Published:Updated:

சொல்வனம்

படம் : அருண் டைட்டன்

சொல்வனம்

படம் : அருண் டைட்டன்

Published:Updated:

தேடல்

சொல்வனம்

ன் தந்தையின் வயதொத்த
சக பயணிகளிடமும்
தேநீர், முறுக்கு வியாபாரிகளிடமும்
அவரைத் தேடிக்கொண்டே பயணிக்கிறேன்
நினைவுச் சூழலில் சிக்கிய
என் தொடையில்
தன் பிஞ்சுக் கரத்தால் தட்டி
'அப்பா ஒண்ணுக்கு’
என்றழைக்கும் பையனிடம்
என் பால்யம் வந்து ஒட்டிக்கொள்ள
என் தந்தையாகிறேன் நான்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

- வத்திராயிருப்பு தெ.சு.கவுதமன்

பிரசவக் குறிப்பு

பொட்டப்பிள்ளையா
என்றார்கள்
வெகுசாதாரணமாக
தேவதை பிறந்திருப்பதை.

- பூர்ணா

கடற்கரைச் சிறுவன்

ளில்லாத் தனிமையில்
பாடுகிறான் நிமிர்ந்து நின்று
இன்னும் மறக்காமல்
நீராருங் கடலுடுத்த...

 காட்டுகிறான் கரிசனம்
காலொடிந்த நாயிடமும்
கொள்ளு மறந்த
சவாரிக் குதிரையிடமும்

 கை தட்டி அழைத்ததும்
ஓடுவான் ஒலி நோக்கி
கட்டிய மணல் வீட்டை
அலைகளிடம் கொடுத்துவிட்டு

 பீடி வலிக்கும்
புல்லாங்குழல் விற்பவனிடம்
பொட்டலமொன்று கொடுத்து
கேட்கிறான் விருப்பப் பாடல்

 நீட்டுவான் வேண்டுமா என்று
கட்டுமரக் காதலர்கள்
உடல் சலித்து
உடைகள் சரிசெய்கையில்

 தூக்க முடியாமல் தூக்கி
சுடுவான் துல்லியமாய்
இருந்த சில்லறைக்கு
இரண்டு பலூன்களை

 அலைகள் மட்டுமே
ஆறுதல் சொல்லக் கூடும்
சுண்டல் விற்பவனின்
பாதக் கொப்பளங்களுக்கு
இப்பெருநகரத்தில்.

- கார்த்தி

##~##

அஞ்சலி

னைத்து
மரங்களையும்
வெட்டிச்
சாய்த்துவிட்டு
அஞ்சலி
செலுத்துவதற்காக
நடுவில்
அரளிப்பூச் செடிகள்...
நான்கு வழிச் சாலைகள்.

- சக்தி இளங்கோ

பலி

ரைக் காக்காத
அய்யனாருக்கு
காவல் கூலியாகப்
பலி கொடுக்கப்பட்டது
பாதுகாப்பாகப் பட்டியில் வளர்ந்த
ஆட்டுக்குட்டி.

- காவிரி நாடன்

நானும் நீங்களும்

னக்கும் உங்களுக்கும்
சிறிது இடைவெளி இருக்கச் சாத்தியம் உண்டு.

இளையராஜாவும் மணிரத்னமும்
எனக்கு இளையராஜா, மணிரத்னம்
உங்களுக்கு ராஜா சார், மணி சார்.

பன்னாட்டு இலக்கியவாதிகளின் பெயர்களை
வரிசைக்கிரமமாய்ச் சொல்லி முடித்து
'இவர்களில் யாரையேனும் வாசித்துள்ளீர்களா?’
என நமட்டுச் சிரிப்புடன் பார்க்கிறீர்கள்.
கி.ரா., அசோகமித்திரன், ஜெயகாந்தனிடம்
எனக்கு நன்கு பரிச்சயம் உண்டு.
உலக சினிமாக்களை அலசியெடுத்துவிட்டு,
'கேள்வியாவதுபட்டிருக்கிறீர்களா?’
என்கிறீர்கள் கிண்டலாக.
வழக்கு எண் 18/9, ஆரண்ய காண்டத்தைக்

சொல்வனம்

கொண்டாடத் தெரிதல் எனக்குப் போதுமானது.
ஒரு கவிதை எழுதிக் காட்டினால்
'எலிமென்டரி லெவலைத் தாண்டவில்லை’
எனப் புறந்தள்ளுகிறீர்கள்.
ட்விட்டரில் என்னதான் கீச்சினாலும்
என்னைப் பின்தொடர்பவர்கள் ஓரிருவர்தான்.
முகநூலின் பிரபல பதிவர்களிடம்
எனது நட்பு விண்ணப்பம்
ஏற்றுக்கொள்ளப்படுதல் மிக அரிது.
சரி பரவாயில்லையென்று
அறுநூறு லைக்ஸ் வாங்கிவிட்டிருந்த
டிமிட்ரி இவ்நோவ்ஸ்கியின் ஒரு ஸ்டேட்டஸை
ஷேர் பண்ணினாலும்கூட எனக்கு
இரண்டு லைக் தாண்டினால் அதிகம்.
என்னை யாருக்கும் அடையாளம் தெரியாது.
நான் ஒரு சாதாரணன்தான்
நான்
உங்களைப் போல் இல்லைதான்
நினைவிருக்கிறதா..?
கொஞ்ச காலத்துக்கு முன்பு வரை
நீங்களும் நானாக இருந்தீர்கள்.

- கு.விநாயகமூர்த்தி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism