Published:Updated:

சொல்வனம்

சொல்வனம்


.
சொல்வனம்
சொல்வனம்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
சொல்வனம்
சொல்வனம்

குழந்தையும் சுமையும்

பீனூ... புத்தகங்களுக்கு
அட்டை போட்டுவிட்டதாகவும்

அட்டை போடாத அனுஷா
பெஞ்ச் மீது
நிறுத்தப்பட்டதாகவும்

நாளை தானும்
முட்டிக்கால் போட
வேண்டியிருக்குமென
அழுது அடம்பிடித்தாள்
4-ம் வகுப்பு 'சி' பிரிவு
செல்லும் மகள்.

இரவோடு இரவாக
அணிவித்த அழகான
அட்டைகளோடு

புத்தகங்கள்
குழந்தைகளாகவும்

சுமந்து சென்ற
குழந்தையோ
அட்டை அணியாத

சொல்வனம்

புத்தகம் போன்றும்
மாறி இருந்தார்கள்
அடுத்த நாளில்!

- க.பாலபாரதி

அறிக்கை

கை கால் அலம்பி
முந்தி வருவது
யார் பார்க்கலாம் என
அம்மா சொன்னதும்
ஜெயித்தான் அண்ணன்.

சிந்தாமல் சீக்கிரம்
சாப்பிடப்போவது யாரு போட்டியில்
வென்றாள் சித்தி மகள்.

பின்னர்
எதுவும் சொல்லும் முன்பே
ஓடி கம்பளி புகுந்து
குட்டிப் பாப்பா சொன்னாள்
நான்தான் முதலில் தூங்கினேன் என்று!

- ஜான்சுந்தர்

வாகனம்

விநாயகர் எலியோடும்
முருகன் மயிலோடும்
சிவன் எருதோடும்
பிரம்மன் அன்னத்தோடும்
ஐயப்பன் புலியோடும்
மன்மதன் கிளியோடும்
சனிபகவான் காகத்தோடும்
எமன் எருமையோடும்
கிருஷ்ணன் பருந்தோடும்
இந்திரன் வெள்ளை யானையோடும்
கள்ளழகர் குதிரையோடும் வந்து
ஹீரோ ஹோண்டா நிறுவனத்தில்
எக்ஸ்சேஞ்ச் ஆஃபரில்
பழைய வாகனத்துக்குப்
புதிய வாகனம்
வாங்கிச் சென்றிருக்கிறார்கள்.
ஹெல்மெட் அணிந்துகொண்டு
நடுரோட்டில் கிக்கரை உதைத்துக்கொண்டிருப்பவரையும்
லைசென்ஸ் இல்லாமல்
மாட்டிக்கொண்டு விழிப்பவரையும்
ரெட் சிக்னலை
மதிக்காமல் செல்பவரையும்
முன் வாகனத்தின் மீது மோதி
திட்டு வாங்குபவரையும் கண்டால்
அந்தக் கடவுள்களில்
ஒருவராகவே எண்ணுகிறேன்!

- கட்டளை ஜெயா

கிருஷ்ண லீலை

நடன ஒத்திகை ஒன்றில்
கிருஷ்ண வேடம் அணிந்த
பொடியன்
அழுதுகொண்டு இருந்தான்

என்னவென்று விசாரிக்கையில்
ராதைக்கும் அவனுக்கும்
கெமிஸ்ட்ரி சரியில்லையாம்

அனுப்பிவிட்டார்களாம்
அழுதபடியே மேடையைக்
காட்டினான்

விடிய விடிய கதை கேட்டவன்
ராமருடன் ஆடிக்கொண்டு இருந்த
ராதையைப் பார்த்து
அதிர்ந்தேன்!

- என்.விநாயக முருகன்

குறுஞ்செய்திகள்

மணிக்கொரு
குறுஞ்செய்தியேனும் கைபேசியில்
வந்துகொண்டேதான் இருக்கிறது.

ஒன்றுக்கும் மேல் அவை
வரும்போது மாலையோ
அல்லது
இரவு நேரமாகக்கூட
இருக்கலாம்.

சில பெயர் தாங்கியும்
சில எண் மட்டும் தாங்கியும்
சொல்லாமல் வருகின்றன
நீர்க்குமிழிபோல்.

யாரேனும் ஒரு
குறுஞ்செய்தி எழுதி
காற்றில் எறிந்துகொண்டேதான்
இருக்கிறார்கள்.

சிரிப்பும் அழுகையும்
காதலும் நட்பும்கூட
அதில் கலந்திருக்கலாம்.
அவை முகில்களின் நடுவே
பறந்து திரிகின்றன

யாருக்கும் தெரியாமல்
கடித்தவுடன் எறும்பை
நசுக்கிவிடுவதுபோல்.
குறுஞ்செய்திகளைக் கண்டதும்
எனது கட்டை விரல் அவற்றை
அழித்துவிடுகிறது படிக்காமல்.

அதில் உன்னை
ஞாபகப்படுத்தும்
அழகானதொரு
குறுஞ்செய்தியும்
இருந்திருக்கலாம்!

- சாந்த மணிவண்ணன்

சொல்வனம்
சொல்வனம்
சொல்வனம்