பிரீமியம் ஸ்டோரி

கடத்தல் !

அந்த விமானத்தின் முன் வரிசை இருக்கையில் அமர்ந்திருந்த மொட்டைத் தலை ஆசாமி சட்டென்று எழுந்து, ''இந்த விமானத்தை நாங்க கடத்தப் போறோம். அமைதியா இருந்தா எல்லோரும் உயிரோடு இருக்கலாம்'' என்றான். கையில் பெரிய சைஸ் துப்பாக்கியை மேல்நோக்கிப் பிடித்திருந்தான்.

நச் கதைகள் !
##~##

இருக்கையில் இருந்த மற்ற எல்லோரும் என்ன செய்வதென்று தெரியாமல் விழித்தார்கள். அப்போது, மூன்றாவது வரிசையில் இருந்த ஒரு கட்டுமஸ்தான இளைஞன் திடீர் என்று பாய்ந்து, மொட்டை ஆசாமியின் துப்பாக்கியைப் பிடுங்க முயன்றான்.  அவன் சட்டெனத் துப்பாக்கியோடு விலக, இளைஞன் கீழே விழுந்தான்.

''இதுதான் செய்யக் கூடாது. ஒண்ணு, நான் உன்னைச் சுட்டுத் தள்ளிடு வேன். இல்லே, கோபமாகி பயணிகளைச் சுட ஆரம்பிச்சுடுவேன். இது தப்பான மூவ்! என்ன செய்வீங்கன்னு வேற யாராவது சொல்றீங்களா?'' என்று கேட்டபடி பயிற்சி கிளாஸை தொடர்ந்தார் அந்த மொட்டைத் தலை கமாண்டோ.

 வேலை !

வேலை எதுவும் இல்லாமல், வீட்டில் வெட்டியாக டி.வி பார்த்துக்கொண்டு இருந்தான் அபிஷேக். ''இப்படி சதா டி.வி.,யே பார்த்துட்டு உட்கார்ந்திருந்தா எப்படிடா? ஏதாவது செய்யலாம் இல்லே'' என்றாள் அம்மா. ''ஆயிரம் வேலை இருக்கு... எதையாவது போய் செய்'' என்றார் அப்பா.

நச் கதைகள் !

''சும்மா இருங்க எல்லாரும்! வீட்டுல ஒட்டடை அடிச்சு  சுத்தம் பண்றதெல்லாம் உங்க வேலை. புள்ள பாவம், இப்பதான் கஷ்டப்பட்டு அஞ்சாங் கிளாஸ் பரீட்சை எழுதிட்டு அப்பாடான்னு லீவுலே இருக்கான். அவனப் போயி...'' என்று பாட்டி கத்தினாள்.

 குளிர் !

கடுமையான குளிர். பிரகாஷ§க்கு உடல் நடுங்கியது. தலையில் மங்கி குல்லா, ஜெர்க்கின் எல்லாம் மாட்டி இருந்தும் அவனால் குளிரைத் தாங்க முடியவில்லை. ''இந்தக் குளிரை எப்படித்தான் அப்பா அம்மாவாலே மட்டும்  தாங்க முடியுதோ? நம்மால சுத்தமா முடியலைப்பா...'' என்று கையைத் தேய்த்து சூடாக்கிக் கொண்டான். அப்படியும் எதுவும் சரிப்படவில்லை.

நச் கதைகள் !

''அம்மா... அம்மா... குளிர் ரொம்ப ஓவரா இருக்கும்மா'' என்று அம்மாவை உலுக்கினான்.

தூக்கத்தில் இருந்து விழித்த அம்மா, தலையணை அடியில் இருந்த ரிமோட்டை எடுத்து ஏஸியை அணைத்தாள்.

 ரெடி !

அப்பாவும் அம்மாவும் வெளியே போனதும்

கதவை மூடிவிட்டு, அனுஷாவும் அரவிந்தனும் கிடுகிடுவென செயல்பட்டார்கள்.

இருக்கைகள், கண்ணாடி, தரை, கதவுகள் எல்லாவற்றையும் துடைத்து சுத்தமாக்கினார்கள். ஸ்ப்ரே அடித்து வாசமாக்கினார்கள்.

நச் கதைகள் !

லேட்டஸ்ட் சினிமா பாடல் மெள்ள ஒலிக்கிறபடி மியூசிக் சிஸ்டத்தைப் போட்டிருந்தாள் அனுஷா.

ஏஸியை ஓடவிட்டு, ''ம்ம்... ரெடி! எல்லாம் க்ளீன் பண்ணியாச்சு. ரெண்டு பேரும் உள்ளே வந்து உட்காருங்க'' என்றபடி கார் கதவைத் திறந்தான் அரவிந்தன்.

 ஓட்டம் !

 கத்தை கத்தையாக பணம் குவிந்தது. 'எல்லாரும் ரொம்ப நம்பிக்கையா பணம் கட்டி இருக்காங்க... என்ன செய்றது?’ என ராகவ் யோசித்தபோது, எதைப் பற்றியும் கவலைப்படாமல் ஓடிவிடுவதுதான் சரி எனப்பட்டது.

நச் கதைகள் !

ஒருத்தர் இல்லை, ரெண்டு பேர் இல்லை... கிட்டத்தட்ட ஐம்பதுக்கும் அதிகமானவர்கள் தன்னை நம்பி பணம் கட்டி இருக்கிறார்கள் என மனசாட்சி எச்சரித்தது. 'எப்பாடு பட்டாவது ஓடியே ஆகணும்!’ என்ற முடிவில் இன்னும் உறுதிதான் கூடியது.

அடுத்த நாள்... திட்டப்படி எல்லாம் நடந்தது. பணம் கட்டிய அத்தனை பேரும் வந்து சூழ்ந்து நின்றார்கள். தன் முழு சக்தியையும் செலுத்தி, அதிவேகமாக ஓட ஆரம்பித்தது ராகவ் என்கிற அந்த ரேஸ் குதிரை!

ஷாட் !

 ''ஷாட் எதுவும் அடிச்சுடாதீங்கப்பா. அப்புறம் உடைக்கறதுக்கு எல்லாரும்தான் பங்கு போட்டு அழுவணும்'' என்ற வேண்டுகோளுடன் கிரிக்கெட் விளையாட ஆரம்பித்தார்கள் ராம்கியும் பத்ரிநாத்தும். அவர்களோடு ரவி, செல்வா, அருள் ஆகியோரும் சேர்ந்துகொள்ள, ஆட்டம் களைகட்டியது. அருள் வேகமாக வந்து பந்தைப் போட, உணர்ச்சி வசப்பட்டவனாக ஒரே அடியில் தூக்கிவிட்டான் பத்ரி. 'சிக்ஸர்’ என்று எல்லோரும் கத்த எத்தனித்து, பந்து போன திசையைப் பார்த்து சைலன்ட் ஆனார்கள். பந்து பதிமூணாம் நம்பர் வீட்டு ஜன்னல் கண்ணாடியை சுக்கலாக்கி இருந்தது. எல்லோரும் எஸ்கேப் ஆகிவிட, பந்தை எடுத்து வருகிற வேலை பத்ரி தலையில் விழுந்தது. பதிமூணாம் நம்பர் வீட்டுக்குப் போய் காலிங் பெல்லை அடித்தான். கதவு திறந்தது...

நச் கதைகள் !

''பரவாயில்லையே... சொன்ன மாதிரியே விரிசல் விட்டிருந்த நம்ம வீட்டு ஜன்னல் கண்ணாடியைப் புதுசா மாத்த வழி பண்ணிட்டியே'' என்று பாராட்டினாள் அம்மா.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு