Published:Updated:

மழையும் நடைந்தது

உமா ஷக்தி

மழையும் நடைந்தது

உமா ஷக்தி

Published:Updated:
##~##

குடை வேண்டாம் நனையலாம்
புது மழையிது என்றாய்
நியான் வெளிச்சம் பட்ட
மழைக் காலக் கண்ணாடிச் சாலையில்
இந்தக் கனமழை
பட்டுத் தெறிக்கையில்
இடைவெளியற்ற இசை
நமக்குள் அதிர்கிறது
இந்நாளின் துளியாய்
பெருகியோடும் மழையாக
உனதன்பினைப் பருகிக்கொள்கிறேன்
விலக முடியாத நெருக்கமும்
விளக்க முடியாத மகிழ்ச்சியுமாய்
அன்றைய என் கண்ணீரால்

மழையும் நடைந்தது

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மழையும் சிறிது நனைந்தது.

உடைந்த சித்திரம் ஒன்றின்
ஒரு பகுதியாய்
கடந்த 29-ம் தேதியில்
உன்னைச் சந்திக்க
இரண்டு ரயில்களிலும்
மூன்று பேருந்துகளிலும்
மாறி மாறிப் பயணம்செய்து
உன் இருப்பிடம் வந்து சேர்ந்தேன்
ரசனையான அழகிய
அந்தக் கோப்பையில்
நீ அளித்த தேநீரில்
அன்று பெய்த
மழையைச் சேர்த்திருந்தாய்
கண்ணாடி ஜன்னல்களின் ஊடே
நீ யாரையோ எதிர்பார்த்துக்
காத்திருந்தாய் போலும்
வெறும் தாளாய்
நான் போன பின்பும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism