Published:Updated:

செவ்வரளி - ஒரு பக்கக் கதை

செவ்வரளி - ஒரு பக்கக் கதை

செவ்வரளி - ஒரு பக்கக் கதை

செவ்வரளி - ஒரு பக்கக் கதை

Published:Updated:

17-06-09
செவ்வரளி - ஒரு பக்கக் கதை
செவ்வரளி - ஒரு பக்கக் கதை
செவ்வரளி - ஒரு பக்கக் கதை

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

 
கே.பி.கிருஷ்ணகுமார்
செவ்வரளி - ஒரு பக்கக் கதை
செவ்வரளி - ஒரு பக்கக் கதை

"சொல்லும்மா நந்தினி... பூ போட்டுப் பார்க்கணுமா? அம்மன்கிட்ட பூ போட்டுப் பார்த்து இதுவரைக்கும் அம்பாள் சொன்னது தப்பினதே இல்ல. கொண்டாம்மா... கொண்டா"-பரமேஸ்வரக் குருக்கள் ஆராதனைத் தட்டை நீட்டியபடி, நந்தினியிடம் இருந்த இரண்டு பொட்டலங்களை வாங்கிக்கொண்டார். ஒன்றில் வெள்ளரளியும், இன்னொன்றில் சிவப்பு அரளியும் இருந்திருக்க வேண்டும்.

"உன் மனசுல இருக்கிறது நடக்கணும்னு இன்னிக்கு வெள்ளிக்கிழமை வரச் சொன் னேன். தெனமும் அம்பாளைச் சேவிக்கிற... உனக்கு நல்லதுதாம்மா நடக்கும்!"- சொல்லியவாறே ஆராதனைத் தட்டில் இரண்டு பொட்டலங்களையும் வைத்துப் பூஜித்தார். பூஜை முடித்து, ஆராதனைத் தட்டை ஏந்தியபடி வந்தவர், தரிசித்துக்கொண்டு இருந்தவர்களில் ஒரு குழந்தையை அழைத்து ஒரு பொட்டலத்தை எடுக்கச் சொன்னார். எடுத்துக் கொடுக்கவும், அதைப் பிரித்தார். துடிதுடிக்கும் இதயத்தோடு பார்த் துக்கொண்டிருந்த நந்தினியிடம் அந்தப் பொட்டலத்தில் இருந்த பூவைக் கொடுத்தார்.

செவ்வரளி!

"நடக்கும்மா... கவலையே படாதே! உன் மனசுல நீ நெனைக்கறது நடக்கும். தைரியமா போ!"- ஆசீர்வதித்து அனுப்பினார் பரமேஸ்வரக் குருக்கள்.

சந்திரசேகரன் கோபத்தின் உச்சிக்குப் போனார். தன் மகள் தனது பேச்சைக் கேட்காமல் திருமணமும் செய்துகொள்ளாமல் காலம் கழித்துக்கொண்டே இருப்பது சுத்தமாக அவருக்குப் பிடிக்கவில்லை.

"நந்தினி, நீ பண்றது சுத்த முட்டாள்தனம். உன் காதலுக்கு நான் முழுச் சம்மதம் சொன் னேன். ஆனா, சரவணனோட அம்மா-அப்பா சம்மதத்தோடுதான் பண்ணணும்கிறது மட்டும்தான் என் கண்டிஷன். ஆறு மாசம் காத்திருக்கச் சொன்னே. இப்போ ஒரு வருஷத்துக்கும் மேல ஆயிடுச்சு. இனியும் அவன் அப்பா-அம்மா கிட்ட பேசிச் சம்மதம் வாங்கு வான்னு எனக்கு நம்பிக்கை இல்லை. எங்கே போனாலும், 'உங்க பொண்ணுக்கு இன்னும் வரன் அமையலையா?'ன்னு கேட்டு என்னைக் கொல்றாங்க. நீ இன்னமும் அவனுக்காகக் காத்திருக்கறது சரியாப்படல எனக்கு!"

"அப்பா, ஏன் இப்போ டென்ஷனாகறீங்க?" பொறுமையான குரலில் சொன்னாள் நந்தினி. "இன்னிக்கு நான் அம்மன்கிட்ட பூ போட்டுப் பார்த்தேன். நான் நெனைச்சது நடக்கும்னு வந்தது. இன்னிக்கு சரவணன் அவங்கப்பாகிட்ட பேசறேன்னு சொல்லிஇருக்காரு. நல்லதே நடக்கும் கவலைப்படாதீங்க."

"ஆமா, இந்தக் காலத்துல பூ போட்டேன், மாலை போட் டேன்னு சொல்லிக்கிட்டு...'' - கோபத்தோடு மேலே பேசிக்கொண்டே போனவரைத் தடுத்தது அழைப்பு மணி.

"யார் வந்திருக்காங்கன்னு பாரு!" - அதே கோபக் குரலில் அவர் கத்த, அவர் மனைவி போய்க் கதவைத் திறந்தாள்.

ஒன்றிரண்டு பெண்கள் பூ, பழம், தேங்காய்த் தட்டுக்களோடு நின்றிருக்க, அவர்களோடு சரவணனும் இருக்க, அவன் அருகில் புன்னகையுடன் நின்றுகொண்டு இருந்தார் அவனது தந்தையான பரமேஸ்வரக் குருக்கள்!

 
செவ்வரளி - ஒரு பக்கக் கதை
-
செவ்வரளி - ஒரு பக்கக் கதை
                            
      
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism