தமயந்தி

மல்லியும் ஒரு பாட்டில் பீரும்

சிறுகதை

மல்லி சிரித்துக்கொண்டாள். இந்தக் கதையை வாசிக்கும் நீங்கள்கூடத் தலைப்பை நினைத்துச் சிரிக்கலாம். பெண்கள் தண்ணியடிக்க மாட்டார்கள் என நினைக்கும் ரகத்தைச் சேர்ந்தவராக நீங்கள் இருக்கலாம். அப்படியெனில், மல்லி உங்களை நம்ப மாட்டாள்.

மல்லி யாரையும் நம்பிப் பல வருடங்கள் ஆயிற்று. 'வாகையடி முக்கில் நில்லு... வாறேன்'னு சொல்லிட்டுப் போன சந்திரன் வராமல் போன நாளில் இருந்து. அதற்காக அவள் ஒன்றும் சோர்ந்துபோகவில்லை. தெரிந்த பெண் மூலமாக வீட்டு வேலைக்குப் போனாள். மாமி, வீட்டில் இல்லாத நேரங்களில் மாமா தொட்டுப் பேசுவது இயல்பாயிற்று. ஒருநாள், 'மாமா... இப்படில்லாம் பண்ணாதீங்க' என்றதும், மாமா கொடுத்த 100 ரூபாய் நோட்டு, வீட்டு வாடகை பாக்கியைக் கொடுக்க உதவியது.

தொடுறது தப்பா? தொடுறதுக்குப் பணமும் கிடைச்சா நல்லாருக்கிற மாதிரி மல்லிக்குத் தோன்றிற்று. சாந்தாக்காவின் அறிமுகம் கிடைச்ச பிறகு, அது பெரிய பாவம் இல்லை என்று தோன்றிற்று.

''இங்க பாரு மல்லி... நமக்கு ஒரு காலணா எவனாச்சும் சும்மா கொடுப் பானா?''

நேற்றுகூட தொலைக்காட்சிப் பெட்டியில் ஒரு சாமியார் சல்லாபிப்பதைப் பார்த்து, ''பாத்தியா சொன்னேன்ல... நாமெல்லாம் சமூக சேவை செய்றோம்'' என்றாள். ஒரு மாசத்துக்கு முன்னால் வாங்கின செல்போனைக் கையில் அநாயாசமாகச் சுழற்றினாள். மல்லிக்குச் சிரிப்பாக வந்தது. தாவணி போட்ட காலத்தில் முந்தானையை இழுத்துவிட்ட பழக்கம் எல்லாம் இப்போது போயேபோச்சு.

ஜங்ஷன் பஸ் ஸ்டாண்ட்ல ஒரு கூடையோடு சாயங்காலமா நின்னாப் போதும். ஒரு ரெண்டு மூணு தடவை சுத்தி வந்துட்டு, ''என்ன, சும்மா நிக்குறியா... பேர் என்ன?''ன்னு கேப்பானுங்க. சாந்தாக்கா இருக்கே... வயசானவங்கள்ளகூட இவன் படிவான்னு லேசுல சொல்லிரும். ஆனால், இந்தக் கதை இந்த சூட்சுமமான வியாபாரம்பத்தி இல்லை. மல்லி இன்று பஸ் ஸ்டாண்டில் ஒருவனைப் பார்த்தாள்.

36, 37 வயது இருக்கும். முகத்தில் கவலையோ, கலக்கமோ ஏதோ இருந்தது. பஸ் ஸ்டாண்டுக்குள் உள்ள பிள்ளையார் கோயிலையே கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருந்தான். தலை சமீபத்தில் மொட்டை அடித்ததுபோல் இருந்தது.
''யாருக்கும் சுகமில்லையா?'' என்றாள். அவன் கேட்காத மாதிரியே இருந்தான். கை விரல்களில் காய்ப்பு தெரிந்தது. கடுமையான ஏதோ ஒரு வேலையை அவன் மேற்கொண்டு இருக்க வேண்டும். மறுபடியும் ''எதனாச்சும் பிரச்னையா?'' என்றாள். அவன் திரும்பி ஒருவாட்டி பார்த்துவிட்டு, அமைதியாகவே இருந்தான்.

வனஜா, ''என்னாடி... மீனு அகப்பட்டுருச்சா?'' என்றாள் கொட்டாவி விட்டபடி. ''இல்லனா வுடு. அப்பால பாரு. ரெண்டு அண்ணாச்சி பப்ளிக் பாத்ரூம்ல இருக்காப்லயாம். அன்பரசு மெசேஜ் பண்ணுச்சு.'' என்றாள். இங்கிலீஷில் மெசேஜ் வாசிக்கும் கர்வம் அவள் குரலில் தெரிந்தது. மல்லிக்குச் சிரிப்பு வந்தது. வனஜாவைக் குறை சொல்ல முடியாது. ஆண்களில் பாதி பேரைப் பார்த்தால் அப்படித்தான் தோன்றுகிறது.

''இல்லை... நீ வேணாப் போ.''

அவன் இதைப்பற்றி எல்லாம் கவலைப்பட்டதுபோலவே இல்லை. ஒரு சின்னத் துண்டுத் தாளில் நுணுக்கமாக எதையோ குறித்துக்கொண்டான். அவன் செல்போன் சிணுங்கிற்று. அதை வெறித்துப் பார்த்தவன், அந்தத் தாளை சட்டைப் பையில் மடித்துவைத்துவிட்டு இவளைப் பார்த்தான்.

''ஏதோ கேட்டீங்களா?'' என்றான்.

'' 'ஏதும் பிரச்னையா?'ன்னு கேட்டேன்?''

அவன் புதிராக இவளைப் பார்த்தான். ''எதுக்குக் கேக்குறீங்க?'' என்றான்.

''தெரில... கேட்டேன்.''

என்ன பதில் இது என்பதுபோல் அவன் தலையைத் திருப்பிக்கொண்டான். அவன் உடனே அந்த இடத்தைவிட்டு எழுந்து போய்விடுவான் என்று தோன்றிற்று. ஆனால், அவன் திரும்பி ''நீங்க?'' என்றான்.

''மல்லி.'' அதற்கு மேல் தன்னைப்பற்றிச் சொல்ல ஏதும் இல்லை என்பது முதல்முறையாக உறைக்க, இவளுக்குள் ஒரு தனித்த உணர்வு ஏற்பட்டது.

அவன் ''ஓ'' என்றான்.

''ஒரு மாதிரி இருக்கீக?'' என்றாள்.

''அதெல்லாம் ஒண்ணுமில்ல'' என்றவன், ''பாளையங்கோட்டைல ஆறு பேர் ஒண்ணாத் தற்கொலை பண்ணிக்கிட்டாங்களே... தெரியுமா?'' என்றான்.

''பேப்பர்ல பார்த்தேன். பாவம், சாகுறதுக்கு முன்னால வாசல்லாம் தெளிச்சுக் கோலம் போட்டிருக்காங்க'' என்றாள்.

''ம்ம்...'' என்றான் அவன்.

''உங்களுக்குத் தெரிஞ்சவங்களா?'' என்று கேட்டாள்.

''இல்ல...''

''பின்ன... ஏன் கேட்டீங்க?''

''அத வாசிச்சிட்டு மறந்துட்டீங்க இல்லியா?''

''ஆமா, ஏன்?''

அவன் கொஞ்சம் சத்தமாகச் சிரித்தபடி, ''அதான் பிரச்னையே. மறதி'' என்றான்.

''என் பெயர் கணேசன் ஆசாரி. சாதிப் பெயரைப் போடுவது எனக்குப் பிடிக்காத ஒன்று. ஆனால், இப்போது எதற்காகச் சொல்கிறேன் என்றால், சாதியை மையமாகவைத்துத்தான் தொழில் செய்ய ஒரு மனிதனுக்குச் சொல்லிக்கொடுக்கப்பட்டு இருக்கிறது'' - இது கணேசன் ஆசாரியின் வாக்குமூலம்.

இந்த வலியை இதை வாசிக்கும்போது உணரும் நீங்கள், உங்கள் வீட்டுப் பிரச்னைகளில் இதை விரைவில் மறந்துவிடுவீர்கள். அல்லது சாமியார்களின் மற்றுமோர் வீடியோ ஊடகங்களை நிரப்பும் வரை.

இப்போது மல்லியிடம் நான் சொன்ன ஆறு பேர்களின் மரணத்தை நீங்களும் வாசித்து இருப்பீர்கள். நகைத் தொழில் செய்த குடும்பத்தின் முடிவு உங்களை ஒரு நிமிடமாவது கண்டிப்பாக ஆட்டுவித்து இருக்கும். பெரிய நகை நிறுவனங்களின் வரத்து, மெஷின் நகைகளின் புழக்கத்தில் நைந்துபோனது எங்கள் வாழ்க்கைதான். 10 வயதில் பட்டறைச் சாமான் பிடித்த கை என்னுடையது. பாருங்கள்... இதில் உள்ள காய்ப்புகள் சொல்லும் என் உழைப்பை.

