Published:Updated:

மிஸ்டு கால்! : மின்னல் ஜன்னல் தொடர்

மிஸ்டு கால்! : மின்னல் ஜன்னல் தொடர்

பிரீமியம் ஸ்டோரி
மிஸ்டு கால்! : மின்னல் ஜன்னல் தொடர்
மிஸ்டு கால்! : மின்னல் ஜன்னல் தொடர்
மிஸ்டு கால்! : மின்னல் ஜன்னல் தொடர்
ஷங்கர்பாபு
ஓவியங்கள்:ஸ்யாம்
மிஸ்டு கால்! : மின்னல் ஜன்னல் தொடர்

நான் கடை நடத்திய இடத்தின் முன்னாள் உரிமையாளரும் என் கடையின்

தற்போதைய ஊழியருமான போத்தி, தன் சீருடையைச் சரிசெய்வதையும் தொப்பி அணிவதையும் பார்த்தேன். 'என்னமா ஆட்டம் போட்டீங்க போத்தி... இப்பப் பாத்தீங்களா நிலைமையை? வாழ்க்கை தரும் பாடத்தில் பணிவும் அடக்கமும் தவிர்க்கவே முடியாத சிலபஸ் என்பது உங்களுக்கு இவ்வளவு லேட்டாப் புரிஞ்சிருக்கு!'

ஸைட்டர் தந்த நேரம் கரைந்துகொண்டே வருவதை உணர்ந்தேன். இன்னும் அறிய வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கின்றன. இன்னும் இந்த இடத்தில், பணியாளர்களின் ஓய்வு அறையில், போத்தியின் முன் என்ன வேலை? சுறுசுறுப்பு அடைந்தேன்.

'சினிமாவில் ஹீரோ 'ஓப்பனிங் ஸாங்'கைத் தடை செய்ய அரசாங்கம் பரிசீலனை. கதாநாயகர்கள் தங்களைத் தாங்களே தேவையின்றிப் புகழ்ந்து பாடல் பாடி, பொது மக்களை வெகுவாகக் குழப்பி வருவதாலும், இதற்கு மேலும் புகழ்ந்து எழுத முடி யாமல் கவிஞர்கள் படும் வேதனையைக் கருத்தில்கொண்டும் அரசாங்கம் ஹீரோ ஓப்பனிங் பாடலுக்குத் தடை விதிப்பதுபற்றிப் பரிசீலனை செய்ய இருக்கிறது!'என்று தொடர்ந்து பத்திரிகையை உரக்க வாசித்தான் போத்தியின் அருகில் இருந்த பணியாள்.

"நம்ம பொழப்ப நாம பார்போம்..." என்று பிளேட் ஒன்றை எடுத்தவாறு வெளியேறினார் போத்தி. எப்போது அவரைப் பார்த்தாலும், என்னிடம் எழும் நடுக்கமும் உதறலும் இப்போது என்னிடம் இல்லை. நிகழ்காலத்தில் அவரை எதிர்கொள்ளும்போது, ஒருவித துச்ச மனநிலையை அடைவேன் என்று நினைக்கிறேன். அந்த அறையை நீங்கினேன்.

மிஸ்டு கால்! : மின்னல் ஜன்னல் தொடர்

மீண்டும் என் 'ராஜு பிரியாணி ஷாப்'பை ஆசை தீர ரசித்து, காட்சிகளை முடிந்த அளவு சேகரித்து, கட்டட வளாகத்துக்கு வந்தேன். அப்போது காரில் ரவி கிளம்பிக்கொண்டு இருந்தான். காரின் கதவைத் திறக்க ஒருவர், லேப்டாப் சுமக்க ஒருவர்... இந்தக் கும்பல் சின்ன முதலாளிக்கே இவ்வளவு மரியாதை தந்தால், 'பெரிய முதலாளி'யை எப்படியெல்லாம் நடத்தும்? புளகாங்கிதம் அடைந்தேன்.

ரவியின் கார் புறப்படவும், பெரியவர் ஒருவர் "ரவி தம்பி... ரவி சார்..." என்று கூச்சலிட்டு ஓடி வரவும் சரியாக இருந்தது. அவரது அலறலுக்கு காரை நிறுத்தும் சக்தி இருக்கவில்லை.

அவர் ரவியை அணுக முடியாத ஏமாற்றத்தை விழுங்கிக்கொள்ளச் சிரமப்பட்டார். சோர்வுடன் அருகில் இருந்த சிமென்ட் இருக்கையில் அமர்ந்து ஆசுவாசப்படுத்திக்கொண்டார். ஓடி வந்த களைப்பில் மூச்சு வாங்கினார். அவரை அடையாளம் கண்ட ஒருவர் "என்னாச்சு சார்? ஏன் இப்படி ஓடி வர்றீங்க?" என்று கேட்டார்.

"இன்னிக்காவது இவனைப் பிடிச்சிரலாம்னு பார்த்தேன்... முடியல" என்றார் மூச்சு வாங்கியவர்.

