Published:Updated:

மிஸ்டு கால்! : மின்னல் ஜன்னல் தொடர்

மிஸ்டு கால்! : மின்னல் ஜன்னல் தொடர்

பிரீமியம் ஸ்டோரி
மிஸ்டு கால்! : மின்னல் ஜன்னல் தொடர்
மிஸ்டு கால்! : மின்னல் ஜன்னல் தொடர்
மிஸ்டு கால்! : மின்னல் ஜன்னல் தொடர்
ஷங்கர்பாபு
ஓவியங்கள்:ஸ்யாம்
மிஸ்டு கால்! : மின்னல் ஜன்னல் தொடர்

ன நிலை தவறிய அந்தப் பெண் தன் மேல் சட்டையை முற்றாகக் கழற்றி வீசிவிட்டு

சாலை சந்திப்பில் நின்றாள். நாகரிகம் மிக்க மாந்தர் சிலர் தலை குனிந்தும், வேறு திசை பார்த்தும் சென்றனர். வக்கிரம்கொண்ட சிலர் ரசித்து நின்றனர். விசிலும் குஷாலுமாக அவளுக்கு எதிரே ஓர் இளைஞர் கூட்டம். 'ஐயோ, அந்தக் கும்பல் வக்கிரமாக ஏதேனும் செய்துவிடக் கூடாதே!' என்று என் உள்ளம் உதறியது. அந்தக் கும்பலின் தலைவன்போல் இருந்த வன், "டேய் விமல்... உன் டி-ஷர்ட்டைக் கழட்டுடா... இந்தப் பொண்ணுக்குப் போட்டுவிடுவோம். சட்டைன்னாதான் அடிக்கடி கழட்டி வீசும்!" என்று சொல்லவும், கும்பலில் இருந்து ஒருவன் தன் டி-ஷர்ட்டைக் கழட்டினான். வாகாக அவளுக்கு டி-ஷர்ட் அணிவித்து, "கழத்தக் கூடாது, என்ன..." என்று சொல்லவும் அவள் சரியென்று தலையாட்டினாள். எனக்கு அந்த இளைஞர்களை நினைத்துப் பெருமை யாக இருந்தது.

அந்தப் பெண்ணின் பரிதாப நிலையை நினைத்து வருத்தமாக இருந்தது. பாவம்! வாழ வேண்டிய பெண். ஐயோ, இவளிடம் இருந்து நான் விடுபட்டாக வேண்டும். சீக்கிரம்!

அப்போது மூடப்பட்டு இருந்த ஒரு வீட்டின் முன்பு கூடியிருந்த பெருங்கூட்டத்தைப் பார்த்தேன். கூட்டத்தினர் ஏதோ முழக்கமிட, போலீஸ் அவர்களை விசாரித்துக்கொண்டு இருந்தது. சுவாரஸ்யமடைந்து, அருகில் சென்று கவனித்தேன்.

மிஸ்டு கால்! : மின்னல் ஜன்னல் தொடர்

"என்னய்யா பிரச்னை... யாராவது ஒருத்தர் பேசுங்க!" - என்றார் போலீஸ்காரர்.

"ஏமாத்திட்டு ஓடிட்டாங்க... ஏகப்பட்ட பணம் போச்சுங்க!"

"எப்படி ஏமாத்தினான்?"

"முப்பதே நாள்ல..."

"...லட்சாதிபதியா மாத்திக் காட்டறேன்னு ஏமாத்திட்டானா?"

"இல்லீங்க... முப்பதே நாள்ல எங்களை ஞானிகளாக்கிக் காட்டறேன்னு சொல்லி, பணத்தைப் புடுங்கிட்டுத் தலைமறைவாகிட்டானுங்க!"

"ஞானிகளா?" என்றார் போலீஸ்காரர் வியப்புடன்.

"ஆமாங்க... சாதா ஞானிகளாக்கிறதுக்குக் கட்டணம் மூணு லட்சம். சூப்பர் ஞானிகளுக்கு நாலு லட்சங்க. பிரம்ம ஞானிகளா மாறணும்னா, அஞ்சு லட்சம்ங்க. ஐயா, எப்படியாவது எங்க பணத்தை வாங்கிக் கொடுங்க!"

"டேய்... முதல்ல ஞானிங்க, சூப்பர் ஞானிங்க, பிரம்ம ஞானிங்க... எல்லாம் தனித் தனியாப் பிரிஞ்சு நில்லுங்க. யோவ், எண்ணுய்யா!"

