Published:Updated:

மிஸ்டு கால்! : மின்னல் ஜன்னல் தொடர்

மிஸ்டு கால்! : மின்னல் ஜன்னல் தொடர்

பிரீமியம் ஸ்டோரி
ஷங்கர்பாபு, ஓவியம்: ஸ்யாம்
மிஸ்டு கால்! : மின்னல் ஜன்னல் தொடர்
மிஸ்டு கால்! : மின்னல் ஜன்னல் தொடர்
மிஸ்டு கால்!
மின்னல் ஜன்னல் தொடர்
மிஸ்டு கால்! : மின்னல் ஜன்னல் தொடர்
மிஸ்டு கால்! : மின்னல் ஜன்னல் தொடர்

''சாமியாரா? அப்படியானால், அவருக்கு எத்தனை நடிகைகளைத் தெரியும்?'' என்றேன் கேலியாக.

ஃபிகரர் அதைப்பற்றிக் கவலைப்படாமல், கம்பீரமாகப் பேசத் துவங்கினார். ''என் லீடர் சைட்டர் பெரும் சித்திகள் கைவரப் பெற்றவர். அபூர்வ சித்தர். ஞான மகா சமுத்திரம். காலத்தை வென்றவர். இயற்கைக்கு மாறான பல அற்புதங்களைச் செய்தவர். நடக்க இருப்பதை அறியச் செய்யும் ஆற்றல் உள்ளவர். உங்களது பிரச்னைகள் எதுவாக இருப்பினும், அவற்றில் இருந்து விடுவித்து, உங்களுக்கு நிம்மதி அளிக்கவே உருவாகி உள்ளார். வாழ்க சைட்டர்!''

மிஸ்டு கால்! : மின்னல் ஜன்னல் தொடர்

குருநாதரைப்பற்றி பிரமிப்பும் பயபக்தியும் இருந்தால் ஒழிய, ஒவ்வொரு வார்த்தையிலும் இவ்வளவு உறுதி இருக்காது. கண்கள் பெருமையில் பூரிக்காது.

''உங்க பிரச்னையில இருந்து தப்பிக்க உதவட்டுமா? குடும்பப் பிரச்னை, கடன், வியாபாரம், காதல், கள்ளக்காதல் பிரச்னைகள்... அரிய வாய்ப்பு, நல்ல சந்தர்ப்பம்.''

''இப்படி எத்தினி பேரு கிளம்பி இருக்கீங்க?'' என்றவாறு சுசீயுடன் நடக்கத் துவங்கினேன். ஃபிகரர் பின்னாலேயே வந்து, ''ராஜு, அவருடைய வயதைச் சொன்னால் ஆச்சர்யம்கொள்வீர்கள்!'' என்றார்.

''500?''

''நம்பவில்லைபோல் இருக்கிறது'' என்றவர், பாட்டு பாடினார்.

''பிட்டு இன்றி 'ஏ' படம் ஏமாற்றலாம்

ஓட்டு கேட்டவன் நாமம் சாத்தலாம்

சிட்டு அமெரிக்க ஆசையில் அண்ணா எனலாம்

பட் எங்க லீடர் சீட்டிங் செய்யாரே!''

''டேய்...'' - அலறிவிட்டேன்... ''போறியா, போலீஸ்ல புடிச்சுக் குடுக்கவா?''

''நன்று. தேவைப்படின், அணுகுங்கள். இது 24 மணி நேரச் சேவை...'' என்றவர், முகவரி சொல்லி நகர்ந்தார்.

''லூசுப் பய...'' என்றாள் சுசீ. நான் அப்படி நினைக்கவில்லை. அவரது தமிழ் வித்தியாசமாக இருந்தது. வார்த்தைகளில் 'அழைப்புக்குக் கட்டுப்படு' என்கிற கட்டளை. கண்களில் ஒருவித சுற்றுலா மனநிலை. முகத்தில் அசாதாரண அமைதி. ஆனால், ஏன் இப்படி நடந்துகொள்கிறார்? தமிழ் சினிமாவுக்குப் பாட்டு எழுத முயற்சி செய்து வாய்ப்பு கிடைக்காமல் இப்படிப் பாடுகிறாரா?

