Published:Updated:

மிஸ்டு கால்! : மின்னல் ஜன்னல் தொடர்

மிஸ்டு கால்! : மின்னல் ஜன்னல் தொடர்

மிஸ்டு கால்! : மின்னல் ஜன்னல் தொடர்

மிஸ்டு கால்! : மின்னல் ஜன்னல் தொடர்

Published:Updated:

மிஸ்டு கால்!
மிஸ்டு கால்! : மின்னல் ஜன்னல் தொடர்
மிஸ்டு கால்! : மின்னல் ஜன்னல் தொடர்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மின்னல் ஜன்னல் தொடர்
மிஸ்டு கால்! : மின்னல் ஜன்னல் தொடர்
ஷங்கர்பாபு

மிஸ்டு கால்! : மின்னல் ஜன்னல் தொடர்

முன்பின் தெரியாத ஓர் ஆசாமியைத் தேடிச் செல்வதை நினைத்துப் பரிதாபமும் வெட்கமும் அடைந்தேன். என்ன செய்வது... எனக்குத் தேவை என் பிரச்னைகளைக் கேட்க ஒரு ஜோடிக் காதுகள். அதன் மூலம் கொஞ்சம் ஆறுதல்; சிறு மீட்சி; குண்டூசி முனையளவு நிம்மதி.

இவற்றைத் தரக்கூடிய சந்தியா தற்போது தொடர்பு எல்லைக்கு அப்பால் இருக்கிறாள். தவிர, குணாவால் முடியும். ஆனால், அவன் இப்போது அவனுடைய இறுதி நிமிடங்களில் இருக்கிறான். நான் எனக்குத் தெரிந்தே என் இறுதி சுவாசங் களை நிகழ்த்திக்கொண்டு இருக்கிறேன். ஜோசப் என்னைக் கொலை செய்வதில் இருந்து தப்பிக்க ஒரு வழி இருக்கிறது என்றால், அந்த வழி இப்போதே நான் தற்கொலைசெய்துகொள்வதுதான்!

அதிர்ச்சியில் உடலும் மனமும் உறைந்துபோயின. நாளை இவ்வளவு நேரம் இந்த உலகில் இருக்க மாட்டேன் என்ற எண்ணம், என்போன்ற ஒரு சாமானியனை பைத்தியம் பிடிக்கச் செய்யாமல் இவ்வளவு நேரம் இருப்பதே பெரிது. எனவே, ஃபிகரர் எனத் தன்னை அறிமுகம் செய்துகொண்ட மனிதரைப் பார்க்கச் செல்வதில் எனக்கு எவ்விதத் தயக்கமும் இல்லை. அவர்தான் அத்தனை உறுதியான குரலில், 'பிரச்னைகள்ல இருந்து தப்பிக்கணுமா? கவலைகள் புஸ்வாணம் ஆகுமே!' என்றெல்லாம் சொல்லியிருக்கிறாரே.

ஒருவேளை கைரேகை, ஜோசியம் பார்ப்பவராக இருப்பாரோ? சிறிது உற்சாகம் அடைந்தேன்.

ஊரைவிட்டுத் தள்ளி இருந்தது அந்த வசதியான வீடு. எத்தனை நாளாக ஃபிகரர் இங்கு இருக்கிறார்? எப்போது வந்தார்? வியந்தவாறே நெருங்கும்போது அவர் யாரிடமோ போனில் பேசுவது கேட்டது. 'லக் தட்டும்போது லாக் செய்வாரும் உண்டோ?'

''..................''

''எந்தப் பிரச்னைல இருந்தும் எங்க லீடரால் உங்களை விடுவிக்க முடியும். உங்க பிராப்ளம்ஸ் தூள் தூளா நொறுங்கிக்கிடக்கிறதை நீங்களே பார்ப்பீங்க. உங்களை மாதிரி வாலிபர்களுக்கு இந்த வயசுல ஏற்படக்கூடிய உடல் காதல், உள்ளக் காதல்; இதர சிற்றின்பப் பிரச்னைகள், வேலையில்லாத் திண்டாட்டம், வேலையால் திண்டாட்டம்... ஐயையோ, ஒவ்வொரு மாதமும் பிரதி 5-ம் தேதி லாட்ஜ்ல வந்து சிகிச்சை அளிக்கிற டாக்டர் இல்லீங்க நாங்க... அதுக்கும் மேல... வெச்சிடறேன். ஏன் திட்டறீங்க?''

''....................''

