பிரீமியம் ஸ்டோரி

24-06-09
ஒரு பக்கக் கதை: 'செல்'லமே 'செல்'லம்!
'செல்'லமே 'செல்'லம்!
'செல்'லமே 'செல்'லம்!
 
ஆர்.வி.ஆனந்தன்
'செல்'லமே 'செல்'லம்!
'செல்'லமே 'செல்'லம்!

'நீங்கள் அழைத்த வாடிக்கையாளர் எண் தற்போது உபயோகத்தில் உள்ளது. சிறிது நேரம் கழித்து முயற்சிக்கவும்!' - செல்போனில் வந்த பதிவு செய்யப் பட்ட பெண்ணின் குரலுக்கு மதிப்பு அளித்து, சிறிது நேரம் கழித்து முயற்சித்த 27-வது அழைப்பு அது.

கோபத்தின் உச்சியில் வெடிக்கக் காத்திருந்தான் யோகேஷ். சாஃப்ட்வேர் இன்ஜினீயர். உடன் வேலை பார்க்கும் தீபிகாவுக்கும் யோகேசுக்கும் ஆறு மாதக் காதல்.

28-வது முயற்சியில் லைன் கிடைத்து, 'எக்ஸ்கியூஸ் மீ மிஸ்டர் கந்தசாமி...' என்று ரீங்கரித்தது ரிங்டோன். தீபிகாவின், 'ஹலோ' கேட்டதும், "இவ்ளோ நேரமா யார்ட்ட பேசிட்டிருந்த?" என்று சிடுசிடுத்தான் யோகேஷ்.

"ஸாரி புஜ்ஜி... என் சித்தி பையன் நாளைக்கு மலேசியா கிளம்புறான். எனக்கு அங்கே இருந்து என்னென்ன வாங்கிட்டு வரணும்னு பெரிய லிஸ்ட் கொடுத்து, அவனை மிரட்டிட்டு இருந் தேன். அதான்டா என் ஸ்வீட் ராஸ்கல்!" - சாக்லேட்டாக உருகி வழிந்தது தீபிகா வின் குரல்.

சட்டென யோகேஷின் வார்த்தைகளில் உஷ்ணம் குறைந்தது. காதல் வார்த் தைகளில் அடுத்த அரைமணி நேரத் துக்கு கெஞ்சிக் கொஞ்சிக்கொண்டார் கள் இருவரும். தீபிகாவின் லைனைத் துண்டித்த இரண்டாவது விநாடி, யோகேஷின் செல்போன் 'தோழியா நீ காதலியா?' என்று அழைத்தது.

'செல்'லமே 'செல்'லம்!

துடித்தோடி வந்தான் யோகேஷ்.

"இவ்ளோ நேரமா யார்கிட்ட பேசிட் டிருந்த... ஸ்டுப்பிட்!?" என்று எதிர்முனை ஐஸ்க்ரீம் குரல் அதட்ட,

"ஸாரி குட்டி... என் பெரியம்மா பொண்ணு அவசரமா திருநெல்வேலி போகணும்னு சொல்லிட்டா. அதான் அங்கே இங்கேனு பேசிப் புடிச்சு டிக்கெட் ஏற்பாடு பண்ணிட்டு, 'மறக் காம இருட்டுக்கடை அல்வா வாங்கிட்டு வந்துரு'ன்னு அவளை மிரட்டிட்டு இருந்தேன். கோச்சுக்காத கண்ணம்மா..!" என்று அந்த ஐஸ்க்ரீமின் உஷ்ணத்தை யோகேஷ் குறைக்க, இங்கே தொடங் கியது இரண்டாவது காதல் கதை!

 
'செல்'லமே 'செல்'லம்!
-
'செல்'லமே 'செல்'லம்!
                            
      
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு