Published:Updated:

சொல்வனம்

சொல்வனம்

சொல்வனம்
சொல்வனம்
சொல்வனம்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
சொல்வனம்

பரம்பரை...

அப்பாவோட
தாத்தா பேரு
தாத்தாகூட
பொறந்தவங்க பேருன்னு
மொத்தப் பரம்பரையும்
அத்துப்படியாச்சு
அப்பா மேல
சித்தப்பா போட்ட
சொத்து வழக்கை
படிச்சுப் படிச்சு!

- க.ஆனந்த்

வலமும் இடமும்

கடவுளின் இடப் பக்கமாய்
கட்டண தரிசன வரிசை
கருவறைக்குள்
உற்றுப் பார்க்கிறேன்
கடவுள் சற்று
வலப் பக்கமாகத் திரும்பி நிற்கிறார்!

- உழவன்

சொல்வனம்

நிறம் மாறும் சுவர்கள்

நடிகர்கள் துப்பாக்கியோடு இருக்கும்
போஸ்டர்கள் ஒட்டப்பட்ட சுவர்களில்
மல்யுத்த வீரர்களும் சிலம்பாட்ட வீரர்களும்
சண்டையிட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.

பலான படங்களின்
போஸ்டர்கள் ஒட்டப்பட்ட சுவர்களில்
கண்டாங்கிச் சேலை அணிந்த
மூக்குத்திப் பெண்
மண் குடம் சுமக்கிறாள்.

சிறுநீரில் கரைந்துகொண்டு இருந்த
சுவர்களில்
அருவிகள்
பெருக்கெடுத்து ஓடுகின்றன.
வரட்டிகள் அப்பப்பட்ட சுவர்களில்
பூச்செடிகள்பூத்துக் குலுங்குகின்றன.

அரசியல்வாதிகளின் உருவங்கள்
வரையப்பட்ட சுவர்களில்
வள்ளுவரின் சிலை நிற்கிறது.

தன் காதலியின் பெயரை
நெஞ்சில் பச்சை குத்திக்கொள்பவனைப்போல
தமிழ்க் கலாசாரம் மிகுந்த
ஓவியங்களை வரையும்போது
போஸ்டர் எனும் சட்டை கழற்றி
நெஞ்சு நிமிர்த்திக் காட்டுகிறது
சென்னை நகரச் சுவர்கள்!

- கட்டளை ஜெயா

கடவுளின் நெருக்கம்!

பேட்டரி தீர்ந்து
டயர் உடைந்த ஒரு கார்
இரண்டு காதும் பிய்ந்த
ஒரு பூனை
பாட்டை நிறுத்திவிட்ட
ஒரு மியூஸிக் லாரி
காற்று போன
சாயம் வெளுத்த கால்பந்து
பாதி உடைந்த கிரிக்கெட் மட்டை
தன் தேடுதலில்
கிடைத்துவிடுகிறபோது
கடவுள் அன்று மட்டும்
தன்னருகில் இருப்பதாக
விசிலடித்து மகிழ்கிறான்
பழைய காகிதம் பொறுக்கும்
சிறுவன்!

- க.அம்சப்பிரியா

சொல்வனம்
சொல்வனம்
சொல்வனம்