Published:Updated:

மழைப் பேச்சு!

அறிவுமதிஓவியங்கள் : ம.செ, எஸ்.இளையராஜா

##~##

ருட்டலாம் உருளலாம் தாயம் விழும்போது விழட்டும்

 ள்ளியறை தப்பு பள்ளிக்கூடம்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

கழி தாண்டி மதில் தாண்டி பிரகாரம் சுற்றி
நந்தி தாண்டி கொடி மரம் தாண்டி தல விருட்சம் தாண்டி
சென்றால் வரும் கருவறை

நான்கு சுவர்களுக்குள்தான்
ஆனால் அதுவே சில சமயம் காடாக சில சமயம் கடலாக

ழைப்பு மணியை அழுத்தும் ஒலியிலேயே
அறிந்துகொள்கிறேன் அன்றைய உன்னை!

மழைப் பேச்சு!

த்துழைத்த உதடுகளுக்கு நன்றி முத்தம் எச்சில் சொற்கள்

மூடித் திற திறந்து மூடு இசை தரும் புல்லாங்குழல்

ந்த அழகான விடுமுறை நாளில்
இசை கேட்டுக்கொண்டிருந்த என்னையும்
படித்துக்கொண்டிருந்த உன்னையும்
இந்தச் சூழலுக்குக் கொண்டுவந்து நிறுத்தியிருக்கின்றன
முகர்ந்துகொண்டிருந்த இரண்டு எறும்புகள்!

விளக்கை அணைத்ததும் கிடைத்தது வெளிச்சம்

முடிந்துவிட்டது வா தொடங்கலாம்!

மழை ஓய்ந்த நேரம்!

ழையை
உங்களிடத்தில் ஓட்டி வந்தவன்
இதோ... மழை மேய்ச்சலுக்குப்
புறப்படுகிறேன்.

மழைப் பேச்சு!

இனி,
மழையில் நனைவதும்
மழையை
நனைப்பதும்
உங்கள் பாடு.

தும்பிகளாகி... சிட்டுகளாகி...
எறும்புகளாகி...
இழையும் இரு மூங்கில்களாகி
மழைப் பேச்சு
பேசிப் பாருங்கள்.

தெளிந்த நீரோடையின்
கீழ் இழைந்து நகரும்
இரு கூழாங்கற்களை
உற்றுப் பார்க்கையிலும்
கேளுங்கள்... மழைப் பேச்சு.

உடல்களின் தூய்மையும்
உயிர்களின் தூய்மையும்
சந்திக்கையில் தொடங்குகிறது
மழைப் பேச்சு.

மேன்மைப்படுத்துகிறோம் என்று
இதனைப்
பழச்சாறாக்கிப்
புளிக்கச் செய்துவிடாதீர்கள்.

இயல்பாய்... தண்ணீராக மட்டுமே
இதனை என்றும்
பருகப் பழகுங்கள்.

மிக மிக எளிமையாகப்
பேசிப் பழக வேண்டியதுதான்
இந்த மழைப் பேச்சு.

மிக... மிக... மிக... இயற்கையாக
நனைந்து நனைக்க வேண்டியதுதான்
இந்த மழைப் பேச்சு.

உயிர்ச் சங்கிலியை அறுபடாமல்
நீளச் செய்யும்
இந்த மழைப் பேச்சை...

சங்க அக இலக்கியப் பாடல்களின்
விரல்கள் பிடித்து...
வள்ளுவரின் மூன்றாம் பால் வரிகளின்
விரல் பிடித்து...
நடந்து பழகிய நம்பிக்கையில்தான்
தமிழ் செய்திருக்கிறேன்.

இதனை மிகச் சிறப்பாக...
ஓவிய அழகோடு
உலகத் தமிழர்களுக்கு
அறிமுகம் செய்துவைத்த
ஆனந்த விகடனுக்கு
என் அன்பான நன்றிகள்.

வாராவாரம் விகடன் படித்துவிட்டு
என்னை வாழ்த்திய
அன்பு உள்ளங்களுக்கும்
என் நன்றிகள்!

அன்புடன்
அறிவுமதி