Published:Updated:

மிஸ்டு கால்! : மின்னல் ஜன்னல் தொடர்

மிஸ்டு கால்! : மின்னல் ஜன்னல் தொடர்

மிஸ்டு கால்! : மின்னல் ஜன்னல் தொடர்
.
மிஸ்டு கால்! : மின்னல் ஜன்னல் தொடர்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
மிஸ்டு கால்! : மின்னல் ஜன்னல் தொடர்
ஷங்கர்பாபு
ஓவியம்: ஸ்யாம்
மிஸ்டு கால்! : மின்னல் ஜன்னல் தொடர்
மிஸ்டு கால்! : மின்னல் ஜன்னல் தொடர்

முதலில் ஆழ்ந்த தூக்கம். பின் கனவுப் பாதையில் என் களைப்பற்ற பயணம் துவங்கியது. பள்ளத்தாக்குகள், நீர்வீழ்ச்சிகள், மலைகள், காடுகள், வெளிச்சம், கும்மிருட்டு, பெருங்கூட்டம், நான் மட்டும் எனக் குழப்பமான காட்சிகள். இந்தப் பயணம் ஓரிரு நொடிகளில் முடிகிறதுபோலவும், இன்னும் சில யுகங்கள் நீளும்போலவும் உணர்வுகள் ஏற்பட்டன. என்னையே ஒரு கனவாக உணர்ந்தேன். அப்புறம் பேரமைதி.

திடீரென நினைவு வந்தபோது, பதறிப்போனேன்.

என்னைக் காணவே இல்லை. என்னை உணர மட்டுமே முடிகிறதே, எங்கே நான் எனப் பரிதவித்தபோது, 14 காலண்டர்களின் ஆயுள் முடிந்திருக்கிறது என்பது நினை வுக்கு வந்தது.

அதாவது, 14 வருடங்களுக்கு முன் ஓர் இரவில் ஸைட்டரைச் சந்தித்தேன். மறு நாள் காலை 6 மணிக்குள் அவரது மந்திரச் சக்தியால் எனது சூக்கும உடல் இழுக்கப்பட்டு, எனது எதிர்காலப் பயணம் முடிவுக்கு வந்துவிடும். அதற்குள்ளாகவே நான் நிகழ்காலம் திரும்ப விரும்பினால், ஸைட்டர் உபதேசித்த மந்திரத்தை மூன்று தடவை உச்சரித்தால் போதும், நான் எனது உடலையும் நிகழ்காலத்தையும் அடைந்து விடுவேன்.

உலகின் இறுதி நாள்போல ஒரு தினத்தில் வாழ்ந்துகொண்டு இருந்த எனக்கு இப்போது புதிய பிறவி கிடைத்ததுபோல் இருந்தது. ஸைட்டர் அளித்துள்ள இந்த எதிர்காலத்தில் என் நிகழ்காலப் பிரச்னைகளின் கதி என்ன? வினோத், போத்தி, ஜோசப், சந்தியா எல்லோரும் அந்த 'நாளைய' தினத்தில் எப்படி அணுகினார்கள் என்பதை முடிந்தால் கண்டுபிடித்துவிட்டு நான் திரும்ப வேண்டும். நான் விரும்பினா லும், விரும்பாவிட்டாலும் ஸைட்டரின் மந்திரங்கள் என்னை காலை 6 மணிக்கு நிகழ்காலத்தில் சேர்த்துவிடும்.

அதற்குள் சீக்கிரம்...

இப்போதுதான் தோப்பூரின் பிரதான வீதியில் நின்று - இல்லை, அரூபமாக மிதந்துகொண்டு இருக்கிறேன். உடலின்றி இயங்குவது வேடிக்கையாக இருந்தது. நல்ல வேளை, என் உடல்தான் இல்லையே தவிர, என்னில் இருந்த 'நான்' விழிப்போடுதான் இருக்கிறேன்!

எனவே, என்னால் இயல்பாகவும் தொடர்ச்சியாகவும் சிந்திக்க முடிந்தது. ஸைட் டரின் வார்த்தைகளை நினைவுபடுத்திக்கொண்டேன். 'நீ எதிர்காலத்தைக் காண்பாய். நிகழ்ச்சிகளில் பங்குபெறவோ, உன் இருப்பை உணர்த்தவோ முடியாதே தவிர, அனைத்தையும் காண்பாய், கேட்பாய்!'

மிஸ்டு கால்! : மின்னல் ஜன்னல் தொடர்

அதை உறுதிப்படுத்தியது என் எதிரே விரிந்திருந்த தோப்பூரின் பிரதான சாலை. இந்த 14 வருட இடைவெளியில் தோப்பூரின் பளபள சாலையில் நிறைய பைக்குகள், குட்டி கார்கள், மேம்பாலங்கள், பிரமிக்கவைக்கிற நவீனக் கட்டடங்கள், ஏதோ வெளிநாடு மாதிரி இருந்தது. மக்களின் ஆடைரசனைகூட மாறியிருந்தது. இளம் பெண்கள் சுருக்கமான ஆடைகளுடன் செல்ல, "என்னமா இருக்காளுக!", "என்னமா இருக்குதுக!" என்ற வார்த்தைகள் உருவாவது தவிர்க்க இயலாதது.

இது என் ஊர்தானா?

சற்று நகர்ந்தேன். ஒன்பதாம் வகுப்பு பாடப் புத்தகத்துடன் இருந்த ஒரு சிறுவன் சாலையோரத் தானியங்கி இயந்திரத்தில் நாணயத்தைப் போட் டான். ஆணுறை பாக்கெட் வெளியில் விழ,அலட்சி யமாக எடுத்துச் சென்றான். அருகில் விளம்பரம். 'பள்ளி செல்லும் உங்கள் குழந்தைகள் காண்டங்களை எடுத்துச் செல்கிறார்களா என்பதைக் கண்காணிக் கிறீர்களா? எய்ட்ஸையும், தேவையற்ற கர்ப்பத்தையும் தடுக்க உதவுங்கள்!' திட்டம் - கற்போருக்கும் காண்டம்.

கடவுளே, இது என் ஊர்தானா? என் 22 வயதில் நான் சந்தியாவுக்கு முத்தம்கூடக் கொடுத்தது இல்லை.

பழைய பஸ் ஸ்டாண்ட். அதில் இருந்த கழிப்ப றையில் இருந்து கழிவுநீர் வெளியே ரோடு வரை பரவி இருந்ததால், கடந்து சென்றவர்கள் மூக்கைப் பொத்திச் சென்றார்கள். தமிழ்நாட்டின் பேருந்து நிலையங்களில் நவீன மற்றும் நவீனமற்ற கழிப்பிடங்களில் மூக்கின் அலறலை அலட்சியப்படுத்தி, காரியத்தைச் சாதித்துத் திரும்பிய வெற்றி வீரர்களால் மட்டுமே இந்தப் பகுதி யில் சகஜமாக நடமாட முடியும் என்ற நிலையில் இப்போதும் மாற்றம் இல்லை.

அப்பாடா, என் ஊரேதான்! எல்லாமே மாறினாலும், மாற்றமே வராத ஓரிரு விஷயங்களே மனதுக்கு நிம்மதியைத் தருகின்றன.

சற்றுத் தள்ளி, ஓர் இளைஞன் முன்னால் இளைஞர் ஒருவரிடம் "இந்த அனில்கும்ப்ளே ரோடு வழியா போனா, ஷேவாக் ஜங்ஷன் வரும். பக்கத் துல டோனி மேம்பாலம். இடது பக்கம் ஹர்பஜன் பூங்கா. ஒட்டின மாதிரி டிராவிட் சந்து. அதைத் தாண்டி சச்சின் டெண்டுல்கர் சிலை வரும். அங்கே இருந்து யுவராஜ் சிங் புதிய பஸ்ஸ்டாண்ட் வரும். காம்பீர் நகர், ரெய்னா நகருக்கு பஸ் அங்கே வரும்" என்றான்.

"என்ன இருந்தாலும், பொது மருத்துவமனைக்குத் தேசத் தியாகியோட பெயரை எடுத்துட்டு, ஒரு குட்டி கிரிக்கெட் வீரன் பெயரை வெச்சிருக்கக் கூடாதுங்க."

"பெரிசு, ஒவ்வொரு அணியும் மற்ற அணிக ளோடு ஆயிரம் லீக் மேட்ச் விளையாடி, செமி ஃபைனலுக்கு வர்ற போட்டியில, அவன் கடைசி ரெண்டு பந்துல ஒரு ரன் எடுத்து நம்ம அணியை செமி ஃபைனலுக்குக் கொண்டுபோனான். எப்படியும் கௌரவிச்சாகணுமே! நீங்க சொல்ற தியாகிக்கு கிரிக்கெட்னா என்னன்னே தெரியாதாம்ல... இந்தியாவுலதான் இருக்கீங்களா நீங்க?"

நிச்சயமாய்!

மிஸ்டு கால்! : மின்னல் ஜன்னல் தொடர்

வேடிக்கை பார்த்தவாறே நகர்ந்தேன். மாயக் காற்றாய் மனிதர்களைக் கடக்கும்போது கடவுளாக என்னை உணர்ந்தேன். மனிதர்களே, உங்களது செயல்களை அரூபமாக நான் கவனித்துக்கொண்டு இருக்கிறேன்!

யாராலும் என்னைப் பார்க்க முடியாது என்பதில் எழுந்த சந்தோஷம், ஜோசப்பின் நினை வால் ஒழிந்தது. ஏனென்றால், நான் இப்போது பார்த்துக்கொண்டு இருக்கும் உலகம், உண்மையில் என்னால் வாழ இயலாத உலகம். நான் இன்றி இயங்கப்போகும் உலகம். இந்த உலகைப்பொறுத்த வரை நான் இறந்து 14 வருடங்கள் முடிந்து இருக்கும்.

ஏனென்றால், நான் நிகழ்காலம் திரும்பியதும் ஜோசப் என்னை எப்படியும் கொல்லத்தான் போகிறான். எந்த விரக்தி, அவநம்பிக்கை, செய்வதற்கு எதுவுமே அற்ற நிலையில் ஸைட்டரைப் பார்த்தேனோ, அந்த உணர்வுகள் இப்போதும் என்னை விடவில்லை.

ஜோசப்பை அடித்திருக்கக் கூடாதோ? அவனை அடித்ததன் மூலம் என் அவசரப் புத்தியைவெளிப் படுத்திவிட்டேனோ? 'இல்லை' என்றது மனது. என் அக்கா தீபாவை யார் தவறாகப் பார்த்தாலும், பேசினாலும் சும்மா விட மாட்டேன். தவிர,'செஞ் சாச்சு. அது தப்பா இருந்தாலும்கூட, அதுல ஏதாச்சும் ஒரு சின்ன விஷயம் நல்லதா இருக்கும். அந்த நல்ல விஷயத்தைக் கண்டுபிடிச்சு எடுத்துக்கிறதுதான் புத்திசாலித்தனம்' என்பாள் அம்மா. அப்படியானால், என் அக்காவைத் தவறாகப் பேசிய ஒருவனை அடித்தேன் என்கிற ஆத்மதிருப்தியுடன் நான் இறக்கலாம். ஜோசப்பிடம் என் எதிர்ப்பை வெளிக்காட்டாமல் இருந்திருந்தால், மனதுக்குள் புழுங்கிக்கொண்டே இறந்திருப்பேன்.

இதையே... டிக்கெட் க்யூ நீளமாக இருந்தால் புலம்புவதைவிட, அருகில் நல்ல ஃபிகர் வந்து நிற்க வேண்டும் என்று பிரார்த்திப்பதுதான் புத்திசாலித்தனமானது என்பான் குணா. கண் விழிக்காத நிலை யிலேயே அவன் இறந்தும் 14 வருடங்கள் ஆகியிருக்கும். ஒருவிதத்தில் கொடுத்துவைத்தவன். எனது மரணத்தைப் பார்க்கப்போவதில்லை அவன். நண்பனின் மரணத் தைப் பார்க்க நேராத அதிர்ஷ்டசாலி அவன்.

என் ஆருயிர் நண்பன் மரணப்படுக்கையில் இருக்கிறான். அவன் அருகே இருந்து, நட்பைக் கொண்டாடி இருக்கலாம். அல்லது அம்மா அருகிலேயே இருந்து அழுது, அவள் கையால் பழைய சோறு சாப்பிட்டுஇருக்கலாம். அதைவிட்டு, எதிர்காலம் தெரிந்து என்ன செய்யப்போகிறேன்? இந்த ஸைட்டர் பயல் ஏதேதோ சொல்லி, என்னைக் குழப்பிவிட்டான்.

சொல்லப்போனால், காதல், வியாபாரம், வாழ்க்கை என எல்லாவற்றிலும் தோற்று இருட்டில் திரியும் எனக்கு ஜோசப் தரும் மரணம் எப்படிப்பட்ட டார்ச் லைட்டாக இருக்கும்! அவனால் என்னுள் ஏற்படும் விடுதலைக்கு அவனுக்கு நான் நன்றிதான் சொல்ல வேண்டும். நிகழ்காலம் திரும்பியதும் என்னைஎப்படிக் கொல்வான்? நான் அப்போது என்ன செய்யவேண்டும்? சாகும்போது அம்மா, சந்தியாவை நினைத்துக்கொள்ள வேண்டும்.

இவ்விதம் நான் என்னைத் தெம்பூட்டிக்கொள்ள முயன்றாலும் அது கைகூடவில்லை. என்னை என்னால் ஞானப்படுத்திக்கொள்ள முடியவே இல்லை.

எனவே, பார்க்கிற காட்சிகளை முழுமையாக உள்வாங்க முடியாமல் ஜோசப் மரண பயம் அளித்துக்கொண்டே இருந்தான். அப்போதுதான் பீதியில் உறைந்து, பரிபூரண விரக்தி நிலையில் - அந்தக் காட்சியைப் பார்த்தேன். கோயில் கொடை, சினிமா, பூப்புனித நீராட்டு விழா, மூலநோய் சிகிச்சை எனப் பாரபட்சமின்றி அனைத்து நிகழ்வுகளையும் அறிவித்த சுவர் ஒன்றில் ஒருவன் 'கண்ணீர் அஞ்சலி' விளம்ப ரத்தை ஒட்டியவாறு இன்னொருவனிடம் பேசுவதைப் பார்த்தேன். திடுக்கிட்டேன்.

'நினைவு அஞ்சலி' விளம்பரத்தில் இருந்தது - ஜோசப்பின் முகம்!

"ம், நேத்துதான் நடந்த மாதிரி இருக்கு, ஜோசப் செத்து 14 வருடங்கள் ஓடிப்போச்சு. இப்பக்கூட என்னால நம்ப முடியலை. ராஜு அடிச்சதும் மறு நாளே ஜோசப் செத்துப்போனதும்..."

"விவரமாச் சொல்லுண்ணே. நமக்கும் டைம் போகும்..."

"வட்டி வசூல் பண்ணப் போன இடத்துல, ஜோசப்பை ராஜு அறைஞ்சுட்டான். நாங்க ஆடிப்போய்ட்டோம். ஜோசப்பை அடிச்சுட்டு ஒருத்தன் வாழ்ந்திட முடியுமா? மறுநாள் ராஜுவைப் போட்டுத் தள்ளணும்னு பிளான். திட்டப்படி கிளம்பினோம். போற வழில..."

மிஸ்டு கால்! : மின்னல் ஜன்னல் தொடர்
மிஸ்டு கால்! : மின்னல் ஜன்னல் தொடர்