Published:Updated:

நச் கதைகள் !

நச் கதைகள் !

நச் கதைகள் !

நச் கதைகள் !

Published:Updated:

சோகம் !

நச் கதைகள் !

 வீடே வெறிச்சோடி இருந்தது. திடீர் என்று மகேஷ் இல்லாமல் போனது எல்லோருக்குமே மனசு பாரமாக இருந்தது. அவன் இல்லாத சோகத்தில் இருந்து பாட்டி மீண்டு வந்தாள். 'அவன் இருந்தா இந்நேரம் வீடே கலகலன்னு இருக்கும். பாவிப் பய இப்படி திடுதிப்புன்னு போயிட்டானே!’ என்று புலம்பிக் கண் கலங்கினாள் அம்மா. மகேஷின் பத்து வயசுத் தங்கை கனகாவுக்கு அழுது அழுது முகமெல்லாம் வீங்கி இருந்தது. எதுவும் சாப்பிடாமல், எதுவும் குடிக்காமல் எப்போதும் அண்ணன் நினைவாகவே இருந்தாள். தோழிகள், அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவளுக்கு சமாதானம் சொன்னார்கள். ''பெரியவங்களான நமக்கே கஷ்டமா இருக்கு. அவளுக்கு இருக்காதா?'' என்றார் தாத்தா. ''இப்ப என்ன ஆயிடுச்சு? சின்ன வயசுலே இருந்து நம்மை விட்டுப் பிரியாதவன் ஒரு ட்ரெயினிங்கை முடிக்க டெல்லி போயிருக்கான்... சீக்கிரமே வந்துடப் போறான்'' என்று சத்தம் போட்டார் அப்பா. 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நச் கதைகள் !

 மாங்காய் !

நச் கதைகள் !
##~##

மாதவனும் ஆதியும் வேலி ஓரமாக இருந்த அந்த மாமரத்தையே பார்த்தபடி நின்றனர். மரத்தில் கொத்துக் கொத்தாக மாங்காய்கள். ''யாரும் இல்லேடா. மரத்திலே ஏறப்போறேன்'' என்றான் ஆதி. ''பயமா இருக்குடா... திடீர்னு தோட்டக்காரன் வந்துட்டா?'' என்று பதறினான் மாதவன்.

''ஏன்டா பயந்து சாகறே? தோட்டக்காரன் இப் போதைக்கு வரமாட்டான்'' என்றபடி மரத்தில் ஏறினான் ஆதி. இலைகளுக்குப் பின்னால் ஒளிந்து இருந்த மாங்காய்கள் எட்டிப் பார்த்தன. கையை மெதுவாக உயர்த்தினான். அப்போது...

''டேய்... எவன்டா அது மரத்து மேல?'' என்று தோட்டக்காரன் கத்தியபடி ஓடி வந்தான். அதற்குள் வேலையை முடித்துக் கீழே இறங்கிவிட்டான் ஆதி.  அவன் கையைப் பார்த்த தோட்டக்காரனின் முகம் மாறியது. ''கோவிச்சுக்காதீங்க அண்ணே... மாங்காய் பறிக்கலை. இந்த மரத்துக் கிளையிலே என்னோட பட்டம் அறுந்து வந்து மாட்டிக்கிடுச்சு. அதான்'' என்றான் ஆதி நிதான மாக!  

-டி.ஜானகி, கரூர்

 பயணம் !

நச் கதைகள் !

காரில் எல்லோரும் அமர்ந்திருந்தார்கள். சுட்டிகளுக்கு ஒரே உற்சாகம். 'ஹோ’வென கத்திக் கொண்டிருந்தார்கள். எல்லோரும் தீம் பார்க் போகிறார்கள். மதியம் சாப்பிட உணவு, நொறுக்குத் தீனி, தண்ணீர் பாட்டில் எல்லாம் கார் டிக்கியில் வைத்தாகிவிட்டது. ''எல்லாரும் வந்தாச்சா? என்றாள் பாட்டி. ''இன்னும் பன்னீரைக் காணலையே'' என்றாள் அம்மா. ''இந்த நேரம் பார்த்து எங்கேடி போனான்?'' என்று கோபப்பட்டார் அப்பா. ''இங்கேதான் நின்னுட்டு இருந்தான். அதுக்குள்ளே எங்கே போனான்?'' என்று வீட்டில், வெளியே என்று எல்லா இடத்திலும் தேடினார்கள். ''டயம் ஆகுது... அவன் வரானா இல்லையா பாருங்க சீக்கிரம்'' என்றாள் பாட்டி. எதிரில் பலவீனமாக நடந்து வந்தான் பன்னீர். ''இவ்ளோ நேரம் நல்லாதான் இருந்தேன். வயத்தைக் கலக்கிடுச்சும்மா. மூணு நாலு தடவைடாய்லெட் போய்ட்டேன்... கிர்ர்ருன்னு வருது'' என்றான். ''சரி... நீ டாக்டரைப் பார்த்துட்டு வீட்டுல ரெஸ்ட் எடு. நாங்க கிளம்பறோம்'' என்றார் அப்பா.

எல்லோரும் காரிலிருந்து இறங்கி, இரண்டு ஆட்டோக்களில் கிளம்பினார்கள். ''ரொம்ப ஸாரிம்மா!'' என்றான் வயிற்றைப் பிடித்தபடி டிரைவர் பன்னீர்.

-தாரிக்

நச் கதைகள் !

மிஸ்ஸிங் !

நச் கதைகள் !

அன்று மாலை 4 மணி இருக்கும். ராகவனுக்கு ஒரு போன்கால் வந்தது. சிநேகா மிஸ்ஸிங்! செய்தி அறிந்ததும் உடனே வீட்டுக்கு விரைந்தார் ராகவன். அங்கே எல்லோரும் சோகமான முகத்துடன் இருந்தார்கள். வீடே பரபரப்பாக இருந்தது. ''எப்போ கடைசியா பார்த்தீங்க?'' என்று கேட்டார் ராகவன். வீட்டிலிருந்த அனைவரும் மதுமிதாவைத் திரும்பிப் பார்த்தனர். மதுமிதா பயமும் அழுகையும் கலந்தபடி பேசினாள், ''அப்பா நானும் சிநேகாவும் ஒண்ணாதான் இருந்தோம். அவளுக்கு சாப்பிட ஏதாவது வாங்கித் தரலாம்னு பக்கத்து கடைக்குப் போனேன். திரும்பி வந்தப்ப அவளைக் காணோம். நான் எல்லா இடத்திலும் தேடிப் பார்த்துட்டேன். எங்கேயும் காணலை. எல்லா வீட்டிலேயும் கேட்டுப் பார்த்துட்டேன். எல்லாரும் பார்க்கலைங்கிறாங்க'' என்றவள், ''என்னாலதான் அவ மிஸ்ஸாயிட்டா... அவளை எப்படியாவது தேடிக் கண்டுபிடிங்க அப்பா'' என்று அழுதாள். மதுமிதாவை சமாதானப்படுத்திய அப்பா, ''மது விடுமா... இந்த நாய்க்குட்டி தொலைஞ்சு போனா என்ன? வேற ஒண்ணு வாங்கி அதுக்கு சிநேகான்னு பேர் வெச்சிடுவோம்'' என்றார் ஆறுதலாக!

டீக்கடை !

வீட்டில் இருந்தால் சரியாகப் படிக்கமாட்டான் என்று மகனைத் தன் டீக் கடைக்கு அழைத்துப் போய்விடுவார் சண்முகம். டீ, காபி, பிஸ்கட், பன், சமோசா என்று கடையில் வியாபாரம் எப்போதும் பரபரப்பாக இருக்கும். கடைக்கு அழைத்துச் செல்லும் மகனையும் சமயத்தில் சின்னச் சின்ன வேலை களைச் செய்ய வைத்துவிடுவார். அன்று கடையில் வியாபாரம் டல் அடித்தது. 'சரி, மகனுக்கு 'டீ’ போட பழக்குவோம்’ என முடிவு செய்த சண்முகம், மகனை அழைத்து கற்றுக் கொடுத்தார். ஆனால், அவனால் சரியாக 'டீ’ போட வர வில்லை. திரும்பத் திரும்ப பொறு மையாக சொல்லிக் கொடுத்தார். பலனில்லை. பொறுமை இழந்த சண்முகம் கோபமாகக் கத்தினார். ''ஊர்ல அவனவன் என்னென்னமோ செஞ்சு சாதிக்கறான். உன்னால ஒரு சின்ன 'டீ’ போடத் தெரியலை... போய் எதிர் வீட்டு எல்கேஜி பையனைப் பாரு... 'ஏ பி ஸி டி’-ன்னு 'இசட்’ வரை விதவிதமா எழுதிக் காட்றான். உன்னால ஒரு சின்ன 'டீ’ போட முடியலையே... எப்புடிதான் படிச்சுக் கிழிக்கப் போறீயோ போ!''

-தாரிக்

 விடுமுறை !

நச் கதைகள் !

அன்று வெள்ளிக் கிழமை. பள்ளிக் கூடத்துக்குள் நுழைந்த ஸ்டீபனுக்கு உற்சாகம் கரைபுரண்டது. 'அடுத்து வரும் சனி, ஞாயிறு விடுமுறையில் வீட்டில் சொல்லிவிட்டு நண்பர்களோடு ஊர் சுற்ற, ஸ்டீபன் திட்டம் போட்டிருந்ததே உற்சாகத்துக்குக் காரணம். 'தியேட்டருக்குப் போகலாம்... இஷ்டப்பட்டதை வாங்கிச் சாப்பிடலாம்’ என்று பல ஆசைகள் லிஸ்டில் இருந்தன. நண்பர்களுக்கும் ஏற்கனவே சொல்லி ஆகிவிட்டது.

அன்றைய பள்ளி வகுப்புகள் எல்லாம் வழக்கம்போல நடந்தன. கடைசிப் பாடவேளையும் வந்தது. பள்ளி முடியும் சமயம்... வகுப்புக்குள் தலைமை ஆசிரியர் நுழைந்தார். ''நடந்து முடிந்த அரையாண்டுத் தேர்வில், தமிழ்ப் பாடத்தில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்த இருக்கிறோம். தேர்ச்சி பெறாத மாணவர்கள் யாரும் நின்றுவிடாமல் கட்டாயம் இதில் கலந்துகொள்ள வேண்டும். இந்த இரண்டு நாளும் வருகைப் பதிவேடு உண்டு. உங்கள் வருகையை வகுப்பாசிரியர் ஸ்டீபன் பதிவு செய்வார்'' என்றார்.

நச் கதைகள் !
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism