Election bannerElection banner
Published:Updated:

கேமரா என் காதலி..!

சேலம்

##~##
கே
மரா இல்லாத சுதாகரைப் பார்ப்பது அபூர்வம். புகைப்படக்காரர்களில் எத்தனையோ வகை உண்டு. இவர் தெருவோரப் புகைப்படக்காரர். அடித்தட்டு மக்களுக்கான ஆதங்கக்காரர்!

''சேலம்தான் எனக்குச் சொந்த ஊர். கேமரா மேல் எப்படி  ஆசை வந்துச்சுன்னு இன்னும்கூட எனக்கு சொல்லத் தெரியலை. பள்ளிகூடத்துப் படிப்பை முடிச்சதும், எங்கப்பாவை நச்சரிச்சு ஒரு கேமரா வாங்கினேன். அந்த கேமராவே என்னோட வாழ்க்கையாகிடும்னு அப்போ நான் நினைக்கலை.  

கேமரா என் காதலி..!

2006-ம் வருஷம் 'பெஸ்ட் போட்டோகிராபி டுடே’ என்கிற நிறுவனம், அகில இந்தியப் புகைப்படப் போட்டியை நடத்தியது. அதுக்கு, 'ஸ்ட்ரீட் அட் நைட்’ என்ற தலைப்புல நான் அனுப்பிய படத்தை மிகச் சிறந்த படமா தேர்வு செஞ்சாங்க. என்னதான் விண்ணை முட்டுற கட்டடம் கட்டி, கோடி ரூபா கார்ல மனுஷங்க வலம் வந்தாலும், இன்னமும் அடித்தட்டு மக்கள் அவலத்தை மட்டுமே சுமந்துக்கிட்டு வாழ்றாங்க. ஒரு சேரிப் பகுதியில கால் வயிற்றுக் கஞ்சிக்காக, மனிதர்கள் பன்றிகளோடு வாழ்ந்துகொண்டு இருப்பதைப் படம் எடுத்து, 'ஆல் இண்டியா சலுன் ஆஃப் போட்டோகிராபி - 2010’ போட்டிக்கு அனுப்பினேன்.

அதுக்கு முதல் பரிசு கிடைச்சது நானே எதிர்பார்க்காத ஒன்று. சென்னையில் நடந்த விழாவில் மணிரத்னம் எனக்கு அந்தப் பரிசைக் கொடுத்தார். 'ரொம்ப நல்லா பண்ணி இருக்கீங்க... சுதாகர். கீப் இட் அப்’னு அவர் சொன்னபோது, கண் கலங்கிடுச்சு. எவ்வளவோ பொருளாதாரக் கஷ்டங்கள் என்னை கேமரா உலகத்தைவிட்டு பிரிக்கப் பார்த்து இருக்கு. ஆனா, கேமரா என் காதலி. பிரிஞ்சா உயிர் வாழ முடியாது'' என்கிறார் நெகிழ்ச்சியுடன்!

- கே.ராஜாதிருவேங்கடம்

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு