Published:Updated:

பேரு பெரிய பேரு !

பேரு பெரிய பேரு !

பேரு பெரிய பேரு !

பேரு பெரிய பேரு !

Published:Updated:

சீனர்கள் முதன்முதலில் நீளமான பெயர் களையும் வைத்திருந்தார்கள். பின்பு சுருக்கமான பெயர்களை வைத்துக்கொண்டனர். அதற்கான காரணமாக ஒரு கதை சொல்லப்படுகிறது.

சீன கிராமம் ஒன்றில், சுவாங் என்ற ஓர் அண்ணனும், 'மை சுங் வாங் சங் டிங் பங் ஷீ ஹீ சுடிங் பிங் வாஷீ பிங் சுவாடிங் பிடிங் ஹீ பைசுங் சைபிங் ஷீங் ஹீங்’ என்னும் அவன் தம்பியும் தங்கள் தாயுடன் வாழ்ந்து வந்தனர்.

பேரு பெரிய பேரு !

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஒரு நாள் இருவரும் கிணற்று அருகே விளையாடும்போது, அண்ணன் கிணற்றில் விழுந்து  விட்டான். தம்பி, தாயிடம் சென்று... விஷயத்தைச் சொல்ல, தாய் பக்கத்து வீட்டாரிடம், ''சுவாங் கிணற்றில் விழுந்துவிட்டான்!'' என்றார். அண்ணன் சுவாங் கிணற்றில் இருந்து மீட்கப்பட்டான்.

மற்றொரு நாள், அதே கிணற்றில் தம்பி விழுந்துவிட்டான். சுவாங், தாயிடம் சென்று தம்பியின் முழுப் பெயரையும் சொல்லி, விஷயத்தைச் சொன்னான். தாயும் பக்கத்து வீட்டாரிடம், ''மை சுங் வாங் சங் டிங் பங் ஷீ ஹீ சுடிங் பிங் வாஷீ பிங் சுவாடிங் பிடிங் ஹு பைசுங் சைபிங் ஷீங் ஹீங் கிணற்றில் விழுந்துவிட்டான்!'' என்றார். அதற்கே நேரம் அதிகமானது. பாவம் தம்பி, கிணற்றில் மூழ்கியே விட்டான். அப்புறம் கஷ்டப்பட்டுக் காப்பாற்றினார்கள். அதிலிருந்து, சீனர்கள் பெயர்களைச் சுருக்கி வைத்துக் கொள்ள ஆரம்பித்தார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism