Published:Updated:

தேடுங்கள் கிடைக்காது!

தாமரை

தேடுங்கள் கிடைக்காது!

தாமரை

Published:Updated:
##~##

தையோ தேடுகிறாய்
எழுகிறாய், அசைகிறாய், நகர்கிறாய்
நகம் கடிக்கிறாய்
அது உன்னிடமிருந்தபோது
அதை நீ கவனிக்கவில்லை

குனிந்து காலுக்கருகில் தேடுகிறாய்
எப்போதும் உன் ஏவலுக்குக்
காத்துக்கொண்டு
வாங்கும் உதையில்
எம்பிப்போய் விழுந்து
எழுந்து ஓடிவந்து வாலைக் குழைக்கும்
உன் நாயாக இருக்கக்கூடும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கையை நீட்டித் துழாவுகிறாய்
உன் வாயின்
வறண்ட புதரை நனைக்க
வார்த்தைகள் என்னும்
வஞ்சகத்தில் முழுக
எப்போதும் ஆயத்தமாக இருக்கும்
ஆவி பறக்கும் தேநீர்க் கோப்பை
அங்கு இல்லைபோல

தேடுங்கள் கிடைக்காது!

மேசைப் பொருட்களைக் கவிழ்த்துப் போட்டு
கண்ணை நுழைத்துத் தேடுகிறாய்
மேதைமை வளர்க்கப் படித்து
கலைத்துப்போட்டு
கேட்பாரற்றுக் கிடக்கும் ஏடுகளில்
நீ படிக்காத கவிதைகளுள்
பெண்மையின் மேன்மை பற்றிய ஒன்றாக இருக்கலாம்

உத்தரத்தையும் விட்டுவைக்கவில்லை
அண்ணாந்து பார்க்கிறாய்
வீட்டில் ஒருபோதும் காணக் கிடைக்காத
ஒட்டடையில் எதையாவது
ஒளித்துவைத்திருந்தாயா என்ன?

ஓணானைப் போலக் கழுத்தை நீட்டி
அங்குமிங்கும் அலைபாய்கிறாய்
அந்தரத்தையும் அலசுகிறாய்
சமையலறைக்குள் ஓடுகிறாய்
அதே வேகத்தில் தெறித்துப்போய்
தோட்டத்தில் நிற்கிறாய்
இன்றும் பூக்கள் மலர்ந்து சிரிக்கின்றன
ஆனால், இவை நேற்றைய பூக்களென்று
நினைத்தால் நீ மடையன்

பரபரக்கிறாய், விரல் நெரிக்கிறாய்
சுருதி கூட்டப்பட்ட உன் இயக்கம்
உண்மையில்
சுருதி குறைந்ததனால்
என்னவொரு முரண்

ஒருவேளை...
நீ தேடுவது என்னை எனில்
நன்று
தேடலை நீ கைவிடலாம்
அதைக் கண்டடைந்தவன்
ஒருபோதும் திருப்பித் தரப்போவதில்லை.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism