Published:Updated:

சொல்வனம்

சொல்வனம்

சொல்வனம்
சொல்வனம்
சொல்வனம்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

பாரி

புதிதாக வந்திருந்த
போக்குவரத்துக் காவலர் பெயர்பாரியாம்
செம கறாராம்
சிக்னல் ஒன்றில் காத்திருக்கையில்
பக்கத்து பயணி சொன்னார்.
பாரி துரத்திக்கொண்டு ஓடும்
சிறுமியின் கைகளிலிருந்து
சிதறியோடுகிறது பூக்கூடை.
காவல் வாகனத்தைக் கடந்து அடுத்த தெரு சந்துக்குள்
மறைகிறாள் எஞ்சிய பூக்களுடன்.
இயலாமையின் வெறுப்பில்
சிதறும் பழங்கள்
கண்ணாடி வளையல்கள்
சில விசும்பல்களைத்
தாண்டி திரும்பும்
பாரியின் வாகனம் மீது
படர்ந்துகிடந்தன முல்லைப் பூக்கள்!

-என்.வினாயகமுருகன்

அனுமதி இலவசம்

செலுத்த வேண்டிய
தவணைப் பணமும்,
செய்ய வேண்டிய
வீட்டுப் பாடங்களும்
எழுதப்படுகின்றன
சொந்தக் குறிப்புகள் எழுத
அனுமதிக்கப்படாத
மாணவர்களின்
டைரிகளில்!

-நாணற்காடன்

காதல் விடுகதை

ஒல்லி உடம்புக்காரி
கறுப்புக் கொண்டைக்காரி
உரசினால் மட்டும் தீப்பிடிப்பாள்
யார் அவள்?
என்றாய்
விடுகதையன்று கூறி.
நீதான் அவள் என்றேன்
கணப்பொழுதும்
யோசிக்காமல் நான்.
ச்சீ... அது தீக்குச்சி என
முகத்தில்
வெட்கம் வெளிச்சமிட
விடை கூறி
நீ தலை நிமிர்ந்தபோது
சற்றே உண்மையாயிற்று
என் தவறான பதிலும்!

-மாயாவி

படிக்கப் படிக்க உங்களுக்கும் கவிதை எழுதத் தோணுதா? குட்டியா... க்யூட்டா உங்க கவிதைகளை எழுதி
‘சொல்வனம், ஆனந்த விகடன்,
757, அண்ணாசாலை, சென்னை-2’ என்ற முகவரிக்கோ, av@vikatan.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ அனுப்புங்கள்!

 
சொல்வனம்
-
சொல்வனம்