Published:Updated:

காவ்யா எல்.கே.ஜி 'பி' செக்ஷன்

யுகபாரதிபடம் : ஆ.வின்சென்ட் பால்

பிரீமியம் ஸ்டோரி
##~##

ப்போது வேறு வழியில்லாமல்
பள்ளிக்கூடத்துக்குக் கிளம்ப வேண்டிய கட்டாயம்
காவ்யாவுக்கு ஏற்பட்டுவிட்டது

 அங்கே அவள் பயில்வதற்கான பாடங்களோடு
ஆசிரியைகள் காத்திருக்கின்றனர்

 அவளுக்குப் பள்ளிக்கூடம் என்பது
என்னவென்றே புரியாதபோதும்
போக வேண்டிய நிர்பந்தம்

காவ்யா எல்.கே.ஜி 'பி' செக்ஷன்

அவள் வயதுடைய பிற சிறுமிகளோடு
அவளை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டிய
நிலைமை எங்களுக்கு

 அவள் படிக்கப்போகும் பள்ளியை நடத்துபவர்
ஒரு காலத்தில் பள்ளியிலிருந்து நீக்கப்பட்டவர்
என்று பெருமையாகச் சொல்லிக்கொள்கிறார்

 அவளை இத்தனை வயதுக்கு மேலேயும்
வீட்டிலேயே வைத்திருக்க முடியாது என
மனைவி அடம்பிடிக்கிறாள்

 படிக்காமல் எதுவுமே ஆக முடியாது
என எல்லோரும் சொல்கிறார்கள்

 பள்ளிக்கூடத்துக்கு நிகராக
வேறு ஒன்றுமே இல்லை எனும் நிலையில்

 அவள் வெகு விரைவில்
கையசைத்தவாறே
பள்ளி வாகனத்தில் ஏறப்போகிறாள்

 படித்துத் திரும்புவதைவிட
பத்திரமாகத் திரும்ப வேண்டுமென
ஏனோ நாங்கள்
இறைவனை வேண்டுகிறோம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு