Published:Updated:

நிலா கவிதைகள்

கவிதா பாரதி

 ##~##
ருநாள் கடலைக் காட்டி

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
கடல் என்றோம்
கல் என்று திருப்பிச் சொன்னாள்
பின்னொரு நாள் ஏரியைப் பார்த்து
கல் என்றாள்
வற்றிக்கிடந்த மணலைப் பார்த்தும்
கல் என்றாள்
மகிழ்ந்து சிரித்தது நதி!

வெள்ளம் வேணும்
என்கிறாள் அம்மாவிடம்
தண்ணி என்கிறாள் என்னிடம்
வாட்டர் என்று
சொல்லித்தருகிறோம் நாங்கள்!

பொம்மை கேட்டு அழுத
நிலாவுக்கு
வாங்கித் தந்தோம்
நிலா கேட்டு அழும்
பொம்மையை என்ன செய்ய?

ம்மூட்டிபோல்
நடித்துக் காட்டுகிறாள் நிலா
நிலாபோல் நடிக்க
மம்மூட்டிக்குத் தெரியுமா?

நிலா கவிதைகள்

பார்க்குக்குப் போகணும் என்றாள்
பார்க் ஊருக்குப் போயிடுச்சு என்றேன்
பீச் பாக்கணும் என்றாள்
பீச் பூட்டியிருப்பாங்க என்றேன்
பொய்யறியும் வயதில்லை
அவளுக்கென்பதால் நம்புகிறாள்
மன்னிப்பில்லாத மனிதக் குற்றம்
குழந்தைக்குச் சொல்லும்
பொய்கள்!

ள்ளிக்கு அனுப்பும்
முதல் நாளில் தொடங்குகிறது
குழந்தையைப் பற்றிய
அம்மாவின் அச்சம்!

ள்ளிகள்
குழந்தையைப் படிக்கும் நாளில்
உலகம் நாகரிகமடையும்!

பெண் குழந்தைகள் அலங்காரத்தையும்
ஆண் குழந்தைகள் அதிகாரத்தையும்
கற்றுக்கொள்கிறார்கள்
யாரும் சொல்லித்தராமலே!

குழந்தசாமி மகன்
என்கிறார்கள் ஊரில்
மனைவி வகையில்
தங்கத்தின்ட பர்த்தாவு
நிலா அப்பா என்கிறது
நண்பனின் குழந்தை!

கூடையைத் தலையில்
கவிழ்த்துக்கொண்டாள்
எதுக்குத் தலையில் கூடை என்றேன்
கூடையில்ல ஹெல்மெட்
என்றாள் அவள் மொழியில்
கைக்குட்டையைத் தலையில்
போட்டுக்கொண்ட
ஒரு நாளில் ஹெல்மெட்தானே என்றேன்
இல்ல துணி என்கிறாள்!

டைந்த பொம்மைகளையெல்லாம்
ஒட்டித் தருவார் அப்பா என
நம்பி உடைக்கும் நிலா
ஊருக்குப் போய்விட்டாள்
உடைந்து கிடக்கிறேன் நான்!