நல்லவேளை... பிரேயர் துவங்கவில்லை. சுசீக்கு டாட்டா. அப்புறம் சந்தியாவுக்காகக் காத்திருந்தேன். தன் அண்ணனின் மகளை விடுவதற்காக ஸ்கூட்டியில் வருவாளே. இன்று என்ன ஆயிற்று?

சந்தியாவும் நானும் ஒரு செல் உயிரிகளாக வாழ்ந்த காலத்தில் இருந்து, இன்று வரை புரிந்து வரும் நீண்ட செயலை இந்த உலகம் 'லவ்' என்று சுருக்கமாக அழைக்கிறது.

என் கடிகாரம் சிறந்தது அல்ல. காதலி வருகிற வரை மெள்ள ஓடுகிற அல்லது பழுதாகிப்போகிற கடிகாரம்தானே சிறந்த கடிகாரம்? தவித்துப்போனேன். இனிமேல் அவள் வர வாய்ப்பு இல்லை. போன்? இப்போது வேண்டாம். கடைக்குப் போன பிறகு பேசலாம். சந்தியாவிடம் ஃபிகரர்பற்றிச் சொல்லிச் சிரிக்க வேண்டும்.

''ராஜு...''

திரும்பினேன்.

வினோத்.

அவனுடன் பேசத் துவங்கிய ஒரு நிமிடத்தில் காறி உமிழும்படி பாரதியார்

மிஸ்டு கால்! : மின்னல் ஜன்னல் தொடர்

குழந்தைகளை தூண்டி விட்டது சரிதான் என்பது புரிந்துவிடும். அவனால் எந்தப் பொது இடத்திலும் சிறுநீர் கழிக்க இயலும். ஓட்டு கேட்டு வரும் அரசியல்வாதியிடம் 'எனக்கு என்ன தருவீங்க?'' என்று பேரம் பேச இயலும். அவனுக்கு மொத்தம் ஐந்து திருக்குறள்கள் தெரியும். அவை அவனிடம் சிக்கித் திணறும் காட்சி, தமிழ் ஆர்வலர்களிடம் கண்ணீரை வரவழைத்துவிடும்.

அவன் விரும்பிய வேலை பின்வருமாறு: காலை 8.30-க்கே விழித்தல், உண்ணல், செய்திகள் அறிதல், நண்பர்களோடு அரட்டை, சிறு ஓய்வு, மதிய உணவு, பெரும் ஓய்வு, தேநீர், பொழுதுபோக்கு, இரவு உணவுக்குப் பிறகு மனைவி மீது அன்பு செலுத்துதல், தூக்கம்.

ஆனால், வாய்த்ததோ திருப்பதி காய்கறிக் கடையில் எடுபிடி வேலை. திருப்பதி காய்கறிக் கடை என் பிரியாணிக் கடைக்கு அடுத்ததாக இருந்ததால், வினோத்தைப்பற்றி எனக்கு நன்றாகத் தெரியும்.

'மத்தவங்க எப்படியோ, நம்மளால அடுத்தவங்களுக்கு உதவி செய்யாம இருக்க முடியாது', 'நான் கஷ்டப்படறதவிடுங்க, அடுத்தவங்க முகத்துல சந்தோஷம் தெரியுதே, அது போதும்' என்றெல்லாம் ஒரு நாளைக்கு 10 தடவையாவது சொல்வதன் மூலம், இவன் ஒரு வெத்துவேட்டு என்பதை சான்றோர் அறிவர்.

