Published:Updated:

1மெசேஜ் ரிசீவ்டு! - ஒரு பக்கக் கதை

1மெசேஜ் ரிசீவ்டு! - ஒரு பக்கக் கதை

த.ரமேஷ்.
1மெசேஜ் ரிசீவ்டு! - ஒரு பக்கக் கதை
1மெசேஜ் ரிசீவ்டு! - ஒரு பக்கக் கதை

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
ஒரு பக்கக் கதை
1மெசேஜ் ரிசீவ்டு! - ஒரு பக்கக் கதை
1மெசேஜ் ரிசீவ்டு!
1மெசேஜ் ரிசீவ்டு! - ஒரு பக்கக் கதை
1மெசேஜ் ரிசீவ்டு! - ஒரு பக்கக் கதை

'இந்த கணேஷை 20 நபர்களுக்கு ஃபார்வர்ட் செய்யவும். உடனடியாக உங்களுக்கு அதிர்ஷ்டம் அடிக்கும். உஷார்... அழித்துவிடாதீர்கள். நிச்சயம் நல்ல செய்தி உங்களுக்குக் காத்திருக்கிறது!' என்று விநாயகர் உருவம்கொண்ட படத்துடன் மனோகரன் மொபைலில் விழுந்தது அந்த எஸ்.எம்.எஸ். 'ஏதும் நல்லது நடக்காதா?' என்று ஏங்கிக்கொண்டு இருந்த நேரத்தில் இப்படி ஒரு குறுஞ்செய்தி. 'அதை அழித்துவிட வேண்டாம்!' என்று எச்சரிக்கை வேறு. அதை மீண்டும் மீண்டும் படித்துப் பார்த்தான். படிக்கப் படிக்க மனசில் ஒரு குறுகுறு. 'இது உண்மைதானா... நம்பலாமா?' என்று அந்த குறுஞ்செய்தி அனுப்பிய நண்பனுக்கு ஒரு எஸ்.எம்.எஸ். தட்டினான். 'நம்பலாம் என்றுதான் எனக்கு அனுப்பியவன் சொன்னான். அவனுக்கு அவன் லவ்வர் 'ஓ.கே.' சொன்னாளாம்!' - பீப்பியது பதில்.

முன்பெல்லாம் கைரேகை பார்த்து ஜோசியம் சொன்னார்கள். இப்போது செல்போனில் சொல்கிறார்கள். ஹ்ம்ம்... வேலையில்லாத வெட்டி ஆபீஸராக நேரத்தைக் கடத்த ஊருக்கு வெளியே இருந்த பூங்காவில் படுத்து வானத்தைப் பார்த்துக்கொண்டு இருந்தவனுக்கு டீ குடிக்கலாம் போலத் தோன்றியது. பூங்கா வாசலில் டீக்கடையைப் பார்த்தது நினைவுக்கு வந்த அதே நேரம்... பாக்கெட்டில் இருந்த ஒண்ணே முக்கால் ரூபாயும் நினைவுக்கு வந்தது. 'ச்சே... சிங்கிள் டீக்குக்கூட வக்கில்லாத இந்தியனாகத் திரிகிறோமே!' என்ற கழிவிரக்கம் தூண்ட... எதையாவது உடனடியாகச் சாதிக்க வேண்டும் என்ற வெறி எழுந்தது.

பாக்கெட்டில்தானே காசில்லை. செல்போனில் இருக்கிறதே! நடப்பது நடக்கட்டும் என்று அந்த கணேஷ் எஸ்.எம்.எஸ்ஸை 20 நண்பர்களுக்கு அனுப்ப முடிவு செய்தான். ஒரு குறுஞ்செய்திக்கு 50 பைசா. கலங்காமல், தயங்காமல் 22 நண்பர்களுக்கு அனுப்பிவிட்டுத்தான் ஓய்ந்தான்.

ஆயுளின் இன்னொரு அரை மணி நேரம் தேய, 'சம்போ சிவ சம்போ' என அலறியது அலைபேசி. 'வினோத் காலிங்!' ''சொல்றா பங்காளி!'' என்றான் மனோகரன். ''டேய்! உன் வேலைக்கு எனக்குத்

1மெசேஜ் ரிசீவ்டு! - ஒரு பக்கக் கதை

தெரிஞ்ச மில் ஓனர்கிட்ட பேசியிருக்கேன்னு சொல்லியிருந்தேன்ல. அவர் இப்ப உன்னை உடனே கூப்பிடச் சொன்னாருடா. உன் மொபைல் நம்பரை அவர் பி.ஏ-கிட்ட கொடுத்திருக்கேன். தெரியாத நம்பர்ல இருந்து கால் வந்தா எடுக்க மாட்டாங்க. உன் மொபைல்ல இருந்து கூப்பிடு. அவர் நம்பரை உனக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பியிருக்கேன்டா. டேய்! அவரை இந்தப் பத்து நிமிஷ டீ பிரேக்லதான் பிடிக்க முடியும். உடனே, கூப்பிடுடா. நான் அப்புறமாக் கூப்பிடுறேன்!'' பட்டென்று கட் செய்தான். அடுத்த இருபதாவது நொடியில் குறுஞ்செய்தியாக வந்து விழுந்தது மில் ஓனரின் நம்பர். ஓனர் பெயர் கணேஷ். 'ஆஹா! கணேஷ் எஸ்.எம்.எஸ். ராசிடோய்!'
சட்டென்று ரத்த ஓட்டம் அதிகரிக்க, இதயம் படபடக்க... செல்போனில் மில் ஓனர் நம்பரை டயல் செய்தான்.

ஹஸ்கியான ஒரு பெண் குரல், 'உங்கள் அக்கவுன்ட்டில் மிச்சம்இருக்கும் தொகை 37 பைசா. இந்த அழைப்பை கனெக்ட் செய்ய உடனடியாக ரீ-சார்ஜ் செய்யவும்' என்றது!

 
1மெசேஜ் ரிசீவ்டு! - ஒரு பக்கக் கதை
1மெசேஜ் ரிசீவ்டு! - ஒரு பக்கக் கதை