இப்போது சாதா, சூப்பர், பிரம்ம ஞானிக்கள் பிரிந்து நின்றார்கள். பரிதாபக் களை அனைவரிடமும் சொட்டியது. ஓரிருவர் கையில் ஓடிப்போன கம்பெனி வழங்கி இருந்த ஃபைல்கள். அதில் 'சாமியார் தொழிலில் ஈடுபடுங்கள்; சகலமும் பெறுங்கள்!' என்ற எழுத்துக்கள்.

மிஸ்டு கால்! : மின்னல் ஜன்னல் தொடர்

"பாருங்க, எப்படியெல்லாம் ஒருத்தன் ஏமாத்துறான்னு. எவன் எதைச் சொன்னாலும் நம்பிட வேண்டியது. அவ்வளவுதானா, இன்னும் யாராவது ஞானிங்க இருக்காங் களா?"

"இன்னும் ஒருத்தர் இருக்காருங்க. 10 லட்சம் இழந்திருக்காருங்க..."

"அவனும் லைன்ல வந்து நிக்கட்டும்."

"வெளியே வர முடியாத நிலைல அவர் இருக்காருங்க. வெக்கப்படறாருங்க."

"ஏன்?"

"அவர் முற்றும் துறந்த ஞானிங்க!"

எத்தனையோ பேர், எப்படியெல்லாமோ ஏமாற்றியும் இந்த ஜனங்கள் திருந்துகிற மாதிரி தெரியவில்லையே. ஆனால், ஸைட்டர் போன்றோர் ஓசை இன்றி சேவை செய்து வருகிறார்கள். ஆமாம், நிகழ்காலம் திரும்பியதும் அவருக்கு எவ்வளவு கட்டணம் கொடுக்கலாம்? வசதி வந்ததும் கணிசமாகப் பணம் வழங்க வேண்டும். அவர் தந்த நேரம் சுருங்கிக்கொண்டே வருகிறது. ஆமாம், பிறவிப்பெருங் கடல் நீந்துகிற உற்சாகத்தில் என்னைத் திரும்ப அழைக்க மறந்துவிடக் கூடாதே! நான் பத்திரமாகத் திரும்ப வேண்டுமே. அவர் சொன்ன மந்திரத்தை இப் போதே உச்சரித்து நிகழ்காலம் திரும்பிவிட்டால், என்ன?

ஆமாம், இந்த ஷோ ரூமில் என்ன கூட்டம்? நன்கு அலங்கரிக்கப்பட்டு இருந்த அந்தக் கடை அருகே சென்றேன். உள்ளேயிருந்து வெளிவந்த ஒருவர், "அப்பாடா, ஒருவழியா ரிஜிஸ்டர் பண்ணியாச்சு" என்றார் சந்தோஷமுடன். அவருடன் வந்தவர் "நம்பவே முடியலீங்க... சைக்கிள் வாங்க முன்பதிவு செய்ய க்யூல நிக்கறோம்!" என்றார்.

"ஆமா, எல்லாரும் கார் வாங்கியாச்சு. ஒவ்வொரு வீட்லயும் நாலஞ்சு கார். ஊர்வலம் மாதிரி போய்ச் சேர்றதுக்குள்ள போதும் போதும்னு ஆயிருது. காரை பார்க் பண்ண இடம் கிடையாது. அதனால இப்ப எல்லோரும் சைக்கிளுக்கு மாறிட்டு இருக்காங்க. சைக்கிளுக்கு டிமாண்ட் அதிகமாகிப்போச்சு. எனக்கு எப்படியும் சைக்கிள் ஆறு மாசத்துல வந்திரும்!"

"இன்னிக்கு 50 பேருக்குத்தான் சைக்கிள் கிடைக்குமாம்... அதிர்ஷ் டசாலிங்கப்பா!"

என்னிடம் இருக்கும் ஓட்டை சைக்கிளைத் துடைத்துவைக்க வேண்டும்!

அப்போதுதான் கவனித்தேன்... அட, இந்தத் தெருவில்தானே அயோக்கியன் வினோத் என்னை மிரட்டினான்? காய்கறிக் கடையில் இருந்து பணத்தை அவன் திருடியதாகக் காட்டிக் கொடுக்காமல் இருக்கக் கெஞ்சினான்? என்னிடம் பேரம் பேசினான்?

டேய் வினோத், அயோக்கியனே, நான் நிகழ்காலம் திரும்பியதும் நாளை நடக்கப்போகும் கட்டப் பஞ்சாயத்தில் உனக்குத் தண்டனை வாங்கிக் கொடுத்து, திருப்பதியின் பணத்தை மீட்பேன். திருப்பதியைக் காப்பாற்றியே தீரு வேன். நான் இப்போது எவ்வளவு பெரிய ஆள் தெரியுமா? வாழ்க்கை என்னை எவ்வளவு உயரத்துக்குக் கொண்டுசென்றிருக்கிறது என் பதை நீ அறிவாயா? நஷ்டத்தில் ஓடும் கடைக்கு வாடகை கொடுக்க முடியாமல் விரக்தியில் இருந்த ராஜுவைத்தானே உனக்குத் தெரியும்? நான் இப்போது...

அப்போது மைக் குரல் கதறியது. "நம் ஷோரூமில் முதல் சைக்கிளை விற்பனை செய்து, நமக்குப் பெருமை சேர்க்க மாண்புமிகு மத்திய அமைச்சர் அவர்கள்வந்து கொண்டு இருக்கிறார்கள்!"

"மினிஸ்டர் வந்துட்டாரு" என் றெல்லாம் குரல் கேட்க, சூழலில் பரபரப்பு ஏற்படுத்தி, கை கூப்பி முன்னேறும் மந்திரியைப் பார்த்து அதிர்ந்தேன். அது - வினோத்!

வினோத், திருப்பதியின் காய்கறிக் கடையில் கடைசி எடுபிடியாக வேலை பார்த்தபோது, அவன் வெளிப்படுத்திய அதே சிரிப்பு; அதே கைகூப்பல். "மத்திய அமைச் சர் வினோதன் வாழ்க!" கோஷங் களைத் தொடர்ந்து அவர் மேடைக்கு வந்தார். அருகில் பணக்காரத்தன்மையுடன் அவரது மனைவி. மைக் அருகே வந்து, "என் சக சமூக விலங்குகளே!" என்றதும் ஒரே கைத்தட்டல்.

பிரமித்தேன். கட்டை வண்டியில் ஓசி லிஃப்ட் கேட்டுக் கதறியவனை வாழ்க்கை ஹெலிகாப்டரில் அனுப்பி இருக்கிறது. யானைகள் இன்னும் மாலைகளுடன் மரத்தடியில் தூங்கிக்கொண்டு இருப்பவர்களைத் தேடி அலைந்துகொண்டே இருக்கின்றனவோ!

வினோத், பன்னாட்டு கம்பெனியின் தரமான சைக்கிளை விற்பனை செய்தார். அவரது மனைவியும் ஓரிரு சைக்கிள்களை வழங்கினார். தம்பதியின் பின்னால் பாதுகாவலர்கள், அருகில் வெள்ளுடை மேன்மக்கள், உதவியாளர்கள், டி.வி. கேமராக்கள், பத்திரிகையாளர்கள், தொண்டர்கள், கோஷங்கள்...

எல்லாம் பதவி, அதிகாரம்!

விழா முடிந்ததும், கடையின் இன்னொரு பகுதிக்கு வினோதன் அழைத்துச் செல்லப்பட்டார். நான் ஸைட்டர் அளித்த நேரம் குறைந்துகொண்டே வருவதை உணர்ந்தவாறு, அவர்களைப் பின் தொடர்ந்தேன்.

பாதுகாவலர்கள் தள்ளி நின்றார்கள். விழாக் குழுவினர் சிற்றுண்டி வகையறாக்களால் உபசரித்து, மாண்புமிகு தம்பதிகளை தனியேவிட்டுச் சென்றார்கள். இப்போது வினோத்தும் அவன் மனைவியும் தேநீர் கோப்பைகளை எடுத்துக்கொண்டார்கள்.

"என்ன யோசனை?" என்றாள் திருமதி வினோத்.

"இல்ல, பழசை நினைச்சுப் பார்த்தேன். இதே தெருவுல 14 வருஷத்துக்கு முன்னாடி

மிஸ்டு கால்! : மின்னல் ஜன்னல் தொடர்

ராஜுகிட்ட - அதான் ராஜு பிரியாணி ஷாப்... கெஞ்சினேன்... நேத்துதான் நடந்த மாதிரி இருக்கு."

"---------"

"திருப்பதி காய்கறிக் கடைல இருந்து மூணு லட்ச ரூபாயைத் திருடியதைப் பார்த்த ஒரே சாட்சி ராஜுதான். இந்த நிலைல கட்டப்பஞ்சாயத்து கூடப்போவுது. நான் பயத்தை மறைச்சுகிட்டு ராஜுகிட்ட என்னைக் காட்டிக்கொடுக்க வேண்டாம்னு கெஞ்சினேன், மிரட்டினேன். ஆனா, மறுநாள் அவன் என்ன பண்ணான் தெரியுமா?" என்று கேட்டு நிறுத்த...

அவன் மனைவிக்கும் அவளை விட அதிகமாக எனக்கும் எதிர் பார்ப்பு எகிறியது!

மிஸ்டு கால்! : மின்னல் ஜன்னல் தொடர்
மிஸ்டு கால்! : மின்னல் ஜன்னல் தொடர்
                            
      
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு