Published:Updated:

சொல்வனம்

சொல்வனம்

சொல்வனம்
சொல்வனம்
சொல்வனம்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
சொல்வனம்
சொல்வனம்

மரணத்தின் குளிர்க் கரங்கள்...

விடியற்காலையில்
ஆல்பர்ட்டின் அகால மரணம்
தெரிவிக்கப்பட்டபோது
அதிர்ச்சியுடன்
ஆச்சர்யமும் கிளர்ந்தெழுந்தது

நேற்று நள்ளிரவு வரை
நானும் அவனும்
மொட்டை மாடியில்
மிதமான மது அருந்தி
மலையாள இலக்கியம்
பேசிக்கொண்டு இருந்தோம்

விடைபெறும்போது
சினிமாக்களில்போல
அச்சாணியமாக ஏதும்
அவன் சொல்லவில்லை
நிலை வாசல் படியில்
கால் இடித்துக்கொள்ளவும் இல்லை

மதுவின் கடைசித்துளி
அருந்துவதுபோல்
மிக ரம்மியமானதாக இருந்தது
அவன் விடைபெறல்

இன்று காலை எட்டு மணிக்கு
புதிய நூலகம் செல்லலாம் என
நினைவுறுத்தி
காற்றில் கையசைத்துக்
கிளம்பியவன்
அதற்குள் ஏன் இறந்துபோனான்?

தன் குளிர்க் கரங்களை நீட்டி
மரணம் அவனை
எதிர்கொண்டபோது
அவனுக்கு எப்படி இருந்திருக்கும்?

ஒருவேளை அதுவும்
ரம்மியமானதாகவே இருந்திருக்கலாம் -
மதுவின் கடைசித் துளி
அருந்துவதுபோல்!

- ஆர்.எஸ்.பாலமுருகன்

சொல்வனம்

இனிப்பு

மெடிக்கல் ஷாப்பில்
சில்லறைக்குப் பதிலாக
தூக்க மாத்திரைகளோடு கிடைத்த
ஒரு சாக்லேட்
என் தற்கொலை முடிவை
மறுபரிசீலனை செய்யவைத்தது!

\ கட்டளை ஜெயா

சொல்வனம்

வழி

தவளையை இரை எடுக்க
பாம்புக்கு
வழி காட்டக் கேட்கும்
சிக்கலான வரைபடம்
நான்கு வயது
இசபெல்லாவின் வசம்.

பாவம் தவளை என்று
வழி வரைய மறுத்து
அடம் பண்ணும் அவளிடம்
பேச வார்த்தைகள் இல்லை என்னிடம்
சிரிப்பது தவிர!

- ப.தியாகு

சொல்வனம்

பொம்மையம்மா

விருந்தினர் வருகை
நாள் எல்லாம் வேலை

'இன்னிக்கு க்ளாஸ்ல...'

'பக்கத்து வீட்டு நாய்க் குட்டி...'

'இந்த வீட்டுக் கணக்கு...'

முடிக்கும் முன்னரே

ஒவ்வொரு முறையும்
'அப்புறமா சொல்லுடா'
அன்பாய் தலை கலைத்து
அவசரமாக அடக்கிவிட்டு

வந்தவர்களைக் கவனித்து
வழியனுப்பிவைத்த பின்
திரும்பிப் பார்த்தால்
உறங்கிப்போயிருந்தது குழந்தை
பொம்மையை இறுக அணைத்தபடி!

\ ராமலக்ஷ்மி

சொல்வனம்
சொல்வனம்
சொல்வனம்