Published:Updated:

எனக்கு ஓர் அடையாளம் !

ந.காயத்ரிகண்ணா

எனக்கு ஓர் அடையாளம் !

ந.காயத்ரிகண்ணா

Published:Updated:
##~##

சைக்கிளை மிதித்து, பள்ளியை அடைந்தாள் ப்ரியா. முதல் நாள் என்பதால் விருப்பம் இல்லாமல் வகுப்பில் விட்டுச் செல்லப்பட்ட குட்டி வாண்டுகள், நண்பர்களிடம் விடுமுறைக் கதைகளைப் பேசக் காத்திருக்கும் பெரிய வாண்டுகள் என்று பள்ளி  கலகலப்புடன் இருந்தது. இதேபோன்ற முதல் தினத்தை 10 வருடங்களாகப் பார்த்து வருகிறாள். ப்ரியா. இந்த முறை எப்போதும் இல்லாத ஒருவித பயம்.

பத்தாம் வகுப்பு ரிசல்ட் வந்த பிறகு அட்மிஷன் அறையில்... ''நம்ம ஸ்கூல் ஸ்டூடன்ட்தானே? எந்த குரூப் எடுக்கப்போற?'' என்று கேட்டார் பிரின்சி.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''கம்ப்யூ...'' அவள் முடிக்கும் முன்னரே, ''காமர்ஸ் மேம்'' பளிச்சென்று சொன்னார் அம்மா.

அமைதியாக நின்றாள் ப்ரியா. அதற்குச் சில தினங்களுக்கு முன்னர், ''நான் காமர்ஸ் படிக்க மாட்டேன்'' என்று அழுத்தமாகச் சொல்லி இருந்தாள்.

''நீயோ இலக்கியம்தான் படிக்கணுங்கிறே... அப்புறம் எதுக்குத் கம்ப்யூட்டர் சயின்ஸ்? அம்மா சொல்ற மாதிரி காமர்ஸ் எடுத்து டென்ஷன் இல்லாமப் படி'' - இது அண்ணன்.

''நோ! என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாருமே சயின்ஸ் குரூப்தான். நானும் அதைத்தான் எடுப்பேன்.''

''என்னமோ பண்ணு போ!''

வாதத்தில் ஜெயித்துவிட்டதாக அன்று எண்ணினாள் ப்ரியா. ஆனால் இப்போது அவள் ப்ளஸ் ஒன் காமர்ஸ் மாணவி.

வகுப்பு அறையில் நுழைந்தவுடன் பரிச்சயமான முகங்களுக்காகக் கண்கள் ஸ்கேன் செய்தன. அவளது '10பி’ கேங்கில் இருந்து லக்ஷா மட்டும்தான் இருந்தாள். தாத்தாவும் அப்பாவும் ஆடிட்டர் என்ற பின்னணிகொண்ட லக்ஷா, சி.ஏ. படிக்க ஆசைப்படுவதில் ஆச்சரியம் இல்லை.

''ஹைய்... வாட்ஸப்?'' என்றபடி லக்ஷா அருகில் சென்று அமர்ந்தாள் ப்ரியா.

எனக்கு ஓர் அடையாளம் !

''வந்த உடனே ஆரம்பிச்சுட்டா இங்கிலீஷ்ல. ஆண்டவா, இந்த லிட்ரேச்சர் ஸ்டூடன்ட்கிட்ட இருந்து  நீதான் என்னைக் காப்பாத்தணும்!'' என்று கலாய்த்தாள் லக்ஷா.

சற்றே கடுமையான முகத்தை புன்சிரிப்பால் மறைத்தபடியே நுழைந்தார் ஓர் ஆசிரியர். முகத்தின் சுருக்கங்கள் அவரது அனுபவத்தைச் சொன்னது. ''உங்களை அறிமுகப்படுத்திக்கோங்க'' என்றார்.

முதல் மாணவன், ''ஐ யம் கிருஷ்ணா!'' என்று  சொல்லிவிட்டு இருக்கையில் அமர்ந்தான்.

''உங்க பெயர், உங்களைக் கூப்பிட ஒரு முகவரி அவ்வளவுதான். அறிமுகம்னா உங்களை அடையாளப்படுத்தணும். வாழ்க்கை முழுதும் மத்தவங்க உங்க பெயரை மட்டுமே அடையாளமாச் சொன்னா, நீங்க ஒரு தோல்வியாளர். ஒருவர் உங்களைப் பற்றிப் பேசும்போது, 'இந்த விஷயத்தைச் செய்தாரே அவர்தான்’ என்று அடையாளம் காட்டுகிற மாதிரி எதையாவது சாதிக்கணும். இப்போ மறுபடியும் ஆரம்பிங்க.'' படபடவென்று பேசி முடித்தார் ஆசிரியர்.

