'மனிதர்களையும்
சுமைகளையும்
சுமந்துகொண்டு
ஓடும் அது
நீளமாக இருக்கும்'
என்றேன்.
'ஒட்டகம்போல
குதிரையைப்போல என்று
சொல்லிவிட்டுப்
போக வேண்டியதுதானே'
என்றவன்
மேலும் கேட்டான்
'இன்னொரு முறை
நீ போகும்போது
என்னையும் கூட்டிக்கொண்டு
போவாயா
அந்த ரயிலைப் பார்க்க.'
சிரித்துக்கொண்டே
சரி என்றேன்.
புறப்படும் நாளில்
இலைகளையும்
தழைகளையும்
மூட்டையாகக் கட்டி
சுமந்து வந்தான்
சிறுவன்
.
எதற்கென்று
அவனைக் கேட்டேன்
'ஓடிக் களைத்து வரும்
ரயிலுக்கு உணவாக
இதை நான் கொடுப்பேன்...
நீ என்ன கொடுப்பாய்'
என்று என்னைக் கேட்டான்
நான் வெட்கத்தோடு
தலை குனிந்துகொண்டேன்!
- பாஸ்கோ பெர்னாண்டஸ்
அறிவிப்புகள்!
பெண்கள் நகை அணிந்திருந்தால்
ஜன்னல் ஓரம் உட்காராதீர்கள்.
தூங்குவதற்கு முன்னால்
ஜன்னலை இழுத்து மூடிவிடுங்கள்.
செல்போன் லேப்-டாப் போன்ற
விலை உயர்ந்த பொருட்களைப்
பெட்டியில் பூட்டிவையுங்கள்.
பூட்டப்பட்ட பெட்டியை
இருக்கையோடு
இணைத்துவையுங்கள்.
அறிமுகமற்றவர் தரும்
எந்த உணவுப் பண்டங்களையும்
உண்ணாதீர்கள்...
ரயில் நிலைய ஒலிபெருக்கியில்
அறிவித்துக்கொண்டு இருந்தார்கள்
எல்லாவற்றையும் கவனமாகக்
கேட்டுக்கொண்டான் திருடன்!
-க.பாலபாரதி
மாயக் காட்சி!
நதிக்கு மேல்
ஒரு ரயில் பாலம்
பாலத்துக்கு மேல்
செல்கிறது
இரும்பு நதி
பாலத்துக்குக் கீழ்
செல்கிறது
நீர்ம ரயில்!
- கட்டளை ஜெயா
படிக்கப் படிக்க உங்களுக்கும் கவிதை எழுதத் தோணுதா? குட்டியா... க்யூட்டா உங்க கவிதைகளை எழுதி 'சொல்வனம், ஆனந்த விகடன்,
757, அண்ணாசாலை, சென்னை-2' என்ற முகவரிக்கோ, av@vikatan.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ அனுப்புங்கள்!
|