Published:Updated:

மிஸ்டு கால்! : மின்னல் ஜன்னல் தொடர்

மிஸ்டு கால்! : மின்னல் ஜன்னல் தொடர்

மிஸ்டு கால்! : மின்னல் ஜன்னல் தொடர்
மிஸ்டு கால்! : மின்னல் ஜன்னல் தொடர்
மிஸ்டு கால்! : மின்னல் ஜன்னல் தொடர்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
ஷங்கர்பாபு
ஓவியம்: ஸ்யாம்
மிஸ்டு கால்! : மின்னல் ஜன்னல் தொடர்
மிஸ்டு கால்! : மின்னல் ஜன்னல் தொடர்

க, ஜோசப் திட்டப்படி மறு நாள் என்னைத் தீர்த்துக்கட்டக் கிளம்பி இருக்கிறான். ஒரு கணம் இனம் புரியாத கலவரமும் பீதியும் அடைந்தேன். என்னுள் ஜோசப் விதைத்திருந்த அச்சம் தலை விரித்து ஆடியது. அங்கே இருந்து உடனே சென்றுவிட வேண்டும்போலத் தவிப்பு ஏற்பட்டது. பின், தைரியத்தை வரவழைத்துக்கொண்டு, நோட்டீஸ் ஒட்டுபவர்கள் பேசுவதைக் கவனித்தேன்.

பசை வாளியுடன் நின்றவன் நோட்டீஸ் ஒட்ட இன்னோர் இடத்தைத் தேர்வு செய்தான். ஒரு சிகரெட்டைப் பற்றவைத்து, தன் நினைவுகூர்தலைத் தொடர்ந்தான். "நாங்க அஞ்சு பேர். ஜோசப்பைச் சேர்த்து ஆறு பேர். ராஜுவைக் கொல்ல வேன்ல கிளம்பினோம். அப்ப, ஜோசப்பைப் பார்த்தப்போ..."

ஜோசப்பைப் பார்த்தபோது, அவனது கண்கள் சிவந்திருந்தன. கொட்டாவிவிட் டான். "நேத்து ராத்திரி தூக்கமே வரலடா... திரும்பத் திரும்ப ராஜு அடிச்சதே நினைவு வந்துட்டு இருந்தது. ஒருவழியா தூக்கம் வரும்போது, கிரிக்கெட் மேட்ச் நினைவு வந்துச்சு. டி.வி-யைப் போட்டேனா, அப்புறம் எங்க தூங்கறது?"

"நேத்தே தூக்கியிருக்கலாம். நீங்கதான் நிறைய வியூவர்ஸ் அவன் சாகறதைப் பாக்கணும்னு தள்ளிப்போட்டீங்க... அந்தப் பயலோட பிரியாணிக் கடைலயே அவனைச் சமாதி பண்ணிரலாம்...அண்ணே..."

"என்னடா?"

"ஹி...ஹி... கொஞ்சம் சரக்கு ஏத்திக்கலாமா?"

ஜோசப் ஒப்புக்கொண்டதும், வேன் மதுபானக் கடையின் முன் நின்றது. அனைவரும் அவசரமாக மது அருந்தி, திரும்பவும் வேனில் ஏறும்போது, ஜோசப் அந்த டி.வி-யைப் பார்த்துவிட் டான்.

டி.வி. ஷோ ரூம் ஒன்றின் கண்ணாடி வழியே தெரிந்த டி.வி-யில் கிரிக்கெட் மேட்ச் ஒளிபரப்பாகிக்கொண்டு இருக்க, ஜோசப் சற்று தள்ளாடி, அதனருகே சென்றான்.

சில நொடிகளில் ஆட்டத்தின் போக்கைத் தெரிந்துகொண்டான். அதாவது, இந்தியா வெற்றிபெற 10 ரன்கள் தேவை. இருப்பதோ ஐந்து பந்துகள். பரபரப்பான கட்டம்.

"அண்ணே, ராஜுவை வழியனுப்பி வைக்கணும்னே. நேரமாகுதுண்ணே..." என்றான் ஒரு அல்லக்கை. "கிரிக்கெட்டைப் பாத்தாலே, இப்படிச் சின்னக் குழந்தையா நின்னு வேடிக்கை பார்க்கறீங்களே..."

"இருடா... முக்கியமான கட்டம். பார்த்துட்டுப் போகலாம்..." என்றான் ஜோசப்.

"ராஜுவோட தலையை..."

மிஸ்டு கால்! : மின்னல் ஜன்னல் தொடர்

"அஞ்சே நிமிஷம்டா... இப்ப முடிஞ்சுரும். பார்த்துட்டுப் போகலாம்" என்றான் ஜோசப். அடியாட்களும் வேறு வழியின்றி, டி.வி-யின் மேட்சுக்குப் பார்வையாளராக மாறினார் கள்.

டி.வி-யில் இந்திய அணி வீரர் டென்ஷனுடன் பந்தை எதிர்கொள்ள ஆயத்தமா னார்.

ஐந்து பந்து - 10 ரன்கள்.

முதல் பந்து வீசப்பட்டது. இதில் மேற்படி வீரரின் வீரம் எடுபடவில்லை. அதாவது, ரன் எதுவும் எடுக்க முடியவில்லை.

டி.வி. ரசிகர்களின் பரபரப்பையும், வீரர் களின் பரபரப்பையும் துல்லியமாகக் காட்ட, கடைக்கு முன் வேடிக்கை பார்த்த குழுவும் அதற்கு இணையாக ஒலி எழுப்பி, பரபரப்பு அடைந்தது. கிரிக்கெட் வீரரைத் திட்டி 'ஒழுங்கா அடிடா...' என்று ஆலோசனை வழங்கிய ஜோசப், தன் முகத்தில் வழிந்த வியர்வையைத் துடைத்துக்கொண்டு, ஆட்டத்தை உன்னிப்பாகக் கவனித்தான்.

நான்கு பந்து - 10 ரன்கள்.

இப்போது இரண்டு ரன்கள் எடுக்கப்பட, எழுந்த கரவொலி சாலையில் சென்றுகொண்டு இருந்த ஒரு சவ ஊர்வலத்தில் இருந்து நான்கைந்து பேரைத் தடுத்து நிறுத்தியது. திடீர் பார்வையாளர்களாகிவிட்ட அவர்களிடம் ஜோசப் தன் பதற்றத்தை மறைத்துக்கொண்டு "எப்படியும் எடுத்துருவாங்க..." என்று நம்பிக்கை தெரிவித்து, தன்னையும் ஆசுவாசப் படுத்த முயன்றான்.

மூன்று பந்து - 8 ரன்கள்.

மட்டையாளரின், பந்து வீசுபவரின், பார்வையாளர்களின், ஜோசப்பின் - டென்ஷன். இறுதி யாத்திரையைவிட, கிரிக்கெட்டே முக்கியம் என வந்திருந்த ஒருவன் பேட்ஸ்மேனைப் பார்த்து "இவன் சொதப்பிருவான்..." என்று புள்ளி விவரங்களுடன் விளக்கினான். ஜோசப் மேலும் பரபரப்பு அடைந் தான்.

பந்து வீசப்பட, குருட்டாம்போக்கில் வீரம் வெளிப்பட, உபயம் இரண்டு ரன்கள். பார்வையாளர்கள் இதை எளிதாக ஓங்கி அடித்து இருக்கலாமே என்று அபிப்ராயப்பட்டார்கள். சிலர் அந்தப் பந்தைத் தடுத்த எதிரணி வீரரைத் திட்டினார்கள். ஓரிருவர் இந்திய வீரரும் பணம் வாங்கிஇருக்கக்கூடும் என்று சந்தேகித்தார்கள். ஜோசப் எரிச்சலுடன் "பேசாம இருங்க" என்றான்.

கடமையில் குறியாக இருந்த அடியாள் இருவர், "அண்ணே, ராஜுவை..." என்று துவங்க, ஒட்டுமொத்த பரபரப்பையும் அவர்கள் மீது கொட்டிய ஜோசப் "இப்ப முடிஞ்சிரும்டா முட்டாப் பயலுகளா..." என்றான்.

இரண்டு பந்து - 6 ரன்கள்.

ஒவ்வொரு கணமும் பரபரப் பாக நகர்ந்தன.

ஜோசப்பின் இதயத் துடிப்பு தாறுமாறாக எகிறியது. அருந்திஇருந்த போதைத் திரவமும் அவனை ஏதோ செய்ய, வியர்வையில் நனையத் துவங்கினான்.

பந்து வீசப்பட, இப்போது வீரர்கள் மூன்றாவது ரன்னுக்கு ஓடினார்கள். சிரமத்துடன் வீரன் தன் சக்தியை ஒன்றுதிரட்டி எல்லைக் கோட்டைத் தொட,மயிரி ழையில் ரன் அவுட்டில் இருந்து தப்பித்துவிட - இப்போது தேவை மூன்று ரன்கள். எங்கும் ஆரவா ரம்.

ஒரு பந்து - 3 ரன்கள்.

எதிரணி ஆலோசனை செய்ய, இருண்டுபோய் தவிப்பில் இந்திய வீரரின் முகம். உச்சகட்டப் பரபரப்பில் ஜோசப்பின் முகம். இப்போது அவன் ஏதாவது செய்ய விரும்பினான். ஆனால், உணர்ச்சிவசப்படுவதைத் தவிர, அவனால் என்ன செய்ய முடியும்? எனவே, அதைச் சிறப்பாகச் செய்தான்.

பந்து வீச்சாளர் மெள்ள பந்து வீச ஓடி வர... படிப்படியாக வேகம் பெற... அனைவரும் ஆயத்தமாக - ஜோசப்பின் இதயத் துடிப்புகணிச மாக எகிற - பந்து வீசப்பட்டது. பேட்ஸ்மேன் ஓங்கி அடிக்க - பந்து உயரமாகச் செல்ல - அரங்கமே கூச்சலிட...

ஜோசப்பும் தன் பங்குக்கு அலறி - கத்தி - 'ஆ' என்று நெஞ்சைப் பிடித்தவாறு கீழே விழுந் தான்.

பேச்சு மூச்சு இல்லை. அவன் இறந்துவிட்டான் என்பதை உணர 10 நிமிடங்கள் ஆகின.

"10 வருடங்களுக்கு முன்னாடி நடந்த மேட்ச்சை மறு ஒளிபரப்பு பண்ணியிருக்கான். அதைப் பார்த்து தேவை இல்லாம உணர்ச்சிவசப்பட்டு, இப்படி அநியாயமா உயிரை விட்டுட்டீங்களே, அண்ணே!"

"அந்த அளவு கிரிக்கெட் நம்மைக் கிறுக்குப் பயலா மாத்திஇருக்குண்ணே..." என்றான் நோட் டீஸ் ஒட்டியவன்.

"இந்தச் சம்பவத்துக்குப் பிறகு, ஜோசப் குடும்பம் மனசு மாறி, வட்டித் தொழிலை ஸ்டாப் பண்ணிட்டு, கர்த்தருக்கு ஊழியம் செய்யப் போயிருச்சு. அவன்கிட்டப் பணம் வாங்கினவங்க எல்லாரும் தப்பிச்சாங்க."

திகைத்தேன்; நம்ப முடியாமல் திணறினேன்; பரிதவித்தேன்; மிகவும் மகிழ்ந்தேன். நம்ப முடியாத மரணம். ஆனால், இந்த மானுட வாழ்வில் எதைத்தான் நம்பாமல் இருக்க முடியும்? வாழ்க்கை, சாத்தியங்களால் ஆனது என்று எட்வின் வாத்தியார் சொன்னதுதான் நினைவுக்கு வந்தது.

11 பேரும் ஆளுக்கொரு பந்தோடு கோல் போட வந்தால், அரங்கத்தில் ஒற்றை ஆளாக என்ன செய்வேன் என்று புலம்ப வேண்டியது இல்லை. மழை பெய்து ஆட்டமே நின்றுவிடவும் ஒரு வாய்ப்பு இருக்கிறது.

இது புரியாமல் முந்தின நாள் இரவு அழுதிருக்கிறேன். மரணம் வரும் முன்பே பிணக்கோலம் பூண்டு, என் தேகத்தில் நானே கற்பனைத் தீயைப் பற்றவைத்திருக்கிறேன். மொத்தத்தில், பிரச்னை யின் ஆரம்பக் கூச்சலையும், ஆரவாரத்தையும் பார்த்து ரொம்பவே மிரண்டு இருக்கிறேன்.

இனி, நான் செய்ய வேண்டியது ஒன்றும் இல்லை. நிகழ்காலம் திரும்பியதும், தெனாவட்டாக சாவு எனக்குத் துச்சம் என்றும், நான் ஒரு வீரன் என்றும் பேசிக்கொண்டு இருந்தால், பொழுது நன்கு போகும். சிறிது நேரத்தில், ஜோசப் இறந்த செய்தி வரும். புன்னகை ஒன்று என்னிடம் பிறக்கும்.

யாராலும், காரணம் அறிய முடியாத புன்னகை!

இந்த இடத்தில் ஸைட்டரின் வார்த்தைகளை நினைத்துக்கொண் டேன். அவர் சொன்னது உண்மை தான். அழுது புலம்பி, அவர் முன் நின்ற என்னிடம் "ஜோசப் நாளை இறப்பான். உன் பேன்ட்டுக்குவந்த ஆபத்து பெல்ட்டோடு போய் விடும்..." என்று சொல்லியிருந்தால் நான் நம்பி இருக்கவே மாட்டேன். என் ஆறுதலுக்காக ஏதோ பிதற்றுகிறார் என்றுதான்நினைத்திருப்பேன். நல்லவேளை, எதிர்காலம் வந்தேன்; நானே அறிந்துகொண்டேன்.

மரண பயம் நீங்கியதால் உற்சாகம்கொண்டேன். ஸைட்டர், நீ ஞானிடா! டேய், நிதானம்... ஸைட்டர் தந்த நேரம் சுருங்கிக்கொண்டே வருகிறது.

அப்போது ஒரு வட இந்திய டூரிஸ்ட் பஸ் கடந்து செல்வதை வேடிக்கை பார்த்தவன், என்னை அறியாமல் நின்றுவிட்டேன்.

இந்தச் சாலையோரம்தான் எனது 'ராஜு பிரியாணி ஷாப்' இருந்தது. இப்போது இருக்க வாய்ப்பு மிகவும் குறைவு. அநேகமாக இல்லை என்றே கூறலாம். போத்தி மறு நாள் வந்து கூரையைப் பிய்த்து எறிந்திருப்பார். என்றாலும், நப்பாசைகொண்டேன். எப்படியாவது, கடை தள்ளாடியாவது உயிர் வாழாதா?'

மிஸ்டு கால்! : மின்னல் ஜன்னல் தொடர்

என் கடை. நானே கண்டுபிடித்த 'தோப்பூர் பிரியாணி' உருவான கடை. ஓலைக் கூரை, செங்கல் சுவர், மரப் பெஞ்சுகள்... என்றாலும், எனக்கு உலகிலேயே விருப்பமான இடம்.

அந்த இடத்தை நெருங்கிப் பார்க்க விரும்பினேன். பயமாக இருந்தது. சிரமத்துடன் உண்மையை எதிர்கொள்ளும் தைரியத்தைப்பெற்று - தயங்கி - மிகவும் தயங்கி - பார்த்தேன்.

கடை இல்லை!

ஒவ்வோர் ஊரிலும் உலகமே ஒரு திறந்தவெளிக் கழிப்பறை என்ற எண்ணம்கொண்டவர்கள் ஒன்று கூடி, அவசரத்துக்குச் சிறு நீர் கழித்துச் செல்ல ஓர் இடத்தைத் தேர்வு செய்திருப்பார்கள், அல்லவா? அப்படியரு மூத்திரச் சந்தாக என் கடை இருந்த இடம் தேர்வு செய்யப்பட்டு இருந்தது!

மிஸ்டு கால்! : மின்னல் ஜன்னல் தொடர்
மிஸ்டு கால்! : மின்னல் ஜன்னல் தொடர்