்சில் உறிஞ்சிய
பெரியசாமி பூசாரி வழிவிட்டு
படுத்த படுக்கையாகிப்போனார்

 பூக்குழி இறங்கித் தவறி விழுந்தும்
காயத்துடன் கடைசி வரை
அருளாடிய தமிழரசிக் குட்டி
காப்பு கட்டிய அன்றைக்குத்தான்
பெரிய மனுஷியாகிப்போனாள்

 வருஷாவருஷம் வந்து
வள்ளித் திருமணம் நடத்திய
ராஜபார்ட் முகம்மது சுல்பிக்
நாடகக் குழுவையே கலைத்துவிட்டார்

 போன கொடையைச் சிறப்பித்து
இப்போது இன்னும் இன்னும்
வராமல்போன அத்தனை பேரையும்
தேடிக் கூட்டி வர
கெடா ரத்தத்திலோ சாராயத்திலோ
நாட்டமின்றிக் கிளம்பிவிட்டார்
தேரடிக் கருப்பசாமி

 இந்த ஜனங்கள்
யாரைப் பார்த்துக்
கை கூப்பி நிற்கிறதெனத் தெரியவில்லை.

- கு.விநாயகமூர்த்தி

மனிதனுக்கு முன்னே...

ற்சவக் கடவுளுக்கு
உரிமை கொண்டாடிய
கூட்டத்தில்
குருதி தொட்ட
கத்தி முனையின் ஒலியும்
அரிவாளும் அரிவாளும்
மோதிப் பறக்கும் தீப்பொறியும்
கூக்குரலில் அச்சமும்
ஓலங்களின் உச்சமும்
அழுகையின் மிச்சமும்
ஒருங்கே பரவியது...
தீயென மூண்ட
திருவிழாக் கலவரத்தில்
தொலைந்துபோன நான்
உயிருக்குப் பயந்து
பிரார்த்தித்தபடியே
அரவமற்ற ஒதுக்குப்புறத்தில்
ஒளிய முற்பட்டேன்...
எனக்கு முன்னே
ஒளிந்துகொண்டிருந்தார்
கலவரத்தில்
காணாமல்போன கடவுள்.

-திருமாளம் புவனா நித்திஷ்

ஆடுகளம்

ற்றில்
கபடிப் போட்டி
ஆடுகளம் தயாரானது
அரை லோடு
மணல் அடித்து.

- சுசீ மைந்தன்

சொல்வனம்