Published:Updated:

சொல்வனம்

படம் : அருண் டைட்டன்

##~##

மாதவனும் இன்ன பிற குட்டிகளும்

 முதன்முதலாகச் சீருடையும்
அலங்காரமாய் கழுத்துப் பட்டையும் அணிந்து
மழலையர் பள்ளி செல்லும் மாதவனை
அம்மா போட்டோ எடுத்துக்கொண்டாள்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

மாதவனுக்கும் இன்ன பிற குட்டிகளுக்கும்
வடிவங்கள் பற்றிய பாடத்தை
நடத்திய நாள் முதலே
உலகப் பொருட்கள் வடிவம் பெற்றன.

பிஸ்கட்டின் சுவையோடு ஒளிந்திருந்த
செவ்வகத்தையும்
டிபன் பாக்ஸின் வட்ட வடிவத்தையும் கண்டுபிடித்து
தங்களின் ஆசிரியைக்கே
சொல்லத் துவங்கிவிட்டனர்.

சுவர்களில் கைகளெட்டும் உயரங்களெல்லாம்
வடிவங்களாக வரைந்தும் அலுக்காததால்
அண்ணன்களின் நோட்டுகளில் கிறுக்கியும்
வாய் ஓயாமல் சொல்லியும் திரிகிறார்கள்.

நேற்று மாதவன்
ஓவலான தன் தட்டில் விழுந்த
சர்க்கிளைப் பாதியாக்கி
இரண்டு செமி சர்க்கிள்களாக்கினான்
அவற்றை மேலும் இரண்டிரண்டாக உடைத்து
நான்கு ட்ரையாங்கிள்களைச் சாப்பிட்டான்.

- ச.முத்துவேல்

சிசுவும் சிறுவனும்

குட்டிப் பாப்பாக்கள்
இரவில்தான் உருவாவதாக
இந்த சுட்டிப் பையனுக்குத் தோன்றியது.

உடைகளை ஊறவைத்துக்கொண்டே
வந்திருந்த பாட்டியிடம்
அம்மா சிரித்துக் காட்டினாள்
அடுத்த சிசு தரித்திருப்பதை.

அவளின் கண் பார்வைக்குள்
வந்தவுடன்
தெரிந்தவர்கள் யாவரிடத்திலும்
உடல்வாகும் முக பாவனையும்
உரையாடல் தொனியும்

மாற்றம் பெறுவதை
புத்தகங்களின் கிழிந்த அட்டையை
ஒட்டவைத்தபடியே அவதானித்தான்.

சொல்வனம்

தன்னிடத்தில் அன்பு செலுத்தி
அவளுக்குச் சலித்துப்போயிருக்குமோ
என்பதை
நான் இருக்கையில்
இன்னொன்று எதற்கென்ற
வினாவுக்கு விடையாக்கினான்.

 சுற்றும்முற்றும் பார்த்துவிட்டு
சுவரைச் சுரண்டித் தின்கிறவன்
வருகிறாளா என்று
தோட்டத்தை எட்டிப் பார்க்க...
சுற்றும்முற்றும் பார்த்துவிட்டு
சட்டெனச் சாம்பலைப் போட்டு
மென்றவளைக் கண்டு
புரியாது புன்னகைத்தான்.

பாப்பாவின் பாலறிய
கள்ளக்கூடத்தில்
வயிறூடுருவும் கதிர்ச் சோதனை தவிர்த்து
பத்தாம் மாதம்
பார்த்துக்கொள்ளலாமென்ற
ஆர்வத்திலெல்லாம்
அமிலம் ஊற்றினார் அப்பா.

பின்பொரு விடுமுறை நாளின்
மதிய இளைப்பாறலில்
ஆணென்றால் ன்
பெண்ணென்றால் னி
எனப் பொருந்தக்கூடிய
இருபாலருக்குமான ஒரு பெயரை
இறுதியாகத் தேர்ந்தெடுத்த
இருவருக்கும் இடையில் இருந்தவன்

தன்னைச் சுற்றி நடக்கும்
காட்சிப் பிறழ்வில்
இணையும் விதம்
வினவினான்
அம்மாவின் அடிவயிற்றைத் தொட்டு
'பாப்பாக்கு எப்பம்மா
பலூன் வாங்கிக் கொடுத்த..?’

- யூஜின்

பரிவு

சொல்வனம்

குழந்தைகளைக்
கூட்டிக்கொண்டு
மருத்துவமனை
செல்லும்போதெல்லாம்
குழந்தைகள் கூடவே
எடுத்து வந்துவிடுகிறார்கள்
உடைந்த பொம்மைகளை.

- கோவைநா.கி.பிரசாத்