Published:Updated:

பொம்முவின் பதினாறு இறகுகள் !

கார்த்திக் நேத்தா,படம்: சி.சுரேஷ்பாபு

பொம்முவின் பதினாறு இறகுகள் !

கார்த்திக் நேத்தா,படம்: சி.சுரேஷ்பாபு

Published:Updated:
##~##

அந்தரத்தில் விதைத்த விதை
ஆகாசமாய்ச் செழித்ததடி
குட்டி என் செல்லம்.

 திரியில் விதைத்த விதை
சுடராகச் செழித்ததடி
எதிலே விதைத்த விதை
காற்றாகச் செழித்ததடி
என் புஜ்ஜி பொம்மு?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

 ன்னைவிடப்
பெரியவளாக இருக்கிறாள்
என் பொம்மு
எங்கள் இருவருக்கும்
பாட்டியாக இருக்கிறது
அவளின் பொம்மை.

ன் விரலைப்
பிடித்துக்கொண்டு
பொம்மு நடப்பதாகச்
சொல்கிறாய்
பொம்முவின் உலகைப்
பிடித்துக்கொண்டுதான்
நான் நடக்கிறேன்.

பொம்முவின் பதினாறு இறகுகள் !

குட்டி நாயின்
மூக்கை உரசும்
பிஞ்சுப் பூனையாக
எப்போதும் இருக்கிறாள்
என் பொம்மு.


ப்பாவை அம்மா என்றும்
அம்மாவை அப்பா என்றும்
சொல்லும் பொம்மு
கச்சிதமாக அம்மாவிடம்தான்
போகிறாள் பால் குடிக்க.

ரு புல்லிலிருந்து
பனி எடுத்து
இன்னொரு புல்லுக்குப்
பொட்டு வைக்கிறாள் பொம்மு.

 'ப்பா
இருட்டு ஆடுது பாரு’
என்கிறாள்
இரவில் அசையும்
மரத்தைப் பார்த்து பொம்மு.

ரவு நேரப்
பயணத்தின்போது
காணும் மரத்தைக் காட்டி
என்ன மரமென்று கேட்கிறாள் பொம்மு
அப்போதைக்கு
இருள் மரம் என்று தப்பித்துக்கொள்கிறேன்.

ழையைவிடச் சின்னது
என்னது என்கிறாள் பொம்மு
என்னது என்று நானும் கேட்கிறேன்
மழையைவிடச் சின்னது
மழைக்குள் இருக்கும் காற்று என்கிறாள்.

ரு நாள்
'மழை மேல பட்டு
மழை வழுக்குது பாரு’
என்கிறாள்
இன்னொரு நாள்
'மழைக்குள் மழை
தூங்குது பாரு’
என்கிறாள்
வேறொரு நாள்
'இந்த மழை மாத்திரம் ஏன்ப்பா
குண்டா இருக்கு’
என்று கேள்வி கேட்கிறாள் பொம்மு
மகளைக் கற்க ஆரம்பித்து
மழையையும்
கற்றுவருகிறேன்.

பொம்முவோடு
விளையாடும் நாய்
தான் அஃறிணை என்பதை
மறந்துவிடுகிறது.
அப்படித்தான் பொம்முவும்
தான் கடவுள் என்பதை
மறந்துவிடுகிறாள்.

புல் என்பது
பனியின் வேர்
என்கிறாள் பொம்மு.
பொம்முவைப்
பொம்முவாகவிட்டால்தான்
பொம்முவாக இருக்கிறாள்
கடவுளோடு அவளை
விளையாடவிட்டால்
கிள்ளிக் கிள்ளி வைத்துவிடுகிறாள்
குழந்தைக்கும் கடவுளுக்கும்
சதா சண்டை மூட்டிவிடுகிறாள்
தன் கண்ணாடி முன் நின்று
குழந்தைக்கும் கடவுளுக்கும்
பொட்டு வைத்துவிடுகிறாள்.

டவுளைப் பார்த்து
அவள் சிரித்தால்
குழந்தை கோபித்துக்கொள்கிறது
கடவுளும் அப்படித்தான்.
என்ன செய்ய
பிறந்ததிலிருந்தே
பொம்முவுக்குப்
பொம்மு முகம்தான்.

காற்று வந்து
பெருக்குவதற்குள்
வீட்டைப் பெருக்கிவிட்டுப்
போய்விடுகிறாள் பொம்மு
வெயில் வந்து உலர்த்துவதற்குள்
வெளியை உலர்த்திவிட்டுப் போகிறாள்
மழை வந்து நனைப்பதற்குள்
தெளித்துவிட்டுப் போகிறாள் வாசலை
நான் பெற்றெடுப்பதற்குள்
பிறந்துவிட்டும் போய்விடுகிறாள்
பொம்மு!