Published:Updated:

செம்பருத்திட் பிரதிகள் !

செம்பருத்திட் பிரதிகள் !


  நரன் கவிதைகள் படம் : ஆர்.பிரசன்னா
செம்பருத்திட் பிரதிகள் !
செம்பருத்திட் பிரதிகள் !

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
செம்பருத்திட் பிரதிகள் !

ஷீ...ன் வார்த்தைகளை கா... பேசினாள்

செம்பருத்திட் பிரதிகள் !

காலை வணக்கம் ஐயா
எங்கள் வங்கியில் இருந்து தங்களுக்கு
கடன் அட்டை வழங்குகிறோம்.
நீங்கள் விருப்பமாயிருக்கிறீர்களா?
இனிய, மென்மையான குரலில்
வினவினாள் காவ்யா.
இரண்டு மாதமாக
தங்களின் கடனட்டைத் தொகைசெலுத்தப்படவில்லை
தொகையை வட்டியோடும் அபராதத்தோடும்
உடனே செலுத்துங்கள்
காட்டமான குரலில் பேசினாள் ஷீலா ப்ரியதர்ஷன்.
ஷீ... விடுமுறையில் போயிருந்தாள்
கா... வை அவளிடத்தில் அமரவைத்தார்கள்.
ஷீ... யின் வார்த்தைகளை கா... பேசினாள்
இனிய மென்மையான குரலில்
பொம்மைத் துப்பாக்கியால்
சுட்டுடுவேன் ...சுட்டு ...டு...வேனென
தந்தையை மிரட்டும் நான்கு வயதுப் பெண் குழந்தையின்
குரல்போல் இருந்தது!

0-விலிருந்து 180

கொடிகளில் என்ன உலர்த்தப்படுகின்றன
துணிகளா?
ஈரமா?

27 வயதுப் பெண் குழந்தை

எட்டு வயதிருக்கும் பெண் குழந்தையன்று
பள்ளி ஆண்டு விழாவில்
அம்மா வேடம் போட்டிருந்தது.
ரேஷன் கடை க்யூவில்
வரிசையில் வராமல்
சட்டெனக் குறுக்கே புகுந்து
27 வயதுக்குள்
நுழைந்துவிட்டவளைப் போலிருந்தது.
நிகழ்ச்சி முடிந்ததும் மெள்ள
27 வயதிலிருக்கும் குழந்தையை
அவளின் 27 வயதுத் தாய்
கையைப் பிடித்துப்
படியின் வழியாக இறக்கி
அழைத்து வந்தாள் எட்டு வயதுக்குள்!

மலை கல்

மலையென்பது
மிகப் பெரிய கல்
என்றவனிடம்
கல்லென்பது
மிகச் சிறிய மலையென்று
விவாதித்தபடியிருந்தான்.
கேட்டுக்கொண்டேயிருந்த
வேறொருவன் சொன்னான்
அப்படியானால்
எல்லா வீடுகளும்
ஏதோ மலையடிவாரத்தில்தான்
எழுப்பப்பட்டிருக்கிறதென!

ஜெராக்ஸ் கடை

மேல்நிலைப் பள்ளியின் வாயிலிலிருக்கும்
ஜெராக்ஸ் கடைக்கு
ஒன்பதாம் வகுப்பு மாணவிகள்
நிறையப் பேர் போயினர்.
அதிலொரு ரெட்டை ஜடைக்காரி
காகிதத்தில் இருக்கும் ஒரேயரு செம்பருத்தியைப்
பிரதியெடுக்கச் சொல்லி
மொத்தம் 13 பிரதிகளைக் கையில் வாங்கி
ஆளுக்கொரு செம்பருத்தியைப்
பிரித்துக் கொடுத்தாள்.
அவர்கள் ஜெராக்ஸ் கடையிலிருந்து
நகரும்போது
12-ம் வகுப்பு விலங்கியல் படிக்கும் மாணவியருத்தி
தவளையின் குறுக்கு வெட்டுத் தோற்றத்தோடு
கடைக்காரனை அணுகினாள்.
வேறொருவன் தன் கையிலிருக்கும்
குடும்ப அட்டையைக் காண்பித்து
அவசரமாகத்
தன் குடும்பத்தை மூன்று பிரதிகளெடுத்துத்
தரச் சொன்னான்
முன்னும் பின்னுமாய்!

 
செம்பருத்திட் பிரதிகள் !
செம்பருத்திட் பிரதிகள் !