மௌனம்

தோளில் தட்டிக்கொடுத்து
பஸ்ஸிலிருந்து இறங்கினான்
சுற்றி வந்து ஜன்னலோரம் நின்று
கையசைத்தான்

திரும்பி நடந்தான்
ஏதும் சொல்லாமல்

கீழுதடு அழுந்த
ஓர் அழுகை துடித்தது அவளுக்கு
வார்த்தைகள் வெட்டிக்கொண்டு
ரத்தம் கசிகிறது
கூடுதல் உப்பாக!

- இளங்கோ

பொழுது

வாசலில்
சைக்கிள் நிற்கிறது

சைக்கிள் நிழல் சரிந்து
வாசலில்கிடக்கிறது

நிமிர்ந்து நிமிர்ந்து நிழல்
சைக்கிளுக்கு வந்துவிடுகிறது

சரிந்து சரிந்து சைக்கிளையும் பின்
வாசலையும்கூடத் தாண்டுகிறது நிழல்

பிறகு சைக்கிள் மட்டுமே
வாசலில் நின்றுகொண்டு இருக்கிறது!

- பா.ராஜாராம்

மழை இரவு

இரவு பெய்த மழை
மழை பெய்த இரவு
இரண்டுக்குமிடையில்
எங்கோ தங்கி நிற்கின்றன
தெளிந்த பூமியும்
அது நனைந்த வாசமும்!

- ஸ்வரூப் மணிகண்டன்

புத்திசாலிகளுக்கான புதிர்

கடைசியில் ஒரு கேள்வி
மிஞ்சியது

பதிலை மாற்றி அமைத்துப்
பார்த்தேன்

ஒரு பதில் மிஞ்சியது

கேள்வியைப் பதிலாகவும்
பதிலைக் கேள்வியாகவும்
பொருத்திப் பார்த்தேன்

அப்பவும்
ஒரு கேள்வி - பதில்
மிஞ்சியது!

- பா.ராஜாராம்

தொட்டி மீன்

மனிதர்களற்ற வீட்டின்
தொட்டியினுள் சலனமற்று
வாழ்தலின் பொருட்டு
உலாவும் மீனுக்கு
சமுத்திரத்தின் சுதந்திரமோ
வலை நோக்கிய போராட்டமோ
எதுவாகினும்
தெரிவதில்லை!

- ராஜு

மௌனம்

தோளில் தட்டிக்கொடுத்து
பஸ்ஸிலிருந்து இறங்கினான்
சுற்றி வந்து ஜன்னலோரம் நின்று
கையசைத்தான்

திரும்பி நடந்தான்
ஏதும் சொல்லாமல்

கீழுதடு அழுந்த
ஓர் அழுகை துடித்தது அவளுக்கு
வார்த்தைகள் வெட்டிக்கொண்டு
ரத்தம் கசிகிறது
கூடுதல் உப்பாக!

- இளங்கோ

பொழுது

வாசலில்
சைக்கிள் நிற்கிறது

சைக்கிள் நிழல் சரிந்து
வாசலில்கிடக்கிறது

நிமிர்ந்து நிமிர்ந்து நிழல்
சைக்கிளுக்கு வந்துவிடுகிறது

சரிந்து சரிந்து சைக்கிளையும் பின்
வாசலையும்கூடத் தாண்டுகிறது நிழல்

பிறகு சைக்கிள் மட்டுமே
வாசலில் நின்றுகொண்டு இருக்கிறது!

- பா.ராஜாராம்

மழை இரவு

இரவு பெய்த மழை
மழை பெய்த இரவு
இரண்டுக்குமிடையில்
எங்கோ தங்கி நிற்கின்றன
தெளிந்த பூமியும்
அது நனைந்த வாசமும்!

- ஸ்வரூப் மணிகண்டன்

புத்திசாலிகளுக்கான புதிர்

கடைசியில் ஒரு கேள்வி
மிஞ்சியது

பதிலை மாற்றி அமைத்துப்
பார்த்தேன்

ஒரு பதில் மிஞ்சியது

கேள்வியைப் பதிலாகவும்
பதிலைக் கேள்வியாகவும்
பொருத்திப் பார்த்தேன்

அப்பவும்
ஒரு கேள்வி - பதில்
மிஞ்சியது!

- பா.ராஜாராம்

தொட்டி மீன்

மனிதர்களற்ற வீட்டின்
தொட்டியினுள் சலனமற்று
வாழ்தலின் பொருட்டு
உலாவும் மீனுக்கு
சமுத்திரத்தின் சுதந்திரமோ
வலை நோக்கிய போராட்டமோ
எதுவாகினும்
தெரிவதில்லை!

- ராஜு