''கால் மீ கிருஷ்ணா. நான் இத்தனை நாளா ஸ்டேன்ஃபோர்ட் ஸ்கூல்ல டீச்சர்களுக்குத் தொந்தரவு கொடுத்துட்டு இருந்தேன். இங்கேயும் தொடரலாம்னு நினைச்சேன். மனசு மாறிடுச்சு. இப்போதே ஒரு சார்ட்டர்டு அக்கவுன்டன்ட் போல் ஃபீல் பண்றேன்'' சொல்லி முடித்தான் அவன்.

''வெளிப்படையான பேச்சு'' என்று பாராட்டுப் பெற்றான். வரிசையாக எல்லா மாணவர்களும் தங்களுக்கு என்று ஓர் அடையாளத்தைப் பதிவு செய்தனர்.

''நெக்ஸ்ட் ப்ளீஸ்''

ப்ரியாவின் முறை. ''என் பேரு ப்ரியா. நான் 10-வது வரைக்கும் இதே ஸ்கூல்லதான் படிச்சேன். நான் ஃப்யூச்சர்ல...'' தொண்டை அடைத்தது. தொடர்ந்து அவளால் பேச முடியவில்லை. கூர்மையான கண்கள் பல அவளைத் துளைத்தன.

''நீங்க வருங்காலத்துல என்ன பண்ணப்போறோம்னு ப்ளஸ் ஒன் வந்தும் முடிவு பண்ணலைனா, ரொம்பக் கஷ்டப்பட வேண்டி இருக்கும்'' ஒருவித வெறுப்புடன் சொன்னார் ஆசிரியர்.

பள்ளியில் இருந்து வீடு திரும்பும் வழியில் மீண்டும் ஒரு ஃப்ளாஷ்பேக்...

2007- ஃபேஷன் டிசைனிங், 2008-சயின்ஸ், 2009- ஆங்கில இலக்கியம், 2010-ஜர்னலிஸம், 2011- மறுபடியும் ஆங்கில இலக்கியம்...

''எல்லாரும் லட்சியத்தை அடையப் பல வருஷம் பாடுபடுவாங்க. நீ லட்சியத்தை நிர்ணயிக்கவே பல வருஷம் ஆயிருச்சு.''

இதுபோன்ற விமர்சனங்கள் அவளுக்குப் புதிது அல்ல. அவள் பயணிக்கத் தேர்ந்தெடுத்த இலக்கிய வீதியில், இத்தனை தடைகள் இருக்கும் என எதிர்பார்க்கவும் இல்லை. பலரும், ''சாதாரண ஸ்கூல்ல எட்டாங்கிளாஸ் டீச்சரா குப்பை கொட்டலாம். வேறென்ன செய்ய முடியும் உன் லிட்ரேச்சரை வெச்சு?'' என்றுதான் பேசினர்.

அன்று முடிவுசெய்தாள்... எவரிடமும் தன் கனவைப் பகிர்ந்துகொள்வது இல்லை என்று.

மறுநாள் பள்ளியில் அதே ஆசிரியர், ''என்னம்மா, உனக்கு லட்சியமே கிடையாதா? இல்லை... சொல்ல விரும்பலையா?'' என்று கேட்டார்.

தலைகுனிந்தபடி மௌனம்காத்தாள் ப்ரியா. ''பேசு, இல்லாட்டி நான் க்ளாஸ் எடுக்க ஆரம்பிக்கிறேன்.'' என்றார்.

''ஸாரி சார், நான் சி.ஏ. படிக்க காமர்ஸ் குரூப் எடுக்கலை. சயின்ஸ்லயும் எனக்கு ஆர்வம் இல்லை. நான் ஆங்கில இலக்கியம் படிக்கணும். ஆனா, இந்த விஷயத்துல என்னை ஆதரிக்கிறவங்களைவிட கிண்டல் பண்றவங்கதான் அதிகம். ஒரு கட்டத்தில் அவர்களோட எதிர்மறைப் பேச்சுக்களால் நான் எடுத்த முடிவு தப்போனு என் மேல எனக்கே சந்தேகம் வர்ற அளவுக்கு ஆயிட்டேன். அதற்குப் பிறகு, என் மேற்படிப்புப் பற்றி யாரிடமும் பேசுவது இல்லை. எந்தப் படிப்புக்குமே அதற்கென்று ஒரு துறையில் மதிப்பும் உண்டு. அதை அடையும் வரையில் அமைதியா செயல்பட்டு ஜெயிச்சுக் காட்ட முடிவு பண்ணியிருக்கேன்'' என்று முடித்தாள் ப்ரியா.

மற்ற மாணவர்களைவிட மனதளவில் தெளிவுடன் இருந்த ப்ரியாவை பெருமிதச் சிரிப்புடன் பார்த்தார் ஆசிரியர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism