Published:Updated:

சொல்வனம் -கவிதைகள்

சொல்வனம் -கவிதைகள்

சொல்வனம் -கவிதைகள்
சொல்வனம் -கவிதைகள்
சொல்வனம் -கவிதைகள்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
சொல்வனம் -கவிதைகள்
சொல்வனம் -கவிதைகள்

சந்தர்ப்பம்

பேருந்தில்
சிதறுகிறது நாணயங்கள்
சிறிது நேரத் தேடலுக்குப் பிறகு
கிடைத்தன
சில நாணயங்கள்
தொலைந்தன
சிலர் நாணயங்கள்!

- ப.உமா மகேஸ்வரி

பழக்கம்

பொம்மை அலைபேசியைப்
பெற்றதுமே
எல்லோரையும் விலக்கி
தனியே பேசிக்கொண்டிருக்கப்
பழகிவிடுகிறது
குழந்தை!

- லதாமகன்

உபசாரம்

கோடையில்
விருந்தாளிகளாய்
குளிர்ப் பிரதேசங்களுக்குச்
செல்கிறோம்
அவை நம்மை
அழைத்து அணைத்து
உற்சாகப்படுத்துகின்றன.

குளிர் காலத்தில்
நம்மிடம் விருந்தாளிகளாய்
அவை...
நம் ஊருக்கு வருகின்றன
கதவு ஜன்னல்களை அடைத்து
மூடிக்கொண்டு அவற்றை
வீதிகளில் நிற்கவைத்துவிடுகிறோம்!

- வீ.விஷ்ணுகுமார்

நதி நனைந்த காலம்...

கொல்லைப்புறத்தின்


குழாயடியில்
திரைச்சீலையில் மறைந்தபடி
வேப்பம்பூ மணம் கமழ
குளித்ததொரு காலம்...

தோழிகளுடன்
கூட்டமாகப் போய்
குளக்கரையில் துணி துவைத்து
கரையோரக் கல்லில்
மஞ்சள் இழைத்துப் பூசியபடி
குளித்த நாட்கள் இனி மீளாது...

கடலில் மூழ்கி எழுந்தால்தான்
கல்யாணம் ஆகுமென
ஜோசியர் கூற
அலைகளுக்குப் பயந்தபடி
அம்மாவின் கால் பிடித்துக்
குளித்தது
ஞாபகமிருக்கிறது இன்னும்.

நகரத்தின் வாசத்தில்
ஒட்டிவைத்த
ஸ்டிக்கர் பொட்டுகளுக்கு நடுவே
பல்லிகளுக்கும்
கரப்பான்பூச்சிகளுக்கும்
பயந்தபடியே
குளிப்பதிலும் சுகமெனக்கு!

கார்ப்பரேஷன் தண்ணீரில்
குளோரின் நெடியடிக்கக்
குளித்துவிட்டு
கணவனின் துண்டில்
கொண்டை போட்டபடி வருவது
ஃபேஷனாகிவிட்டது
இப்போதெல்லாம்!

குளிப்பது சுகமெனினும்
கல்யாணமாகி
ஆறு மாதங்களாகியும்
இன்னும் குளிப்பதைக்
குத்திக் காட்டி
கண்ணீரில் குளிப்பாட்டுகிறாள்
மாமியார் தினமும்!

- ரேணுகா சூரியகுமார்

தெரியுமா?

இறுக மூடிய கைகளை நீட்டி
'கைக்குள்ள என்ன சொல்லு
பார்ப்போம்' என்றாள்.
கைகளைத் தொட்டுத் தடவி
இன்னதென்றேன்.
இன்னது, இன்னது என்றேன்.
ஒருவேளை இன்னதோ என்றுகூட
சொல்லிப் பார்த்தேன்.
'ஒண்ணுமே இல்லையே' என
கைகளை விரித்து
சிரித்துப் போனாள்.
ஒன்றுமே இல்லாததைத்
தொட முடிந்தது
அன்றுதான் தெரியுமா?

- பா.ராஜாராம்!

சொல்வனம் -கவிதைகள்
சொல்வனம் -கவிதைகள்
சொல்வனம் -கவிதைகள்