உழைப்பினால்தான் வீடு வாங்கினேன். என்னைச் சுற்றி எப்போதுமே நண்பர்கள், சொந்தக்காரர்கள் எல்லாருமே இருந்தார்கள். அவர்கள் என்னைச் சுற்றி இருக்கிறார்கள் என்று நினைத்தது என் தவறு. காசு இருக்கும் யாரைச் சுற்றியும் நண்பர்களும் சொந்தக்காரர்களும் இருப்பார்கள். அவர்களுக்காக நான் செலவழித்த தொகை ஒரு பக்கம் இருக்கட்டும். கணேஷ் மாதிரி வராது என்று சொன்ன என் மைனி, இன்று நேரில் பார்த்தால்கூடத் தெரியாத மாதிரி முகம் திருப்பிக்கொள்கிறாள். எனக்கும் அவளுக்கும் என்ன பகை? ஒன்றும் இல்லை. நான் ஏதும் பணம் கேட்டிருவேனோ என்ற பயமாகக்கூட இருக்கலாம்.

'அண்ணா... உங்களைப்போல் ஓர் அண்ணன் என்கூடப் பிறந்திருக்கணும். எனக்கு பஸ் பாஸ் எடுக்க வேண்டும். அப்பா உங்களிடம் கேட்டுக்கொள்ளச் சொன்னார்கள்' என்று கடிதம் எழுதிப் பணம் கேட்ட என் சித்தப்பா மகள் ராஜபாளையத்தில்தான் இருக்கிறாள். கல்யாணமாகி புருஷனை அவன் அம்மா வீட்டுக்குப் போகக் கூடாது என்று கடிவாளம் போட்டபடி.

அவள் நிச்சயதார்த்தத்துக்கு 5,000 ரூபாய் தேவைப்பட்டபோது, ஓடிப் போய் கொடுத்தது இந்த கணேஷ் அண்ணன்தான் என்று அவள் நினைப்பாளா? அல்லது அந்தக் கடிதத்தை நினைத்து, கணவனிடம் அதைப்பற்றிச் சொல்வாளா?

மாட்டாள். எல்லாத்துக்கும் காரணம் என்ன, காலமா? தெரியவில்லை. அப்படிஎனில், அவசரத் தேவைக்காக இரண்டு லட்ச ரூபாய் பணம் வேலுச்சாமியிடம் வாங்கியதும் காலத்தால்தான். யார் மேலும் குற்றமோ, பழியோ சொல்ல முடியாதபோது... காலம், விதி என்று முகமற்ற விஷயங்கள் மேல் பழி போடுவது சௌகர்யமான ஒன்று.

முதலில் 10 வட்டி என்றவனிடம் சரி என்றால், அசலில் வட்டியும், 1,500 ரூபாய் பெட்ரோல் செலவுக்காகவும், 1,000 ரூபாய் அவன் எடுபிடிக்காகவும் எடுத்துக்கொண்டான். 15 நாட்களில் போன் செய்து, ''என்ன தம்பி திருப்பித் தரலையா? அப்படின்னா, 15 நாளுக்கு ஒருவாட்டி வட்டி போட்டுக்கோ'' என வட்டி போட்டான்.

ஈரக்குலை வற்ற ரத்தம் சிந்தி வட்டி கட்டி வந்தேன். வீட்டில் பொட்டுத் தங்கம் இன்றிப்போனது. ''கடைல ஏதும் பிரச்னையா?'' என்று கேட்கும் மனைவியிடம் சிரித்து மழுப்பினேன். பேப்பரில் நகைத் தொழிலாளர்கள் ஆறு பேர் மரணம் என்ற சேதி பார்த்து, ''பாவங்க... கடைசிப் புள்ளைக்கு விஷம் கொடுக்க மனசில்லாம, சொந்தக்காரங்க வீட்டுக்கு ராத்திரியே அனுப்பிட்டாங்க பார்த் தீங்களா?'' என்றாள்.

''கந்து வட்டிக்காரங்க நெருக்கிட்டாங்களாமே... நிஜமா?'' என்றாள். என்னிடம் பதில் இல்லாமையை அவள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

ஒரு தடவை ஐந்தாம் தேதி வட்டி கட்டத் தவறியபோதுதான் வேலுச்சாமி தடதடவென காலையிலேயே ஏழு மணிக்கெல்லாம் வீட்டுக்கு வந்து, அவளிடம் நான் வட்டிக்கு வாங்கின விஷயத்தைச் சொல்லி ''உன் புருஷன் ஒழுங்கா பஜார்ல அலையணும்னா, இதுல கையெழுத்துப் போடு'' என்று வெற்றுப் பத்திரங்களில் கையெழுத்து வாங்கிக்கொண்டான்.

அன்று முழுக்க வீட்டில் சண்டைதான். ஆனால், என்ன பண்ண முடியும்? அடுத்த நாளே என் கையில் காபி டம்ளரைக் கொடுத்து, ''சீக்கிரம் அந்தாளுக்குக் குடுத்து முடிங்க'' என்றாள் என்னை நம்பி வந்தவள். அவள் கண்களின் ஈரம் என்னை உருக்கிற்று.

அந்த ஆறு பேர் குடும்பத்தில் உள்ள அந்தப் பெண், கலெக்டரிடம் வேலை கேட்டு வந்த போட்டோவைப் பேப்பரில் பார்த்துவிட்டு, இப்போது என்னை ஏதும் சொல்லாமல் கலக்கமாகப் பார்த்தாள்.

என்னைச் சுற்றி அவளும் குழந்தையும் தவிர, யாரும் இல்லாததை உணர்ந்தேன். கஷ்டப்பட்டு ஆர்டர் பிடித்தாலும், அதையும் என் சித்தப்பா, அவர் மனைவியை பார்ட்டி வீட்டுக்குப் போய் பேசி வாங்கி வரச் செய்தார். அவருக்கு கேன்சர் என்று கார்வைத்து ஆஸ்பத்திரிக்குக் கூட்டிப் போனதை அவர் நினைத்துப் பார்த்திருக்கவே மாட்டார்.

கடவுளை நொந்துகொள்வதைத் தவிர வேறு வழி இல்லை. புது வருஷம் பிறக்க சகலரும் சந்தோஷமாக இருப்பீர்கள் இல்லையா? நான், என் மனைவி, பிள்ளையோடு வேலுச்சாமிக்குப் பயந்து ரயில்வே ஸ்டேஷனில் நின்றேன். வானம் பொத்துப் பணம் கொழிக்காதா என்று தோன்றிற்று. ''வட்டி கட்டலையோ ரோட்ல வெட்டிப் போடுவேனுல...'' - வேலுச்சாமியின் குரல் எதிரொலிக்க, என்னையே அவளும் குழந்தையும் பார்த்தபடி இருந்தார்கள்.

தற்கொலை செய்துகொள்ளலாமா என்று யோசித்தேன். ஆறு பேர் ஒருவர் மேல் ஒருவர் மேல் ஒருவர் ஒருக்களித்துக்கிடந்த காட்சி கண்ணுக்குள் வந்து போனது.

''போலீசுக்குப் போலே... எல்லாம் என் ஆளுதான்!''

போனேன். அங்கும் ஒரு நல்ல அதிகாரி இருந்தார். உண்மையைப் புகாராகக் கொடுத்தேன். வேலுச்சாமியை உள்ளே வைத்தார்கள். இப்போது ஜாமீனில் வெளியே வந்துவிட்டான் என்று சொன்னார்கள்.

''எதுக்குல இப்படிப் பண்ண?''

''கண்டுக்காதேல... என்ன பண்ணா என்ன. நாங்க உன்கூட இருக்கோம்.''

ஏதுமற்ற தனிமை என்னைச் சூழ்கிறது. வீட்டை விற்கச் சொல்லி புரோக்கரிடம் சொல்லியாகிவிட்டது. இதற்கு இடையில் பேப்பரில் கந்து வட்டியை எதிர்த்தவர் குடும்பம் மேல் தாக்குதல் என்று செய்தி பார்த்தால், தயவுசெய்து அடுத்த பக்கம் திருப்பும் முன் இந்த வாக்குமூலத்தை உங்களுக்குத் தெரிந்த காவல் நிலையங்களில் கொடுங்கள்.''

எதை நினைக்கிறான் என்று தெரியவில்லை. அவன் கண்களில் நீர் வழிந்தபடி இருந்தது. சாந்தாக்கா, ''ஏட்டி மல்லி... கிராக்கி ரெண்டு பீர் வாங்கிக் கொடுத்தாம்டி. உனக்கும் எடுத்துட்டு வந்தேன்'' என்றாள்.