அழகான துள்ளல் பாடல் ஒன்றுக்கு
முழுமையாய் ஆடி முடித்து வியர்வை உதிர்த்த உடல்களை
குளிக்கவைத்த பிறகு பேசவைத்துப் பாருங்கள்
கேட்கலாம் இசை

அதற்குப் பிறகும் விடுகிறானா பார்... பழம் நறுக்கிக் கொடுத்து
பச்சைத் தேநீர் கொடுத்து
கால் விரல்களில் சொடுக்கெடுத்துப் படுத்துகிறான்

கண்கள் திறக்காதே முழுமையாகப் பார்க்கலாம் திருடப்படுவதை

பத்து நத்தைகள் நடந்து காட்டிய பாதையைக் கடந்தது
ஆமையின் மீது எறும்பு

ஆறடிச் சாலையில் ஆயுள் பயணம்

பூச்செடிதான்
ஒரே ஒரு வேறுபாடு
இது வருடிக் கொடுத்த பிறகு தண்ணீர் ஊற்றுதல்

ஒற்றை இசைப் பலகையில் எத்தனை இசைக் கருவிகள்

கைபேசியில் காதல் கொள் காமம் கொல்

உடைகளற்ற நேரத்திலும் இருக்கின்றன இன்னும்
அவிழ்க்கப்பட வேண்டிய ஆடைகள்

என்னடா கொடுமையிது
கசக்கிய தாளில்தான் எழுத வேண்டியிருக்கிறது
இந்தக் கவிதையை மட்டும்!