இது வானத்தின் சுமையைக் கடலறிதல்

மழை ஓய்ந்த பிறகுதான் பார்க்கக் கிடைத்தது
வட்டங்களற்ற வட்டமாய் குளத்தை

எல்லாக் கிளைகளிலும் ஊர்ந்து திரும்பிய
எறும்புக்குக் கிடைத்தது கடைசியாய்
இலை நுனியில் மழைத் துளி

அப்போது பார்க்கிற முகம்
எப்போதும் பார்க்கிற முகம் இல்லை

மார்புப் புற்களில் விரல்கள் நுழைத்து
இறுக்கிய தருணத்தில்
தெரிந்துகொண்டேன் எனக்கான மதிப்பெண்

இரவு முடிந்த விடியலில்
எப்படித்தான் சந்திக்கிறார்களோ மணமக்கள்
எல்லோரையும்

அடி வயிற்றில் தலை சாய்த்தல் சுகம்
தலை வருடல் வாய்த்தல் சுகமோ சுகம்

அந்த மூன்று நாட்களில் நீ தாய்

நான் நீயாகி நீ நானாகி நுழைந்து
நீ நீயாக நான் நானாக
வெளியேறினோம்

பயன்படத்தான் செய்கிறது
தும்பி பிடித்த அனுபவம்!

இது வானத்தின் சுமையைக் கடலறிதல்

மழை ஓய்ந்த பிறகுதான் பார்க்கக் கிடைத்தது
வட்டங்களற்ற வட்டமாய் குளத்தை

எல்லாக் கிளைகளிலும் ஊர்ந்து திரும்பிய
எறும்புக்குக் கிடைத்தது கடைசியாய்
இலை நுனியில் மழைத் துளி

அப்போது பார்க்கிற முகம்
எப்போதும் பார்க்கிற முகம் இல்லை

மார்புப் புற்களில் விரல்கள் நுழைத்து
இறுக்கிய தருணத்தில்
தெரிந்துகொண்டேன் எனக்கான மதிப்பெண்

இரவு முடிந்த விடியலில்
எப்படித்தான் சந்திக்கிறார்களோ மணமக்கள்
எல்லோரையும்

அடி வயிற்றில் தலை சாய்த்தல் சுகம்
தலை வருடல் வாய்த்தல் சுகமோ சுகம்

அந்த மூன்று நாட்களில் நீ தாய்

நான் நீயாகி நீ நானாகி நுழைந்து
நீ நீயாக நான் நானாக
வெளியேறினோம்

பயன்படத்தான் செய்கிறது
தும்பி பிடித்த அனுபவம்!