"இவனா? சின்ன முதலாளி ரவியையா இப்படிப் பேசறீங்க?"

மிஸ்டு கால்! : மின்னல் ஜன்னல் தொடர்

"உங்களுக்குத்தான் சின்ன முதலாளி, பெரிய முதலாளி எல்லாம். இன்னிக்கு இவனுக எல்லாம் பெரிய ஆட்களா இருக்கலாம். ஒரு காலத்தில் இவனுக என் ஸ்டூடன்ட்ஸ்... தெரியும்ல!" என்றார் ஓடி வந்தவர் பெருமையுடன். "ஆனா, நாம என்ன சொன்னாலும் கேக்காத உயரத்துக்கு அவங்க போய்ட்டாங்க!"

இப்போது நான் ஓடி வந்தவருக்கு நேர் எதிரில் இருந்தேன். இவர்... இவரை எங்கோ... அட, நம்ம எட்வின் வாத்தியார்!

"ராஜு, நீ உருப்படவே போவதில்லை. கடையை மூடிட்டு சுவர்களில் நோட்டீஸ் ஒட்டியாவது முன் னேறும் வழியைப் பார்..." என்றெல்லாம் என் தன்னம்பிக்கையைத் தற்கொலைக்குத் தூண்டியவர். என் முயற்சிகளைக் கேலி செய்த குரல்களில் உரத்த குரலுக்குச் சொந்தக்காரர். கணித மேதை. அவருக்கு இங்கு என்ன வேலை? ரவியை ஏன் தேட வேண்டும்? அவர் பேசுவதைக் கவனித்தேன்.

"இந்தப் பய ரவி... அவன் அண்ணன் ராஜு... இவங்க எங்கே முன்னேறப் போறாங்கன்னு ஒரு காலத்துல நினைச்சிருக்கேன். என்னோட மாணவன் வீணாப் போயிடக் கூடாதேங்கற கவலைல, அறிவுரைங்கிற பேர்ல ராஜுவை என்னென்னவோ சொல்லி இருக்கேன். நான் கணிச்சா, சரியா இருக்கும்னு எனக்கு அப்படி ஒரு நம்பிக்கை. இப்போ இதே ஹோட்டல்ல, என் மகனுக்கு வேலை போட்டுத் தரச் சொல்லி, கூனிக் குறுகி நிக்கிறேன். என் மகன் பி.இ., படிப்பில் 79 சதவிகிதம்தான். 80-க்கு மேல இருந்தாத்தான் இந்த ஹோட்டல்ல ப்ளேஸ்மென்ட்டாம். அதான் ப்ராப்ளம்!"

"அது சரி!"

"யாரையும் புண்படுத்தக் கூடாது சார். எந்தக் கரித்துண்டு வைரமா மாறி ஷோரூம்ல ஜொலிக்கப்போவுதுன்னு யாருக்குத் தெரியும்!" என்றார் எட்வின் வாத்தியார். என்னால் நம்ப முடியவில்லை. எட்வின் வாத்தியார் என்னைப் புகழ்கிறார்! இன்பங்களில் சிறந்த இன்பம் பணத்தை எண்ணுதலோ அல்லது பெண்களை உண்ணுதலோ அல்ல; நிகழ்காலமனிதர் களையும், அவர்களின் வார்த்தைகளையும் எதிர் காலத்தில் சந்திக்கவும் முடியாது; தேடவும் முடியாது என்கிற தத்துவத்துக்கு அதிபதி ஆனேன். எப்படியும் பதிப்பகங்கள் என் வாழ்க்கைச் சரிதத்தைக் கேட்கும். மேற்படி கருத்தை எடுத்துவிட வேண்டும்.

நிறைவாக இருந்தேன். எதிரில் வருகிற எல்லோருடனும் கை குலுக்க, சந்தியாவைத் தேடிச் சென்று முத்தமிட, இந்த மக்கள் முன் திடீரென என் மாய உருவம் நீங்கி, அவர்கள் அலறுவதைப் பார்க்க, ஓ...வென்று கத்த... இதுவரை அனுபவித்தறியாத சந்தோஷம்!

அப்போதுதான் அந்தப் பெண்ணைப் பார்த்தேன்!

அந்தப் பெண் போக்குவரத்து மற்றும் சாலை விதிகளைப் புறக்கணித்து, பரபரப்பான சாலையின் நடுவில் சென்றுகொண்டு இருந்தாள். விரைந்த கார்களும் பைக்குகளும் அவளால் 'க்ரீச்' சத்தத்துடன் தங்களது வேகத்தைக் கட்டுப்படுத்தின. ஓரிரு வாகன ஓட்டிகள் அவளைத் திட்டிச் சென்றார்கள். எதையுமே அவள் பொருட்படுத்தவில்லை. ஏனென்றால் அவளது மனநிலை பாதிக்கப்பட்டு இருந்தது.