மிஸ்டு கால்! : மின்னல் ஜன்னல் தொடர்

''சரி, இந்த நம்பருக்கு போன் பண்ணுவோம். தம்பி, எங்கள் லீடர் பெருமைமிகு ஸைட்டர் காத்திருக்கிறார்... அரிய வாய்ப்பு; அற்புதமான சந்தர்ப்பம்...'' என்று துவங்கும்போது ''ஐயா...'' என்றேன். அவரைப் பார்த்ததும் பாவமாக இருந்தது. உள்ளே குறட்டைவிட்டு உறங்கும் ஆனந்தத்தைத் தட்டி எழுப்பி, நிம்மதி தர நிறையப் பேர் கிளம்பிவிட்டதால் போட்டி அதிகமாகிவிட்டது போலும்!

என் பக்கம் திரும்பி, ''ராஜு, நீங்களா?'' என்றார் உற்சாகமாக!

காலையில் பார்த்த வெள்ளுடைகளும், புன்ன கைகளும் கொஞ்சமும் கசங்கவில்லை. அறை முழுவதும் நல்ல வாசனை.

இந்த இரவு 9.00-ல் தம்பி ரவி கடையில் என்னை எதிர்பார்த்து அமர்ந்திருப்பான். எனக்கும் கடைக் கும் கடைசி இரவு. துக்கம் பீறிட்டது.

''சொல்லுங்கள் ராஜு, என்ன பிரச்னை?'' என்றார் ஃபிகரர் பரிவுடன்.

அவ்வளவுதான், வெடித்துவிட்டேன்.

வினோத்தும், திருப்பதியின் குடும்பமும், போத்தியும், சந்தியாவின் அண்ணன்களும், குணாவும், ஜோசப்பும் என் பேச்சில் நடமாடினார்கள். சந்தியாவின் கட்டில் அழைப்பை நான் அந்தரங்கமாகக் கருதி தவிர்த்துவிட்டதால், அவள் மட்டும் அறையுள் பிரவேசிக்கவில்லை.

என் இயலாமை, அவமானம், தொழில் தோல்வி, பழியின் பயம், காதல் தோல்வி, எதிர்காலம்பற்றிய பயம், மரண பயம்... இவற்றால் ஏற்பட்ட வெறுமை... புலம்பித் தள்ளினேன். என் துயரங்கள் 'நாளை' என்கிற ஒன்றின் வரவுக்காக மையம்கொண்டு இருக்கின்றன என்றேன்.

ஃபிகரரின் புன்னகை முடியவில்லை. ''அத்தனை துன்பங்களின் கரங்களிலும் உங்களது விசிட்டிங் கார்டு இருக்கிறது. நீங்கள் இங்கே வந்ததன் மூலம் சரியான முடிவு எடுத்திருக்கிறீர்கள். என் லீடர் ஸைட்டர் உங்களை இந்தப் பிரச்னைகளில் இருந்து காப்பாற்றுவார்.''

''அவரால் முடியுமா? நான் யாருக்கும் எவ்விதக் கெடுதலும் செய்திராதவன். எனக்குப் போய்... ஆமாம், உங்க பயிற்சி எத்தனை நாளுங்க? எனக்கு இருக்கிறது இன்னிக்கு ராத்திரி மட்டும்தான். இல்ல, பிரச்னைகளைத் தீர்க்க மாத்திரை ஏதாவது சப்ளை செய்வீங்களா... ஃபீஸ் எவ்வளவுங்க?''

''ஸைட்டரால் முடியுமாவா? நீங்கள் பாக்கியவான் ராஜு. காலத்தை வென்ற நவீன சித்தரான அவரது தரிசனம் கிடைக்க இருப்பது ஒன்றே போதும். உங்கள் கணக்கில் போதிய புண்ணியம் ஸ்டாக் இருக்கிறது என்பதை நிரூபிப்பதற்கு.''

''ஸைட்டர் எங்கே?'' இன்னோர் அறையை நோக்கி னேன். அது தாழிடப்பட்டு இருந்தது.

''அவர் இப்போது இந்த உடல்கொண்ட நோக்கத்தை நிறைவேற்றிக்கொண்டு இருக்கிறார். பிறவிப் பயன் அடைகிறார். அதாவது, தியானத்தில் இருக்கிறார்.''

''நீங்கள் ஈடுபடவில்லையா?'' என்றேன், கேலியுடன்.

''அதற்குள் நீங்கள் வந்துவிட்டீர்களே...''

அறைக் கதவு திறந்து, வெளியே வந்தார் ஸைட்டர்.

30 வயது இருக்கலாம். உறுதியான தேகம். அழகான குறுந்தாடி. கண்களில் வசீகரமும் அமைதியும்.

வணங்கினேன். ''யார் நீங்கள்... உங்கள் பெயர் ஏன் வித்தியாசமாக உள்ளது?'' என்றேன்.

மேலும், ''சாமியார் என்கிறீர்கள். எந்தப் பத்திரிகையிலும் சுய முன்னேற்றக் கட்டுரைகள் எழுதின மாதிரித் தெரியவில்லையே... எப்படி நம்புவது?'' என்றேன் சந்தேகமுடன்.

மிஸ்டு கால்! : மின்னல் ஜன்னல் தொடர்

''உட்கார்'' என்றார் ஸைட்டர். ''நாங்கள் நீண்ட காலமாக இளைஞர்களின் துயர் துடைக்கும் சித்தர் பரம்பரையினர். உடலின் நிலையற்ற தன்மையை உணர்ந்தவர்கள். உயிர் மீது போர்த்திய சட்டைதான் உடல். காலங்காலமாக இந்த லூயி பிலிப், ஆலன் ஷோலி, க்ரொக்கடைல் வகையறாக்களை அணிந்து இன்பம் தேடுகிறோம், இல்லையா? ஆன்மா ஒன்றே நிலையானது.''

ஏதோ புரிந்த மாதிரி இருந்தது.

''ஸைட்டர் என்றால் உலகத்தின் ஸைட்டுகளில், இயற்கைக் காட்சிகளில் இன்பம் தேடுபவன் என்றும், ஃபிகரர் என்றால் இறைவனால் அமைக்கப்பட்ட உலகில் வெவ்வேறு வடிவங்களை ரசிப்பவன் என்றும் பொருள். இறைவன் மகா கலைஞன். அவனது மாஸ்டர் பீஸ்களை ரசிக்க ஒரு பிறவி போதுமா?''- ஸைட்டர் விளக்கினார்.

''போதாதுதான்...'' ஒப்புக்கொண்டேன். ''மன்னியுங்கள், நான் உங்களைப் பெண்களுடன்தொடர்பு படுத்திவிட்டேன்'' என்றேன் வருத்தமுடன்.

''அந்த முக்தி விரோத ஜந்துக்களைப்பற்றிப் பேசி, லீடரின் மூடை அவுட் செய்யாதீர்கள்...'' என்றார் ஃபிகரர்.

''லீடரே, இவனோட கஷ்டங்களைக் கேட்டால், கல்லும் கரைய, கம்ப்யூட்டரும் கட்டையில் போக, புல்லும் புலம்ப, ஃபுல் ஃபார்மில் நிற்குதே துயரமே...'' என்று பாடத் துவங்க, ''டேய்...'' அலறிவிட்டேன். ''இவனை எப்படிங்க சமாளிக்கறீங்க?''

''இவ்வளவு பிரச்னைகளா... உன் வாழ்வில் இத்தனை சுவாரஸ்யங்களா?'' என்றார் ஸைட்டர். ''ஆக, உன் நாளைய தினம் நிச்சயம் இல்லை. நீ சேதம் இன்றி நாளைய தினத்தில் இருந்து வெளியே வந்தாக வேண்டும், இல்லையா?''

''ஆமாம் ஸைட்டர்'' என்றேன் பரிதாபமாக. இரவு நகர்ந்துகொண்டு இருக்கிறது. அப்புறம், விடிந்துவிடும். அப்புறம்?

''நாங்கள் கேரளாவை நோக்கிப் பயணித்தபோது, இந்தத் தோப்பூரில் இறைவனின் காட்சியை உணர்ந்து தங்கினோம். அதுவும் நல்லதாகிவிட்டது'' என்றார் ஃபிகரர். ''உனக்கு உதவ முடிகிறதே!''

ஸைட்டர் தொண்டையைச் செருமி, பேச ஆயத்தமானதும் பீதி அடைந்தேன். ராபர்ட் புரூஸ், ஆபிரகாம் லிங்கன், எடிசன், கஜினி என்றெல்லாம் பேசி, புத்தகப் புலமையைக் காட்ட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டேன். ''ஸைட்டர் ஐயா, உங்க சக்தியால என்னோட எதிர்காலத்தைக் கணிச்சுச் சொல்ல முடியுமா?''

''அதைவிட, நீயே எதிர்காலத்துக்குச் சென்று, உன் வாழ்க்கையைப் பார்க்கிறாயா?'' என்றார் ஸைட்டர்.

மிஸ்டு கால்! : மின்னல் ஜன்னல் தொடர்
ஓவியம்: ஸ்யாம்
மிஸ்டு கால்! : மின்னல் ஜன்னல் தொடர்
                            
      
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism