Published:Updated:

சொல்வனம்!

சொல்வனம்!

சொல்வனம்!

ஊழ்வினை

திருமணத்துக்கு முன்பு

கூட்டத்தில்

பெண்களை இடிக்கும் ஒருவனால்...

மாடியில் துணி காயப்போடும் பெண்ணை

நூல்விடும் ஒருவனால்...

மாடர்ன் டிரெஸ் அணிந்தவளை

குறுகுறுவெனப் பார்க்கும் ஒருவனால்...

சொல்வனம்!

ஃபேஸ்புக்கில் ஃபேக் ஐடி வைத்து

பெண்களுடன் சாட் செய்யும் ஒருவனால்...

திருமணத்துக்குப் பின்பு

தன் மனைவியை

கூட்டத்தில் செல்ல

மாடியில் துணி காயப்போட

மாடர்ன் டிரெஸ் அணிய

ஃபேஸ்புக்கில் அக்கவுன்ட் ஓப்பன் செய்ய

அனுமதிக்க முடிவதில்லை!

                                 - கட்டளை ஜெயா

குறும்பு

இனிப்பை

யாரும் அறியாமல்

எடுக்கும் முன்

பூனையாகவும்

எடுத்த பின்

மீனாகவும்

நழுவிவிடும் அழகு

குழந்தையுடையது!

  - ந.சிவநேசன்

மாறுதல்

இந்த நிலத்தை வைத்து

விவசாயம் செய்தால்

நான் ஏழை...

இதே நிலத்தை வைத்து

வியாபாரம் செய்தால்

நான் பணக்காரன்!

- சிறி.ப.வில்லியம்ஸ்                                          

உதிரிப் பழம்

நாலாபுறமும் பெருகிவிட்ட சாலையில்

சுற்றிலும் வந்துவிட்ட

பழமுதிர் நிலையங்களில்

தனதென வைத்திருந்த மரமும்

வெட்டப்பட்ட நிலையில்

துவண்டுபோயிருந்த பாட்டி

தள்ளுவண்டியை வெயிலில் நிறுத்திவிட்டு

வீட்டின் நிழலில் அமருகிறாள்.

நீங்களும் வருகிறீர்கள்...

பழம் வாங்கலாமென... பேரம் பேசலாமென

பத்து ரூபாய் குறைத்து வாங்கலாமென

ஐந்து ரூபாய்க்கு மேல்

குறைத்து விற்றால்

கட்டுப்படியாகாது பாட்டிக்கு.

என்னவோ கோபத்தில்

பாட்டியை வென்றுவிட

விடுவிடுவென

பழமுதிர் நிலையத்தில் நுழைகிறீர்கள்.

வெளிர்நிற வெளிச்சத்தில்

மிதமான குளிரில்

எண்பது ரூபாய்க்கு

பழுத்திருக்கிறது சோகைப் பழம்.

பாட்டியைவிட

இருபது ரூபாய் அதிகம்தான்

இருந்தும் பேசாமல் வாங்குகிறீர்கள்

வாகனத்தில் விரைந்துபோகிறீர்கள்.

யாரும் இல்லாத இடத்தில்

எதற்கோ பேசிக்கொண்டிருக்கிறாள்

பாட்டியும் அவள் பாட்டுக்கு!

- ப.ராமச்சந்திரன்

 கிறுக்கல் சித்திரம்

சுவரெல்லாம்

கிறுக்கிய பின்

சித்திரமாகி நின்றது

கிறுக்கிய

குழந்தை.

- கவிஜி  

##~##