திருமணம் விகடன்
விகடன் பொக்கிஷம்
Published:Updated:

மிஸ்டு கால்! : மின்னல் ஜன்னல் தொடர்

மிஸ்டு கால்! : மின்னல் ஜன்னல் தொடர்

ஷங்கர்பாபு, ஓவியம்: ஸ்யாம்
மிஸ்டு கால்! : மின்னல் ஜன்னல் தொடர்
மிஸ்டு கால்! : மின்னல் ஜன்னல் தொடர்
மிஸ்டு கால்!
மின்னல் ஜன்னல் தொடர்
மிஸ்டு கால்! : மின்னல் ஜன்னல் தொடர்
மிஸ்டு கால்! : மின்னல் ஜன்னல் தொடர்

ந்தக் குடும்பத்தின் கண்ணீரும், மகன் வயதையத்த ஒருவனின் காலில் விழ நேர்ந்த அவமானமும், அவர்களின் கெஞ்சலும் என்னைப் புரட்டியெடுத்தன. சாந்தியின் மெல்லிய விசும்பலால், நான் இப்போதே பஞ்சாயத்து நடக்கிற இடத்துக்குச் சென்று காத்துக்கிடக்கத் தயாரானேன்.

திருப்பதி குடும்பத்தினரின் கதறலை என் கால்களில் இருந்து உதற முடியவில்லை - அவர்களைப் பார்க்கும் வரை.

அவர்கள் - சந்தியாவின் அண்ணன்கள். மூன்று பேர்.

அவர்களை நான் சந்திக்க விரும்பி இருக்கிறேன். ஆனால், தற்போது என் நிலையைப் பார்த்தால், எனக்கே வெறுப்பாக இருக்கிறது. ஏறக்குறைய நொடித்துப்போன நிலை; காலையில் வீட்டிலும், எட்வின் வாத்தியாராலும் வார்த்தைகளால் அடைந்த காயங்கள், வினோத்தின் மிரட்டல், திருப்பதியின் கதறல்... இந்தக் கலவை உணர்ச்சிகள் நிச்சயமாகக் காதலியின் அண்ணன்களைச் சந்திக்க உதவுபவை அல்ல.

மிஸ்டு கால்! : மின்னல் ஜன்னல் தொடர்

என்றாலும், அவர்களை 'என் பாதி உயிரை வளர்த்து ஆளாக்கி, என்னிடம் உரிய காலத்தில் ஒப்படைக்கும் பொறுப்பை இப்பிறவியில் ஏற்றிருப்பவர்களே!' என்று வரவேற்க விரும்பினேன். உள் மனம், 'அடி பின்னிருவாங்க...' என ஓலமிட்டதால் மௌனமானேன்.

''நீதான் சந்தியா பின்னாடி சுத்தறவனா?'' என்றான் ஒருவன்.

''சுத்தலீங்க... காதலிக்கிறேன்...'' நடுத்தெரு, கொளுத்தும் வெயிலிலும் என் குரலில் காதல் பொங்கி வழிந்தது.

''நாலஞ்சு உடைஞ்ச பாத்திரங்களை வெச்சுக்கிட்டு, ஏமாந்துபோன வெளியூர்க்காரர்களுக்கு பொங்கிப்போட்டு பொழுத ஓட்டற பய நீ... உனக்கு லவ் ஒரு கேடா?''

''சமூக அந்தஸ்து, கொஞ்சம் பணம், வசதிகள்... இதுல ஏதாவது ஒண்ணை ஒரு வருஷத்துல கொண்டு வா... அப்புறம் லவ் பண்ணலாம்.''

''நடக்கற கதையா? சொல்லுடா, உன்னால முடியுமா? அதுக்கான அறிகுறி இருந்தாச் சொல்லுடா.''

தலை குனிந்து நின்றேன். அவர்களது கோணத்தில் இருந்து பார்த்தால், அவர்கள் சொல்வது சரிதான். ஆனால், காதல் ஒரு சிறப்பு உணர்வு மண்டலம். தடையற்ற கனவுகளும், கவிதைகளும், முத்தங்களும் புழங்கும் இடம். இங்கு கரன்சியைப் பேசினால், காதலர்கள் குழம்பிவிடுவார்கள்.

''உன்னைக் கல்யாணம் பண்ணா, சந்தியா பிச்சைதான் எடுக்கணும். வியாபாரம் நடந்தாதான், அதுக்குப் பேரு கடை... புரிஞ்சுதா?''

பாவிகள், சரியான விவரங்களோடுதான் வந்திருக்கிறார்கள்.

''எனக்கு நம்பிக்கை இருக்கு. நல்லபடி வருவேன்'' என முனகினேன்.

அப்போது அவன் உதிர்த்த கெட்ட வார்த்தை ஷாம்பூ பயன்பாட்டுக்கான ஆதாரப் பொருளாகும்.

''சந்தியாவும்...'' எனத் துவங்கியபோது, வீட்டைக் காவல் காக்கும் ஜீவன் அவமானப்படுத்தப்பட்டது.

''இனிமேல் சந்தியாவோடு உன்னைப் பார்த்தேன்...''

''முடியாது...'' என்று மெதுவாகத்தான் சொன்னேன்.

அடுத்த கணம் என்னை அடித்தேவிட்டார்கள்!

அறை, குத்து, மிதி... ஒருவன் தன் எல்.கே.ஜி பருவத்துக்கே சென்று யுத்த தர்மத்தை மீறி நகங்களையும், பற்களையும் பயன்படுத்தினான். துஷ்டர்கள் என் ஐம்புலன்களின் செயலாற்றலைக் குறைக்க முயன்றார்கள். பின்னால் எனக்கும், சந்தியாவுக்கும் கல்யாணமானால் அவர்கள் 'தாய் மாமன்' பட்டத்தை இழந்துவிடுவார்கள் போல் இருந்தது. ஆனால், நான் பொறுப்பு உணர்ச்சியுடன் நடந்துகொண்டு சுருண்டு படுத்தேன்.

''பிச்சைக்காரப் பயலே... உனக்கு லவ் கேக்குதா? இன்னியோட எல்லாம் முடிஞ்சது... சந்தியாவோட கால் தூசியத் தொடக்கூட உனக்கு அருகதை கிடையாது. நாளைக்கு உன்னை சந்தியாவோடு பார்த்தேன்... மவனே, தீந்த...''

நாளை!

சிரமத்துடன் எழுந்தேன். உடலெங்கும் ரத்தம்; வலி. எதிர்காலத்துடன் என்னைப் பிணைத்திருந்த இழை அறுந்து எல்லாமே நழுவிப்போனதுபோல் இருந்தது. இவர்களை மீறி, எப்படி சந்தியாவை அடையப்போகிறேன்?

மிஸ்டு கால்! : மின்னல் ஜன்னல் தொடர்

கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்டவர்களின் முதல் புகலிடம்தானே காதல்? அது என்னிடம் இருந்து பிடுங்கப்பட்டால் நான் என்ன செய்வேன்?

சந்தியாவை மீண்டும் பார்ப்பேனா என்பதே சந்தேகமாக இருந்தது. அந்த வேதனையில் கொஞ்சம் அழுதேன். பின் நொண்டியவாறு பம்ப்புக்குச் சென்று தண்ணீர் குடித்தேன்.

துக்கம் பீறிட்டு வந்தது. என் தளர்நடையும், தடுமாற்றமும், முகத்தின் வீங்கலும் நான்கைந்து பேரை விசாரிக்கவைத்தன. தேவதை பாதுகாப்புக் குழுவினர் புகுந்து விளையாடிவிட்டனர் என்றா சொல்ல முடியும்?

அவளது அண்ணன்கள் மீது எனக்குக் கோபம் வரவில்லை. என் இயலாமை, நிறைவேறாத கனவுகள், தோல்வி அடைந்த முயற்சிகள், அவர்களுக்குப் பதில் அளிக்க முடியாத மௌனம்... இவற்றின் மீதுதான் எனக்குப் பெரும் கோபம் ஏற்பட்டது. கூனிக் குறுகினேன்; தப்பிக்க விரும்பினேன்.

இந்த தினம் இரண்டு ராணிகளுடன் என்னிடம் சதுரங்கம் விளையாடுகிறது என்றால், அதற்குத் தகுந்த மாதிரி சிப்பாய்களையும் எனக்குத் தந்திருக்கும். அவர்களைத் தேடுவதுதான் புத்திசாலித்தனம் என்றது உள் மனம். ஆனால், நானோ ஆட்டத்தைவிட்டே ஓட முயல்கிறேன்.

எதிரில் வெளிநாட்டுக்காரர் ஒருவர் - அநேகமாக அமெரிக்கர் - சைக்கிளில் சந்தோஷமாகச் செல்வதைப் பார்த்தேன். இந்த ஆளுக்கு இங்கு என்ன வேலை? அவனவன் அடிபட்டுச் சாகிறான். இவன் ஊர் சுற்றுகிறான்; போட்டோ எடுக்கிறான்... பொறாமையாக இருந்தது.

நல்லதொரு கனவோடு இனிமையாகத் துவங்கிய இந்த தினத்தை என் குடும்பமும், எட்வின் வாத்தியாரும் அவ நம்பிக்கைகளால் காயப்படுத்தி இருக்கிறார்கள். வினோத் மிரட்டி இருக்கிறான். திருப்பதி கண்ணீரைத் தெளித்திருக்கிறான். சந்தியாவின் அண்ணன்கள் ஊனமாக்கி இருக்கிறார்கள். மணி பதினொண்ணுதான் ஆகிறது.

இந்தச் சக்தி இழந்த மனநிலையிலும், என் கால்கள் போத்தியின் தெருவைக் கண்டு எச்சரிக்கை அடைந்தன. போத்தி என்னும் அந்த மனிதரை நினைத்தால்... வேண்டாம். வேறொரு பாதையில் சென்றேன். இந்தத் தெருவில்தான் என் உயிர் நண்பன் குணாவின் வீடு இருக்கிறது. அது பூட்டிக்கிடந்தது.

விண்ணென்று தெறித்த வலியுடன் குழம்பியபோது செல் ஒலித்தது. ''ராஜு, நான் சந்தியா...''

புத்துயிர் பெற்றேன். அவளிடம் என்னவெல்லாமோ பேச ஆசைப்பட்டேன்.

''உடனே மேரி வீட்டுக்கு வாங்க...'' என்று கட் செய்தாள்!

 
மிஸ்டு கால்! : மின்னல் ஜன்னல் தொடர்
மிஸ்டு கால்! : மின்னல் ஜன்னல் தொடர்