காய்கறிக் கடையில் டீ வாங்க அனுப்புவார்கள். வாங்கி வரும்போதே ''ஸ்... அப்பாடா... என்னா வெயிலு, ரோட்டக் கடந்து, டீ வாங்கி, பத்திரமாக் கொண்டுவர்றதுக்குள்ள... தூசி வேற... அஞ்சு பைக் மோதப் பாத்தது. கொஞ்சம் அசந்தா, லாரிக்காரன் தூக்கியிருப்பான்.. சரி, நாம வெயில்ல அலைஞ்சா என்ன, மத்தவங்க டீ குடிக்கட்டும்'' என்பான்.

மிஸ்டு கால்! : மின்னல் ஜன்னல் தொடர்

உள்ளே இருப்பவர்களுக்குக் குற்ற உணர்வு ஏற்பட்டுவிடும்.

இதே வேலையை வேறொருவர் செய்தால், அதே வினோத், ''வெளிய சுகமாச் சுத்திட்டு வாங்க... உள்ள கெடந்து சீரழியறேன். நம்ம தலை எழுத்து அடுத்தவங்களுக்கு உதவறதுன்னே ஆகிப்போச்சு!'' என்பான்.

ஆனால், திருப்பதியின் கடையில் இருந்து அவர் அசந்த நேரத்தில் மூன்று லட்சம் ரூபாயைத் திருடியது, அவரது குடும்பத்துக்கு எப்படி உதவும் என்று தெரியவில்லை.

''கொடுத்துருடா...'' கதறினார் திருப்பதி.

''நான் எடுக்கலீங்க... ஊடுதல் காமத்துக்கு இன்பம்; அதற்கின்பம் கூடி முயங்கப் பெறின்னு வள்ளுவர்ஜி சும்மாவா சொல்லியிருக்கார்?'' என்றான் அந்தச் சமூக மாசு.

அதிர்ஷ்டவசமாக வினோத் பணத்தை எடுத்ததைப் பார்த்த ஒரே சாட்சியாக நான் இருந்தேன். எப்படி எல்லாமோ கேட்டும் வினோத் முரண்டுபிடித்ததாலும், சட்டம் தன் கடமையை ஸ்லோமோஷனில் செய்யும் என்பதாலும், பிரச்னை சுய வேலைவாய்ப்பின் கீழ் ஜட்ஜ் பதவியில் இருக்கும் மண்ணெண்ணெய் மாயாண்டியிடம் சென்றது.

ம.மாயாண்டி 1-ம் வகுப்பு வரை ஆழ்ந்து படித்தவர். வேலூர், பாளையங்கோட்டையில் சிறப்புப் பயிற்சி. விஷயம் புரியாதவர்கள் 'கட்டப் பஞ்சாயத்து' என்பார்கள். கூரிய அரிவாள்; கூரியரில் நீதி. இந்த அரிவாள் தண்டனைச் சட்டத்தை விரும்பாதவர்கூட, ம.மாயாண்டியின் தீர்ப்பின் வலிமையை ஒப்புக்கொள்வர்.

மிஸ்டு கால்! : மின்னல் ஜன்னல் தொடர்

இந்தத் திருப்பத்தை எதிர்பார்க்காததால்தான் வினோத் இப்போது என்னைத் தேடி வந்திருக்கிறான். அப்பாவித்தனமான முகம்.

''பெரிய ஆள்டா நீ... என்னமா நடிக்கற?'' என்றேன்.

''பின்ன...'' எனச் சிரித்தவன் ''நாளைக்கு நடக்கற பஞ்சாயத்துல என்னைக் காட்டிக்கொடுத்துராத ராஜு.''

''........................''

''நீ என்னைக் காப்பாத்தறியா, இல்ல நான் எடுத்த பணத்துல உனக்கும் பங்கு உண்டுன்னு ஒரு பழியை நாளைக்குச் சொல்லவா?''

நாளை!

''நாளை...'' என்ற வார்த்தை இன்றைய தினத்தில் முக்கியத்துவம் பெறத் துவங்கியது இந்த நிமிடத்தில் இருந்துதான்!

 
மிஸ்டு கால்! : மின்னல் ஜன்னல் தொடர்
மிஸ்டு கால்! : மின்னல் ஜன்னல் தொடர்
                            
      
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு