அவள் வண்ண நட்சத்திரங்களின்
எஜமானி
இன்னும் திறக்கப்படாத கடை ஓரத்தில்
சாத்திவைத்திருந்த
ஒட்டுப்போட்ட மேசையை நிமிர்த்தினாள்.
காலொடிந்த அதற்கு
கற்கால் பொறுத்திச் சமன் செய்து
கடைவிரித்தாள்.
நீர் தெளித்துப் பரப்பிய வாழையிலையின்
மரகத வெளிச்சத்தில்
கண்கள் கூசிய சூரியனோ
மெள்ள மெள்ள மேகங்களை நகர்த்தி
இமைத்தாள்.
சிறு கூடையைக் கவிழ்த்து
ஒரு மல்லிகை பௌர்ணமி செய்தாள்.
அந்தி நிலவிலிருந்து உருவிய

அரும்பு நாகத்தைச் சுழற்றிவைத்தாள்.
விரித்து நிறுத்திய குடை
ஒரு குட்டிப் பிரபஞ்சமாகிக் குளிர் பரப்ப
மேலும் நட்சத்திரங்களைக் குவித்தாள்.
எப்படிப்பட்ட பூக்காரிக்கும்
எப்படியோ ஓர் அழகு மிளிரப்
பணித்திருக்கிறது இயற்கை
தொடுத்த நட்சத்திரத் தோரணம் அளக்க
சற்று நீளமான வரம்பெற்றிருந்தன
முழங்கைகள்
அவ்வப்போது தூவானமாகும் விரல்களால்
ஒவ்வொரு பூவாய்ச் சுருக்கிட்டு
புன்னகைகளை உயிரூட்டினாள்
வாசனைகளின் நந்தகுமாரி.
வந்து போவோரின் கைகளுக்குள்
அவள் கொஞ்சம் வானத்தையும்
கொஞ்சம் அழகையும்
கொஞ்சம் வெளிச்சத்தையும்
கொடுத்தனுப்புகிறாள்.
இரவு கவிழ்ந்து
மின் பூக்கள் பூத்தபோது
தன் பூக்கள் வெளிச்சத்திலேயே
பிரகாசித்திருந்தாள்
பழையபடி மூடிய கடையோரம்
தன் வனத்தையும் வானத்தையும்
ஒதுக்கிவைத்துவிட்டு
இருப்புகளைப் பார்த்தபோது
அப்படி ஓர் கனத்த இருள் அவளைக்
கசக்க ஆரம்பித்தது.

அவள் வண்ண நட்சத்திரங்களின்
எஜமானி
இன்னும் திறக்கப்படாத கடை ஓரத்தில்
சாத்திவைத்திருந்த
ஒட்டுப்போட்ட மேசையை நிமிர்த்தினாள்.
காலொடிந்த அதற்கு
கற்கால் பொறுத்திச் சமன் செய்து
கடைவிரித்தாள்.
நீர் தெளித்துப் பரப்பிய வாழையிலையின்
மரகத வெளிச்சத்தில்
கண்கள் கூசிய சூரியனோ
மெள்ள மெள்ள மேகங்களை நகர்த்தி
இமைத்தாள்.
சிறு கூடையைக் கவிழ்த்து
ஒரு மல்லிகை பௌர்ணமி செய்தாள்.
அந்தி நிலவிலிருந்து உருவிய

அரும்பு நாகத்தைச் சுழற்றிவைத்தாள்.
விரித்து நிறுத்திய குடை
ஒரு குட்டிப் பிரபஞ்சமாகிக் குளிர் பரப்ப
மேலும் நட்சத்திரங்களைக் குவித்தாள்.
எப்படிப்பட்ட பூக்காரிக்கும்
எப்படியோ ஓர் அழகு மிளிரப்
பணித்திருக்கிறது இயற்கை
தொடுத்த நட்சத்திரத் தோரணம் அளக்க
சற்று நீளமான வரம்பெற்றிருந்தன
முழங்கைகள்
அவ்வப்போது தூவானமாகும் விரல்களால்
ஒவ்வொரு பூவாய்ச் சுருக்கிட்டு
புன்னகைகளை உயிரூட்டினாள்
வாசனைகளின் நந்தகுமாரி.
வந்து போவோரின் கைகளுக்குள்
அவள் கொஞ்சம் வானத்தையும்
கொஞ்சம் அழகையும்
கொஞ்சம் வெளிச்சத்தையும்
கொடுத்தனுப்புகிறாள்.
இரவு கவிழ்ந்து
மின் பூக்கள் பூத்தபோது
தன் பூக்கள் வெளிச்சத்திலேயே
பிரகாசித்திருந்தாள்
பழையபடி மூடிய கடையோரம்
தன் வனத்தையும் வானத்தையும்
ஒதுக்கிவைத்துவிட்டு
இருப்புகளைப் பார்த்தபோது
அப்படி ஓர் கனத்த இருள் அவளைக்
கசக்க ஆரம்பித்தது.