எனவே மனிதர்களின் வசவுகள், வாகன வேகம், இரைச்சல், சூரியனின் வெப்பம்... இவற்றை மீறி அவளது - சாலை மற்றும் உலகமே என்னுடையது - மனநிலை தந்த சுதந்திர நடை தொடர்ந்தது.

அவளாகவே நான் இருந்த திசைக்கு வந்து, என்னைக் கடந்து சென்றதால், என்னால் அவளை நன்றாகப் பார்க்க முடிந்தது. அவளுக்கு 35 அல்லது 36 வயது இருக்கலாம். குளித்துப் பல காலம் ஆகி இருந்ததால், அவள் உடம்பில் ஏறியிருந்த அழுக்கு, சிக்குக் கூந்தல், கறுப்படைந்த முகம், யாரோ அணிவித்திருந்த சட்டையில் ஆங்காங்கே கிழிசல்கள், கையில் ஓர் அழுக்கு மூட்டை.

பெண்மை சார்ந்த அவளது நாணங்கள் அந்த அழுக்கு மூட்டையிலேயே சிறைப்பட்டு இருக்க வேண்டும். எனவே, வெளியே தெரிந்த அவளது அங்கங்கள்பற்றி அவளால் கவலைப்பட முடியவில்லை. தனக்குள் ஏதேதோ பேசியவாறு அவள் நடக்க... இவளை நிச்சயமாக எங்கோ பார்த்திருக்கிறேன்... எங்கே?

கொஞ்சம் யோசித்தால் அல்லது அவளது முகத்தை இன்னொரு முறை உன்னிப்பாகக் கவனித்தால், அவளை அடையாளம் கண்டுவிடலம் என்று தோன்றியதில், அவள் பின்னால் சென்றேன்.

அவளது வாயில் இருந்து தொடர்பற்ற வார்த்தைகள் வெளி வந்துகொண்டே இருந்தன. அவ்வப்போது யாரோ அவள் முன்னால் நிற்பதாகப் பாவித் துக்கொண்டு சீரியஸாகப் பேசினாள்; திட்டினாள். திடீரென நின்றாள். கையில் இருந்த துணி மூட்டை யைத் தரையில் போட்டாள். நொடிப்பொழுதில் அருகில் இருந்த குப்பைத் தொட்டி அருகே அமர்ந்து, ஓரமாக வீசப்பட்டு இருந்த எச்சில் இலை களை வழித்து உண்ணத் துவங்கினாள். ஓரிரு இலை கள் அவளை ஏமாற்றினாலும், மனம் தளராமல் அடுத்த இலைகளைத் தேடுவதற்கு அவளது பசித்த வயிறு அவளுக்குக் கற்றுக்கொடுத்திருந்தது.

எங்கிருந்தோ அவளுக்குப் போட்டியாக எச்சில் இலைகளைக் கைப்பற்ற இரண்டு நாய்கள் வந்து சேர்ந்தன. ஆனால், அவளோ நாய்களை விரட்டி அடிப்பதில் மிகுந்த திறமை பெற்றிருந்தாள்.

மிஸ்டு கால்! : மின்னல் ஜன்னல் தொடர்

அவளுக்கும் நாய்களுக்கும் இடையே நடந்த உணவுக்கான போராட்டத்தால் நான் பதறிப்போனேன். கடவுள் வேண்டுமானால் இந்தக் கொடுமைகளைப் பார்த்துக்கொண்டு இருக்க முடியும். எனக்கு அந்த அளவு சக்தி இல்லை என்பதால், அங்கிருந்து நழுவ விரும்பினேன். இதற்குள் அருகில் சென்று, அவள் யாரென்று அறிய நான் எடுத்த முயற்சிகள் தோல்வி அடைந்திருந்தன. அவளது குனிந்த தலை நிமிரவில்லை. நிமிர்ந்த கணங்களில், அவளது தலைமுடி முகத்தை மறைத்தது. சரி, இவளைத் தெரிந்து நான் என்ன செய்யப்போகிறேன்? இவள் யாராக இருந்தால் எனக்கு என்ன? நான் ஒரு புகழ் பெற்ற உணவு நிறுவனத்தின் உரிமையாளர்... என்று முடிவெடுத்து நகர்கையில், அவள் அந்தச் செயல் புரிந்தாள்.

பசிப் பிரச்னையை முடித்துக்கொண்டு, மூட்டையுடன் கிளம்பிய அவள், மின்னல் வேகத் தில் தான் அணிந்து இருந்த சட்டையைக் கழற்றி எறிந்தாள். வெற்று உடம்புடன் வேகமாக நடக்கத் துவங்கினாள். சட்டென வெளிப்பட்ட அவளது அரை நிர்வாணம் சுற்றியிருந்த அனை வரையும் தாக்கியது!

அப்போது...

மிஸ்டு கால்! : மின்னல் ஜன்னல் தொடர்
மிஸ்டு கால்! : மின்னல் ஜன்னல் தொடர்
call waiting...                             
      
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு