Published:Updated:

வெடிகுண்டு முருகேசன்! -ஒரு பக்கக் கதை

வெடிகுண்டு முருகேசன்! -ஒரு பக்கக் கதை


17-06-09
வெடிகுண்டு முருகேசன் -ஒரு பக்கக் கதை
வெடிகுண்டு முருகேசன்! -ஒரு பக்கக் கதை
வெடிகுண்டு முருகேசன்! -ஒரு பக்கக் கதை

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
 
வெங்கட்
வெடிகுண்டு முருகேசன்! -ஒரு பக்கக் கதை
வெடிகுண்டு முருகேசன்! -ஒரு பக்கக் கதை

''அண்ணே, எங்கிருந்துண்ணே இதெல்லாம் கத்துக்கிட் டீங்க?''

''ஜெயில்ல ஒரு வருஷம் இருந்தப்ப சில ஆளுங்க கத்துக் கொடுத்தாங்கடா. இந்த அசைன்மென்ட்கூட அவங்க கொடுத்ததுதான்!'' என்று சிரித்தான்.

''இது எப்படிண்ணே வேலை செய்யும்?''

''இந்த பாம் ஹைடெக் அயிட்டம். சின்ன சைஸ். ஆனா, சேதம் ஜாஸ்தி. இதை இந்த செல்போனோடு கனெக்ட் பண்ணிடணும். அந்த செல்போனுக்கு ஒரு கால் அடிச்சா போதும், அட்டெண்ட் பண்ணணும்னுகூட இல்லை... பாம் வெடிச்சிடும்!''

''சூப்பர்ணே! ஆனா, இந்த செல்போன் நம்பரை வெச்சு நம்மளை போலீஸ் கண்டுபிடிச்சிடுமே!''

''அதுக்காகத்தான் 'முருகேசன்'ங்கிற பேர்ல ஒரு டுபாக்கூர் டிரைவிங் லைசென்ஸ் ரெடி பண்ணி நேத்து இந்த ப்ரீபெய்ட் சிம்கார்டு வாங்கிட்டேன். என்னைத் தவிர, வேற யாருக்கும் இந்த நம்பர் தெரியாது!''

''அண்ணே, இது இன்னொரு சூப்பர்ணே!''

''இதைக் கொண்டுபோயி கோயிலுக்கு உள்ளாற எங்கேயாவது மறைச்சு வெச்சுரணும். வெளிய வந்து ஏதாவது பப்ளிக் பூத்ல இருந்து, ஏதாவது பேங்குக்கு போன் பண்ணி, 'உங்க கிரெடிட் கார்டு வேணும். நாளைக்குக் காலையில எனக்கு போன் பண்ணுங்க'ன்னு சொல்லி 'முரு கேசன்' செல்போன் நம்பரைக் கொடுத் துடணும். அந்த பேங்க்காரன் நாளைக்கு போன் பண்ணும்போது 'வெடிகுண்டு முருகேசன்' டமால்! நாமளும் மாட்டிக்க மாட்டோம். முருகேசன் நம்பரை நோட் பண்ணிக்கோ!''

ஒரு மணி நேரத்துக்குப் பிறகு...

''டேய், ஜாக்கிரதை..! எல்லா கனெக் ஷனும் கொடுத்துட்டேன். கால் பண்ணா வெடிச்சிடும். கிளம்பு. கோயில்ல வெச் சுட்டு, பேங்குக்கு போன் பண்ணிட்டு, டெல்லி டிரெய்னைப் பிடிக்கணும்!'' என்று அவன் சொல்லிக்கொண்டு இருந்த அதே விநாடியில்... சென்னையில் அந்த செல்போன் கம்பெனியின் மார்க்கெட்டிங் டிவிஷன் மேனேஜர், தலையில் ஹெட்போன் மாட்டியிருந்த அந்த கால் சென்டர் பெண்ணிடம்...

''மோனிஷா... இதெல்லாம் நம்மகிட்ட சமீபத்தில் ப்ரீபெய்டு கனெக்ஷன் வாங்குனவங்க லிஸ்ட். இவங்க எல்லாருக்கும் போன் பண்ணி 'போஸ்ட் பெய்ட் ஸ்கீமுக்கு மாறுறீங்களா? மூணு மாசம் வாடகை இலவசம்'னு சொல்லி, கேன்வாஸ் பண்ணுங்க. உடனே பேச ஆரம்பிச் சுடுங்க. மன்த்லி டார்கெட் பிடிக்கணும்!''

- என்று சொல்லிக்கொண்டே கொடுத்த தொலைபேசி எண்களின் பட்டியலில் முதல் பெயர் 'முருகேசன்!'

 
வெடிகுண்டு முருகேசன்! -ஒரு பக்கக் கதை
-
வெடிகுண்டு முருகேசன்! -ஒரு பக்கக் கதை