Published:Updated:

மிஸ்டு கால்! : மின்னல் ஜன்னல் தொடர்

மிஸ்டு கால்! : மின்னல் ஜன்னல் தொடர்

மிஸ்டு கால்! : மின்னல் ஜன்னல் தொடர்

மிஸ்டு கால்! : மின்னல் ஜன்னல் தொடர்

Published:Updated:

மிஸ்டு கால்!
மிஸ்டு கால்! : மின்னல் ஜன்னல் தொடர்
மிஸ்டு கால்! : மின்னல் ஜன்னல் தொடர்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மிஸ்டு கால்! : மின்னல் ஜன்னல் தொடர்
 
ஷங்கர் பாபு, ஓவியம்: ஸ்யாம்
மிஸ்டு கால்! : மின்னல் ஜன்னல் தொடர்

ன் நண்பன் குணா எப்படி இவ்வளவு நேரம் நினைவுக்கு வராமல் போனான்?

மிஸ்டு கால்! : மின்னல் ஜன்னல் தொடர்

இரண்டாம் வகுப்பில் ஜனனியின் பென்சிலைத் திருடியதில் இருந்து, ப்ளஸ் டூ-வில் தையல்நாயகியைக் கடத்திச் சென்று பிரம்மச்சர்யத்தை இழக்கத் திட்டம்போட்டது வரை ஒன்றாகப் படித்தோம். அன்பானவன். எங்களுக்குள் சண்டை வந்தால், அதற்குக் காரணமாக இருக்கும் என் அல்ப குணாதிசயங்களை உடனுக்குடன் மன்னித்துவிடுவான்.

என் அக்கா தீபாவின் கல்யாணத்தில் எல்லா வேலைகளையும் இழுத்துப்போட்டுச் செய்தது அவன்தான். சந்தியாவை நான் காதலிப்பது தெரிந்ததும் ரொம்ப சந்தோஷப் பட்டான். நான்கைந்து பிரியாணி ஆர்டர்கள் பிடித்துக் கொடுத்திருக்கிறான். என் முயற்சிகளின் அஸ்திவாரத்தில் கண்ணுக்குத் தெரியாத கற்களாக குணாவின் வார்த்தை கள் கிடக்கின்றன.

இவன் உதவி செய்யாவிட்டால் நாளைக்குக் கடையில் 'கடை வாடகைக்கு' போர்டு மாட்டப்பட்டுவிடும். பரவாயில்லை, கடவுள் பஸ் ஸ்டாண்டில் பணத்தைப் பிடுங்கிக்கொண்டாலும், அறிமுகமானவரை பஸ்ஸின் ஜன்னல் ஓரம் உட்காரவைக்கிறார்.

மிஸ்டு கால்! : மின்னல் ஜன்னல் தொடர்

சந்தியாவின் அண்ணன்கள் என்னை அடித்த செய்தியைக் கேட்டால், குணா நியாயம் கேட்கக் கிளம்புவான். அவனிடம், கோபப்பட காலம் இன்னும் கனியவில்லை என்று அமைதிப்படுத்த வேண்டும்.

இவ்வளவு நேரம் என்னை போனில் தொடர்புகொள்ளாமல் இருக்க மாட்டானே... உணவு, உடை, உறைவிடம்... இந்த வரிசையில் நான்காவது அத்தியாவசியத் தேவையான, சில நேரம் முதலிடத்துக்கும் வந்துவிடுகிற தொலைக்காட்சிகளுக்கு கேபிள் இணைப்புகள் தருவதைத் தொழிலாகக்கொண்ட அவன், எந்த வீட்டிலாவது கேபிள் கோளாறைச் சரிசெய்யப் போய்விட்டானா?

குறிப்பாக, 'கொழுந்தி... இவள் வாழ்க்கையின் பூந்தி... இவள் தருவாள் சாந்தி; பரிமாறுவாள் பந்தி; சந்தோஷங்கள் வருமே நீந்தி' என்ற பாடலுடன் ஒளிபரப்பாகும் 'கொழுந்தி' தொடரின்போது ஏற்பட்ட சிறு தடங்கல்களுக்காகப் பெண்களிடம் இருந்து போனிலும், நேரிலும் வசவுகள் வந்ததை நானே கேட்டு இருக்கிறேன். என் அக்காகூட, 'என்ன குணா, சொப்னாவோட மூணாவது கல்யாணமாவது ஒழுங்கா நடக்குமா? அவளோட ரெண்டாவது காதலன் வந்து கலாட்டா செய்வானோன்னு நாங்க பதறிட்டு இருக்கற நேரத்துல டி.வி. தெரியலேன்னா, என்ன பண்றது?' என்று சண்டையிட்டு இருக்கிறாள்.

ஆமாம், அவனது தெரு வழியே சென்றபோது, அவன் வீடு பூட்டிக்கிடந்த மாதிரி... சட்டென்று போன் செய்தேன். எடுத்தவர் குணாவின் அப்பா. ''குணாவை ஆஸ்பத்திரில அட்மிட் பண்ணியிருக்கோம். ஆக்ஸிடென்ட் ஆயிருச்சுப்பா...''

அலறிவிட்டேன். இதயம் படபடத்தது... தலை சுற்றியது.

என்னைத் துரத்தும் துயரங்களின் அணிவகுப்பில் குணாவும் சிக்கிக்கொண்டானா? என் நண்பன் என்பதைத் தவிர, அவன் என்ன பாவம் செய்தான்? ஐயோ குணா, உனக்கு வலித்திருக்குமே... துடித்துஇருப்பாயே... உன்னை இந்த நிலையில் பார்க்கிற சக்தி எனக்கு எங்கிருந்து கிடைக்கும்?

ஆஸ்பத்திரியின் மருந்து வாசனை பீதியைத் தந்தது. ஓடும் என்னைக் கடந்து செல்லும் நர்ஸ்கள், ரத்தக் குப்பிகள், பேண்டேஜ் தரித்த உடல்கள், காற்றில் மிதக்கும் வலி உணர்வுகள்... ஆஸ்பத்திரிகள் வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு ஒரு கட்டடம். பெரும்பாலான இடங்களில் அது ஒரு பேருந்து நிறுத்தத்தின் அடையாளம். ஆனால், உள்ளே இருப்பவர்களுக்கோ, போதி மரக் கன்றுகள் கிடைக்கும் இடம்.

குணாவின் அப்பா, அம்மா, தங்கைகள் என்னைப் பார்த்ததும் அழ ஆரம்பித்தார்கள். விசும்பல்களுக்கு நடுவில் பைக்கில் சென்றுகொண்டு இருந்த குணாவுக்கு எப்படி விபத்து நடந்திருக்க வேண்டும் என்று வர்ணித்தவாறு அவனது அப்பா என்னை அழைத்துச் சென்றார்.

மிஸ்டு கால்! : மின்னல் ஜன்னல் தொடர்

என் உடல் நடுங்கி, வயிற்றை ஏதோ பிசைந்தது. இல்லை, குணாவுக்கு ஒன்றும் இல்லை. சில நாள் சிகிச்சைக்குப் பிறகு சரியாகிவிடுவான். எனவே, இந்தத் தீவிர சிகிச்சைப் பிரிவு போர்டைப் பார்த்து நான் பயப்படப்போவது இல்லை.

தைரியத்தை வரவழைத்துக்கொண்டு பார்த்தேன். குணா - என் உயிர் நண்பன் - சிறு சிறு டியூப்களால் பிணைக்கப்பட்டு இருந்தான். உடல் எங்கும் கட்டுகள். 'ராஜு' என்ற அவனுடைய உற்சாக அழைப்பு, அந்தச் சேதம் அடைந்த உதடுகளில் இருந்து வர வாய்ப்பே இல்லை. 'பேஷன்டைத் தொந்தரவு செய் யாதீங்க... வெளியே போங்க.'

குணாவின் குடும்பம் என் அருகில் ஆறுதல் தேடி வந்து, என் மயானச்சாயல் கொண்ட முகத்தைப் பார்த்து, பீதி அடைந்து என்னைச் சமாதானப்படுத்தத் துவங்கியது. ''ஒரு வாரத்துல சரியாயிரும்ப்பா. இதுக்குப்போய் கண் கலங்கிட்டு...''

நம்ப விரும்பினேன். உள்ளே வேதனைகளுடன் தன் உயிரை மீட்கப் போராடிக்கொண்டு இருக்கும் குணாவுக்கு எந்தவிதத்திலாவது உதவத் துடித்தேன். டாக்டர் வரவும், அவர் பின்னால் சென்றேன். ''டாக்டர், குணா எப்போ கண் முழிப்பான்?''

அவர் என்னைப்பார்த்து ''இது தேறாத கேஸ்...'' என்றார்.

குணா, பேஷன்ட், இப்போது... கேஸ்!

''அப்படீன்னா, டாக்டர்?''

''யார்றா இவன்? போய் மத்த ஏற்பாடுகளைக் கவனிப்பியா... எல்லாத்துக்கும் சொல்லி விட்டுரு...''

''பிழைக்க வாய்ப்பே இல்லியா?'' என்றேன் பலவீனமாக.

''மிஞ்சிப்போனா, இன்னிக்கு ராத்திரி வரை தாங்குனா அதிசயம். எப்ப வேணும்னாலும் மூச்சு நிக்கலாம்...''

"......"

''கண்டிப்பா நாளைக்கு...'' டாக்டர் வார்த்தைகளை முடிக்காமல் நடக்கத் துவங்கினார்.

மேலும், ஒரு நாளை!

நிலைகுலைந்துபோனேன். வெளியே வந்து, ஒரு மரத்தடியில் உட்கார்ந்தேன். அழ விரும்பினேன். என் கண்ணீரில் நானே கரைந்து மாயமாகிவிட விரும்பினேன்.

என் உலகின் வெளிச்சத்தை இருட்டு கைப்பற்றிக்கொண்டது. கும்மிருட்டில் நான் தொலைந்துபோகத் துவங்கினேன். எனது அலறல்களைக் கேட்கக்கூட யாருமற்றுப் போனதில் பெரும் பீதி அடைந்தேன்.

நிச்சயமாக நாளைக்கு குணா இருக்க மாட்டான். நாளைய உலகத்தில் நான் என் உயிர் சிநேகிதனை இழந்து மேலும் ஊனம் அடையப் போகிறேன். அவன் இல்லாத உலகத்தை எப்படி எதிர்கொள்ளப் போகிறேன்? குணா... உன்னை எரிக்கும் நெருப்பைப் பார்க்கும் சக்தி எனக்கு இல்லை.

என் மொத்த செல்களையும் யாரோ கலைத்துப் போட்ட மாதிரி இருந்தது. இப்போது துன்பங்களின் பரிசோதனைப் பிராணியாகிவிட்ட, கவலைகளால் தின்னப்பட்ட என் முகத்தைப் பார்த்தால் எனக்கே அடையாளம் தெரியாது என்று நினைக்கிறேன்.

யாரோ எழுந்து போகச் சொன்னார்கள். இருட்டத் துவங்கியிருந்தது. எங்கே போகிறோம் என்பது தெரியாமல் நடக்கத் துவங்கினேன். என்னில் அந்த ஒற்றை வார்த்தை மட்டும் தங்கியிருந்தது.

நாளை!

மிஸ்டு கால்! : மின்னல் ஜன்னல் தொடர்

வினோத், திருப்பதி, சந்தியா, சந்தியாவின் அண்ணன்கள், போத்தி, குணா...

''ராஜு... டேய் பிரியாணி!''

திரும்பிப் பார்த்தால், ஜோசப்பும் அவனது ஆட்களும்.

ஜோசப்பிடம் கருணையை எதிர்பார்ப்பது கர்நாடக, கேரள மாநிலங்கள், 'வேண்டிய அளவு தண்ணீர் எடுத்துக்குங்க... உங்களுக்குப் போகத்தான் எங்களுக்கு மீதி. பாவம், உங்க விவசாயிகளும் என்ன பண்ணுவாங்க?' என்பதற்கு நிகரானது!

 
மிஸ்டு கால்! : மின்னல் ஜன்னல் தொடர்
-
மிஸ்டு கால்! : மின்னல் ஜன்னல் தொடர்
                            
      
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism