Published:Updated:

சொல்வனம்

ஓவியம் : மார்த்தாண்டம் ராஜசேகரன்

மூடிய விழிகளில்...

சொல்வனம்

த்தமிட்டுவிடாதீர்கள் யாரும்
உறக்கத்திலிருக்கிறாள் என் மனைவி
சந்தடி செய்யாது நானும்
எதிரமர்ந்திருக்கிறேன்.
பளிங்கு வீடு வைரம் வாகனமெனப்
பட்டியலே வைத்திருந்தாள் காதலின்போது.
சொந்தமாய்ச் சிறுமனையும் பட்ட
கடனொழிந்தால் போதுமெனச்
சுருக்கியும்கொண்டாள் ஓர்நிலையில்.
வாடகை வீடு பல கடந்தும்
மணவாழ்வில் மத்திமம் தாண்டியும்
ஏலாத வரும்படியில்
எதுவும் வாய்த்ததில்லை
இருவருக்குள் கனக்கும்
சுணக்கம் தவிர...
மலையைச் சாய்ப்பதாய்
கடலைக் குடிப்பதாய்
அவளுக்காக அன்று
வாயளந்தவை மட்டும்
திறந்த அவள் கண்களில்
தினமும் சுடுகிறதென்னை.
அவளின் மூடிய விழிகளில்தான்
காதலை மட்காது காக்கும்
மன்னிப்பு கசிகிறது.
சத்தமிட்டுவிடாதீர்கள் யாரும்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

- தாண்டவக்கோன்

மன்னிக்கவும்

ண்ணாடி முன்னால் நிற்கும்போதே
கவனிக்கத் தொடங்கிவிடுகிறாள்
பேன்ட் ஷர்ட் அணியும்போது
உறுதிப்படுத்திவிடுகிறாள்
வண்டிச் சாவியை எடுத்தவுடன்
தவழ்ந்தோடி வந்து
காலைக் கட்டிக்கொண்டு
அண்ணாந்து பார்த்து
அழுது அடம்பிடிக்கிறாள்.

என்ன கூறி சமாதானம் செய்வது
என்பது தெரியாமல்
அவளோடு விளையாட ஆரம்பித்தேன்

மன்னிக்கவும்
இன்றைய என் வருகை
தாமதமும் ஆகலாம்
இல்லாமலும் போகலாம்!

- உழவன்

##~##

அரச மர அய்யனார்

ரொம்பத் துடியான சாமிடா
பேய் பிசாசெல்லாம் கிட்ட
அண்டவே அண்டாது
வெற்றிலையை இடித்துக்கொண்டே
பாட்டி ஒருமுறை சொன்னாள்.

ஒரு கரும் இரவில்
அய்யனாரின் குதிரை மீதேறி
புளியமரத்தில் நாண்டுக்கிட்டாள்
முக்குத் தெரு முனியம்மா.

சூடமேற்றக்கூட ஆளில்லாததால்
அரசமரத்தடிக்கு அய்யனார் வந்துவிட்டதாக
அக்னிசட்டியேந்திய வள்ளியம்மாள் சொல்கிறாள்.

- உழவன்

தீண்டப்படாதவை

ன்றும் சீண்டப்படுவதில்லை
பரீட்சைக்கு முக்கியமில்லா
கேள்விகள்

என்றும் அழுக்காவதில்லை
அவற்றின் பதில்களின்
பக்கங்கள்

என்றும் அவை பெறுவதில்லை
பரீட்சையில் வராமல் போனதற்கான
சாபங்களை

என்றும் அவை
வற்புறுத்துவதில்லை யாரையும்
தம்மை நினைவில்கொள்ள

என்றும் தொடர்பில்லை
அவற்றுக்கும்
படித்துக் கிழித்த
பக்கங்களுக்கும்!

- நரேஷ்குமார்

சொல்வனம்